திணிப்பு (சுடுகலன்)

வாய்வழியாக குண்டேற்றப்படும் பீரங்கி. (1) எரியூட்டி (தொடு துளையோடு இணைந்து இருப்பதை காண்க)
(2) முதன்மை வெடிபொருள்
(3) திணிப்பு (எறியத்தை நிலையாக வைக்க திணிக்கப்படும் மென்மையான பொருள்)
(4) எறியம்
(5) திணிப்பு 

திணிப்பு (ஆங்கிலம்: wadding) என்பது, துப்பாக்கிகளில் எறியத்துக்கு பின்னுள்ள வாயுக்களை (எறியத்துக்கு முன் பக்கமாக வெளியேற விடாமல்) அங்கேயே இருக்கும்படி அடைக்கப்பதற்கு, அல்லது வெடிபொடியையும் குண்டையும் தனித்தனியே பிரித்து வைப்பதற்கு பிரயோகிக்கப்படும் ஒரு வட்டுப்பொருள் ஆகும்.[1]

ஏதேனும் வாயு எறியத்தின் பக்கம் கசிந்தால், வெடிப்பதால் அங்கே உருவாகும் உந்துசக்தியானது விரையமாகும்; ஆகவே  ஒரு துப்பாக்கியின் செயல்திறன் திணிப்பை சார்ந்துள்ளது என்று அறுதியிட்டுச் சொல்லலாம். இதைவிட கடினமான, மேலும் துல்லிய வடிவமாகவும் விளங்கும் நிலையமர்த்தியும், இதே பயனை தான் அளிக்கிறது. வாய்-குண்டேற்றுபவைகளில் துணி அல்லது காகிதம் திணிப்பாக பிரயோகிக்கப்படும்.

மேற்கோள்கள்தொகு

  1. Glossary of Firearms Terms, Introduction to Hunter Education
"https://ta.wikipedia.org/w/index.php?title=திணிப்பு_(சுடுகலன்)&oldid=2330639" இருந்து மீள்விக்கப்பட்டது