திண்மம் (வடிவவியல்)
திண்மம் என்பது மூன்று செங்குத்தான திசைகளிலே விரிவடைந்து, திரண்ட, முத்திரட்சி உடைய வடிவம். பொதுவாக திண்ம வடிவங்களுக்கு நீளம், அகலம், உயரம் (ஒன்றுக்கொன்று செங்குத்தான திசைகளில் அளக்கப்படுவது) ஆகியவை உண்டு. பரவலாக அறியப்பட்ட சில திண்ம வடிவங்கள்:
- உருண்டை
- உருளை
- கனசதுரம் அல்லது அறுமுக கட்டகம்
- நீள்கட்டகம்
- நீளுருண்டை (நீள்வட்ட வடிவில் உள்ள திரண்ட வடிவம்) (ellipsoid)
- கூம்பு
- நான்முக முக்கோணகம்
- எண்முக முக்கோணகம்
- பன்னிரண்டுமுக ஐங்கோணகம்
- இருபதுமுக முக்கோணகம்
- முப்பட்டகம்
- ஐங்கோண பட்டகம்
- நாள்மீன் பட்டகம்
இவையன்றி, குடுவை, கோப்பை, முறம் போன்றவையும் திண்ம வடிவங்கள்தாம்.