திபயேந்து பருவா

திபயேந்து பருவா (Dibyendu Barua) 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் நாள் பிறந்த ஓர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். மூன்று முறை இந்திய சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.

திபயேந்து பருவா
Dibyendu Barua
2012 இல் பருவா
முழுப் பெயர்திபயேந்து பருவா
நாடுஇந்தியா
பிறப்பு27 அக்டோபர் 1966 (1966-10-27) (அகவை 57)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
பட்டம்கிராண்டு மாசுட்டர் (1991)
உச்சத் தரவுகோள்2561 (சூலை 2003)

பருவா இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நகரத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்திய சதுரங்க சாம்பியன் போட்டியில் 1978 ஆம் பங்கேற்றபோது இவருக்கு 12 வயது ஆகும்[1]. 1982 ஆம் ஆண்டு இலண்டனில், அப்போது உலகத்தர வரிசையில் இரண்டாம் இடத்திலிருந்த விக்டர் கார்ச்சினாய் என்ற உருசியரைத் தோற்கடித்தார் [2]. பிடே அமைப்பு 1991 ஆம் ஆண்டு பருவாவிற்கு கிராண்டு மாசுட்டர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து விசுவநாதன் ஆனந்தை அடுத்து இரண்டாவது இந்திய கிராண்டு மாசுட்டர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது. 1983 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்திய சதுரங்க சாம்பியன் என்ற பட்டத்தை பருவா வென்றார். பின்னர் 1998 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் இரு முறை இப்பட்டத்தை வென்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-04-13. பார்க்கப்பட்ட நாள் 2019-01-06.
  2. http://www.anandabazar.com/khela/chess-grandmaster-victor-korchnoi-dies-aged-85-1.404928#

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திபயேந்து_பருவா&oldid=3557948" இலிருந்து மீள்விக்கப்பட்டது