சோமாலிப் பிரதேசம்
சோமாலிப் பிரதேசம் (Somali Region)[2][3]கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டின் கிழக்கில் அமைந்துள்ளது. இது ஒரோமியாவிற்கு, பரப்பளவில் இரண்டாவது பெரிய பிரதேசம் ஆகும். [4] சோமாலிப் பிரதேசத்தின் தலைநகரம் ஜிஜிகா நகரம் ஆகும்.[5]சோமாலிப் பிரதேசத்திற்கு என தனி சட்டமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் ஆளுநர் உள்ளனர்.
சோமாலிப் பிரதேசம்
Dawlad Deegaanka Soomaalida Soomaali Galbeed | |
---|---|
பிரதேச மாகாணம் | |
அடைபெயர்(கள்): DDS | |
எத்தியோப்பியாவின் கிழக்கில் சோமாலிப் பிரதேசத்தை காட்டும் வரைபடம் | |
நாடு | எத்தியோப்பியா |
தலைநகரம் | ஜிஜிகா |
அரசு | |
• ஆளுநர் | முஸ்தபா முகமது ஒமர் |
• துணை ஆளுநர் | இப்ராகிம் ஒஸ்மான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 328,068 km2 (1,26,668 sq mi) |
• நிலம் | 328.068 km2 (126.668 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 2-வது |
மக்கள்தொகை (2018) | |
• மொத்தம் | 12.5 மில்லியன் |
இனம் | சோமாலி |
நேர வலயம் | ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்கா நேரம்) |
இடக் குறியீடு | +251 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ET-SO |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019) | 0.433[1] low • 10th of 11 |
அமைவிடம்
தொகுசோமாலிப் பிரதேசத்திற்கு வடமேற்கில் அபார் பிரதேசம், மேற்கில் ஒரோமியா பிரதேசம் மற்றும் திரே தாவா நகரமும், வடக்கில் திஜி பௌட்டி மற்றும் சோமாலிலாந்து நாடுகளும், கிழக்கிலும், தெற்கிலும் சோமாலியாவும், தென்மேற்கில் கென்யாவும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. [6]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2007-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சோமாலிப் பிரதேசம் 74,45,219 மக்கள் தொகை கொண்டிரந்தது. அதில் ஆண்கள் 3,472,490 மற்றும் பெண்கள் 3,972,729 ஆக இருந்தனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 20.9 பேர் வீதம் வாழ்ந்தனர். மக்கள் தொகையில் 80% கால்நடைகள் மேய்க்கும் நாடோடிப் பழங்குடியினர் ஆவார். இப்பிரதேச மக்களில் சோமாலி மக்கள் 99.2%, ஒரோமியா ம்க்கள் 0.46%, வெளிநாட்டில் பிறந்த சோமாலி மக்கள் 0.20% மற்றும் பிறர் 0.08% ஆக உள்ளனர். 2017-ஆம் ஆண்டில் சோமாலிப் பிரதேசத்தின் மக்கள் தொகை 1,17,48,998 ஆக உயர்ந்துள்ளது.[7]சோமாலிப் பிரதேசத்தில் 8 பெரிய அகதிகள் முகாம்களும், ஒரு அகதிகள் இடைநிலை மையமும உள்ளது. சோமாலியா நாட்டிலிருந்து வந்த 212,967 சோமாலிய அகதிகளுக்கு இப்பிரதேசத்தில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ள்து.
மொழிகள்
தொகுஇப்பிரதேசத்தில் சோமாலி மொழி 99.92% மக்களால் பேசப்படுகிறது. ஒரோமோ மொழி 0.07% மக்களாலும், அம்காரியம் 0.1% மக்களாலும் பேசப்படுகிறது.
சமயம்
தொகுசோமாலிப் பிரதேசத்தில் சன்னி இசுலாம் சமயத்தை 99.4% மக்களால் பயிலப்படுகிறது. 0.50% மக்கள் பழைமைவாத கிறித்துவமும், 0.10% மக்கள் பிற கிறித்துவப் பிரிவுகளை பயில்கின்றனர்.[8]
வேளாண்மை
தொகுஇப்பிரதேச மக்கள் ஆடுகள், கழுதைகள், ஒட்டகங்கள் போன்ற 1, 459,720 கால்நடைகளைக் கொண்டுள்ளனர். இது எத்தியோப்பிவின் மொத்த கால்நடைகளில் 10.19% ஆகும். கால்நடைகளை மேய்க்கும் மக்கள் அதிகம் கொண்டதால் வேளாண்மை இப்பிரதேசத்தில் குறைவே ஆகும்:[9]
நிர்வாக மண்டலங்கள்
தொகுசோமாலிப் பிரதேசம் நிர்வாக வசதிக்காக 11 நிர்வாக மண்டலங்களாகவும், 3 சிறப்பு நிர்வாக மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.[10]இந்த மண்டலங்கள் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- அப்தெர் மண்டலம்
- டொல்லோ மண்டலம்
- எர்ரெர் மண்டலம்
- பாபன் மண்டலம்
- ஜாரர் மண்டலம்
- கொராகி மண்டலம்
- லிபென் மண்டலம்
- நொகோப் மண்டலம்
- சாபெல்லே மண்டலம்
- சிட்டி மண்டலம்
- தேஜ்ஜிகாப்பூர் மண்டலம்
- கோட் சிறப்பு மண்டலம்
- அவ்பார் சிறப்பு மண்டலம்
- கேப்பிரி பெய்யா சிறப்பு மண்டலம்
- தோக் வாஜலே சிறப்பு மண்டலம்
எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
தொகுநகரங்கள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
- ↑ "Country Facts | Somalia". www.un.int. பார்க்கப்பட்ட நாள் 2020-02-05.
- ↑ "Itoobiya oo laga xusay guushi Karamardha ee 1977-kii". BBC News Somali (in சோமாலி). 2020-03-06. பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
- ↑ "Ethiopia Regions, Cities, and Population". www.ethiovisit.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
- ↑ "April 1994 Monthly Situation Report" United Nations Emergencies Unit for Ethiopia (accessed 29 May 2008)
- ↑ "Registered Somali Refugee Population". The UN Refugee Agency. July 31, 2014. Archived from the original on September 8, 2015. பார்க்கப்பட்ட நாள் October 16, 2012.
- ↑ Population Projection of Ethiopia for All Regions At Wereda Level from 2014 – 2017. Federal Democratic Republic of Ethiopia Central Statistical Agency. Archived from the original on 6 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
{{cite book}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ " Census 2007 Tables: Somali Region" பரணிடப்பட்டது 2012-03-10 at the வந்தவழி இயந்திரம், Tables 2.1, 2.5, 3.1, 3.2, 3.4
- ↑ "CSA 2005 National Statistics" பரணிடப்பட்டது 2008-11-18 at the வந்தவழி இயந்திரம், Tables D.4 - D.7.
- ↑ "Ethiopia: Somali Region Administrative map (as of 05 Jan 2015)". OCHA. 5 January 2015. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
மேலும் படிக்க
தொகு- Tobias Hagmann, "Beyond clannishness and colonialism: understanding political disorder in Ethiopia's Somali Region, 1991- 2004", Journal of Modern African Studies, 43 (2005), 509–536.
- Abdi Ismail Samatar (2004): "Ethiopian Federalism: Autonomy versus Control in the Somali Region". Third World Quarterly, Vol. 25/6
- John Markakis (1996): "The Somali in Ethiopia". Review of African Political Economy, Vol. 23, No. 70, pp. 567–570
- John Markakis (1994): "Briefing: Somalia in the New Political Order of Ethiopia". Review of African Political Economy, Vol. 21, No. 59 pp. 71–79
வெளி இணைப்புகள்
தொகு- Map of Somali Region at UN-OCHA[தொடர்பிழந்த இணைப்பு]
- Map of Somali Region at DPPA of Ethiopia (PDF file)
- List of Ogaden-Somali Members of Ethiopian Parliament
- Official Website of Ogaden-Somali region of Ethiopia
- "Ethiopia: Rains pound Somali region as death toll rises" - UN IRIN
- "Floods plague Horn of Africa, wash away refugee shelters" - UN News