கிழக்கு ஆபிரிக்கா

ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதி
(கிழக்கு ஆப்பிரிக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிழக்கு ஆபிரிக்கா என்பது ஆபிரிக்கக் கண்டத்தின் கிழக்கு பிரதேசத்தில் உள்ள நாடுகளை கொண்ட பெருப் பிரதேசமாகும். ஐநாவின் துணைப் பிரதேசங்களின் வகையீட்டின் படி, 19 நாடுகள் இப்பிரதேசத்தில் அடங்குகிறது.

  கிழக்கு ஆபிரிக்கா
  சில வேளைகளில் கிழக்கு அப்பிரிக்காவில் இணைக்கப்படும் நாடுகள்

புவியியல் அமைவின் அடிப்படையில், சில சந்தர்ப்பங்களில் எகிப்து மற்றும் சூடான் இப்பிரதேசத்தில் சேர்ககப்படுகிறது.

புவியியல்

தொகு

கிழக்கு ஆபிரிக்க பிரதேசங்கள் அவற்றின் விலக்கு பல்லின தன்மைக்கு பிரசித்தமானவை. முக்கியமாக யானைகள், நீர் யானைகள், சிங்கங்கள், ரைனோசரஸ்கள் சிறுத்தைகள் என்ற ஐந்து பெரிய விலங்களுக்கு பிரசித்தமானவை.

புவியியல் அமைப்பானது மிக கவர்ச்சியானதாகும். இங்கு ஆபிரிக்காவின் உயரமான மலைகள் இரண்டான கிளிமஞ்சாரோ மலை மற்றும் கென்யா மலை என்பன காணப்படுகிறது.

இப்பிரதேசத்தில் புவியியல் அமைப்பானது விவசாயத்துக்கு மிகவும் உகந்த்தாகும். இது 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை பெற்று அந்நாடுகள் காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது. இன்று கென்யா, உகாண்டா, தன்சானியா போன்ற நாடுகளில் உல்லாச பிரயாணத்துறை முக்கிய வருவாயை கொடுக்கிறது.

அரசியல்

தொகு

இப்பிரதேசமானது, அண்மைக் காலம் வரை பல அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வந்தது. ஆட்சி கைப்பற்றல்கள், இராணுவ ஆட்சி போன்ற பல அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வந்தது. காலனித்துவ ஆட்சிக்குப்பின் இப்பிரதேசங்களில் ஏற்பட்ட சில நிகழவுகள்:

கென்யா மற்றும் தன்சானியா பொதுவில் சீரான அரசுகளை கொண்டிருந்த்து.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_ஆபிரிக்கா&oldid=1496406" இலிருந்து மீள்விக்கப்பட்டது