திட்டக் கரைசல் (வேதியியல்)

பகுப்பாய்வு வேதியியல், திட்டக் கரைசல் (Standard solution) என்பது ஒரு தனிமம் அல்லது ஒரு பொருளின் துல்லியமாக அறியப்பட்ட செறிவைக் கொண்ட கரைசல் ஆகும். அறியப்பட்ட எடையை உடைய கரைபொருளானது குறிப்பிட்ட கன அளவுக்கான கரைசலைப் பெற கரைக்கப்படுகிறது. ஒரு நிலையான தரநிலையைப் பயன்படுத்தி திட்டப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பருமனறிப் பகுப்பாய்வில் தரம் பார்த்தலைப் பயன்படுத்தி மற்ற செறிவு தெரியாத கரைசலின் செறிவை அறிய திட்டக்கரைசல்கள் பயன்படுத்தப்படுகின்றன. திட்டக் கரைசல்களின் செறிவானது இயல்பாக மோல்/லிட்டர் என்ற அலகில் குறிக்கப்படுகிறது. கரைசலின் செறிவைக் குறிப்பிடும் இந்த முறை மோலாரிட்டி என அழைக்கப்படுகிறது. இந்த அலகு வேறுவிதமாக மோல்/டெமீ3,  கிலோமோல்/மீ3 அல்லது குறிப்பிட்ட தரம் பார்த்தலுக்குத் தொடர்புடைய பதங்களில் குறிப்பிடப்படுகிறது.

ஒரு எளிய திட்டக் கரைசலானது ஒரு தனித்த தனிமம் அல்லது பொருளை அது கரையக்கூடிய கரைப்பானில் கரைத்து பெறப்படுகிறது.

பயன்கள்

தொகு

ஒரு தெரிந்த கன அளவு கொண்ட அமிலக் கரைசலானது செறிவு தெரிந்த காரக் கரைசலுக்கு எதிராக தரம் பார்த்தலின் மூலமாக தரப்படுத்தப்படலாம். திட்டக் கரைசல்கள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டிய மாதிரி ஒன்றின் செறிவை நிர்ணயிக்க பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.  குறிப்பிட்ட அலைநீளமுள்ள அலையைப் பொறுத்து, ஒரு மாதிரிக் கரைசலின் உட்கவர் தன்மையை வெவ்வேறு திட்டக் கரைசல்களுடன் தரம் காணப்பட வேண்டிய மாதிரிப்பொருளின் வெவ்வேறு தெரிந்த செறிவுகள் கொண்ட கரைசல்களுடன் ஒப்பிட்டு மாதிரிக் கரைசலின் செறிவானது பீர் விதியைக் கொண்டு கண்டறியப்படுகிறது.  செறிவு தெரியப்பட வேண்டிய மாதிரிப் பொருளானது போதுமான அளவு நிறமாலையின் அலைகளை உறிஞ்சக்கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தால் எவ்வகை நிறமாலையியலையும் இதே போன்ற முறையில் பயன்படுத்தலாம்.  பெயர் தெரியாத மாதிரிகளைக் கொண்டுள்ள கரைசல்களின் மோலாரிட்டியைக் கண்டறிய திட்டக் கரைசலானது ஒரு வழிகாட்டிக் குறிப்பாக உள்ளது. திட்டக்கரைசலின் செறிவைக்  கண்டறிய பருமனறிப் பகுப்பாய்வைப் பயன்படுத்தலாம். இவை பியூரெட்டு போன்ற சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்கின்றன.

பண்புகள்

தொகு

தரம் பார்த்தலுக்கான திட்டக் கரைசலின் பண்புகள்:[சான்று தேவை]

  1. இக்கரைசலின் செறிவு மாறாததாக இருக்கும்.  மறு தரம்பார்த்தலுக்கான தேவை இதன் காரணமாக எழாமல் போகிறது.
  2. தரம் பார்க்கப்பட வேண்டிய பொருளுடனான வினை ஒவ்வொரு வினைபொருளை சேர்த்த பின்னும் காத்திருக்கும் காலத்தைக் குறைவானதாகக் கொண்டிருக்கும் அளவிற்கு வேகமானதாக இருக்க வேண்டும்.
  3. இக்கரைசலின் வினை போதுமான அளவிற்கு முடிவுறும் தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
  4. தரம்பார்த்தலில் ஈடுபடும் கரைசல்களின் சமன்படுத்தப்பட்ட வேதிவினையினால் குறிக்கப்பட இயலக்கூடியதாக இருக்க வேண்டும்.
  5. வினையின் இறுதி நிலையை கண்டறிய ஒரு முறை இருக்க வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு

Freiser, Henry; Nancollas, George H (1987). Compendium of Analytical Nomenclature: Definitive Rules 1987. Oxford: Blackwell Scientific Publications. பக். 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-632-01907-7.