தினேஷ் சந்திர யாதவ்

இந்திய அரசியல்வாதி

தினேஷ் சந்திர யாதவ் (Dinesh Chandra Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 15வது நாடாளுமன்றத்திற்கு பீகார் மாநிலம் ககஃ‌டியா மக்களவைத் தொகுதியிலிருந்தும் 17வது மக்களவைக்கு மாதேபுரா மக்களவைத் தொகுதியிலிருந்தும் உறுப்பினராக ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

தினேஷ் சந்திர யாதவ்
பிறப்பு1 சூலை 1951 (1951-07-01) (அகவை 73)[1]
பன்மா மாவட்டம், சாகர்சா, (பீகார்).[1]
தேசியம்இந்தியர்
கல்விDiploma in Civil Engineering, I.A.[1]
படித்த கல்வி நிறுவனங்கள்அரசு பல்நுட்பக் கல்லூரி, சகார்சா & சி. எம். அறிவியல் கல்லூரி, மாதேபுரா, பீகார்.
பணிபொறியாளர், தோட்டக்கலை நிபுநர், சமூக சேவகர் & அரசியல்வாதி.
செயற்பாட்டுக்
காலம்
1990 – முதல்
அரசியல் கட்சிஜனதா தளம்
(ஐக்கிய ஜனதா தளம்).[1]
பெற்றோர்இராம்தாரி யாதவ் (தந்தை) & சீதா தேவி (தாயார்)[1]
வாழ்க்கைத்
துணை
ரேணு சின்கா[1]

கல்வி மற்றும் பின்னணி

தொகு

யாதவ் பொறியாளர் ஆவார். இவர் குடிமுறைப் பொறியியலில் பட்டயப் படிப்பினை முடித்துள்ளார்.[1]

வகித்தப் பதவிகள்

தொகு
# முதல் வரை பதவி
01 1990 1995 சிம்ரி பக்தியார்பூர் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினர்
02 1991 1995 துணை தலைமைக் கொறடா, பீகார் சட்டப் பேரவை
03 1990 1992 உறுப்பினர், யாச்சிகா குழு, பீகார் சட்டமன்றம்
04 1992 1995 உறுப்பினர், பிரசன் மற்றும் தியானகர்ஷன் குழு, பீகார் சட்டமன்றம்
05 1996 1998 சஹர்சாவிலிருந்து 11வது மக்களவைக்குத் தேர்வு
06 1996 1998 உறுப்பினர், மதிப்பீடுகளுக்கான குழு
07 1996 1998 உறுப்பினர், தகவல் தொடர்பு குழு
08 1996 1998 உறுப்பினர், ஆலோசனைக் குழு, ரயில்வே அமைச்சகம்
09 1996 1998 ஜனதா தளம் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்
10 1996 1998 உறுப்பினர், கோஷி பிரிவு போக்குவரத்து ஆணையம், சஹர்சா, பீகார் அரசு
11 1999 2004 சஹர்சாவிலிருந்து 13வது மக்களவைக்கு (2வது முறை) மீண்டும் தேர்வு
12 1999 2001 உறுப்பினர், வெளியுறவுக் குழு
13 2000 2002 உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு உள்ளூர்ப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்
14 2000 2002 உறுப்பினர், ஆலோசனைக் குழு, ரயில்வே அமைச்சகம்
15 2001 2002 உறுப்பினர், ஊரக வளர்ச்சிக் குழு
16 2001 2004 உறுப்பினர், பொது நிறுவனங்களுக்கான குழு
17 2002 2004 உறுப்பினர், நாடாளுமன்ற குழு
18 2003 2004 பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு குழு உறுப்பினர்
19 2003 2004 உறுப்பினர், ஆலோசனைக் குழு, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்
20 2005 உறுப்பினர், பீகார் சட்டமன்றம் (இரண்டாம் முறை)
21 2005 2009 பீகார் சட்டமன்ற உறுப்பினர் (மூன்றாவது முறை)
22 2005 2008 உறுப்பினர், மதிப்பீடுகள் குழு, பீகார் சட்டமன்றம்
23 2008 2009 அமைச்சர், தொழில்துறை, பீகார் அரசு
24 2009 2014 ககாரியாவிலிருந்து 15வது மக்களவைக்கு (3வது முறை) மீண்டும் தேர்வு
25 2009 Date உறுப்பினர், உள்துறை விவகாரங்களுக்கான குழு
26 2009 Date உறுப்பினர்

ஆலோசனைக் குழு, நிலக்கரி மற்றும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

27 2009 Date தேசிய மொழி குழு உறுப்பினர்
28 2009 Date உறுப்பினர், ஆலோசனைக் குழு, ரயில்வே அமைச்சகம்
29 2015 2019 சிம்ரி பக்தியார்பூர் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினர் (4வது முறை).
30 2019 பதவியில் மாதேபுரா தொகுதியிலிருந்து 17வது மக்களவைக்கு (4வது முறை) மீண்டும் தேர்வு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Archived copy" இம் மூலத்தில் இருந்து 1 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120101010303/http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=527. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_சந்திர_யாதவ்&oldid=4007528" இலிருந்து மீள்விக்கப்பட்டது