திபு நினன் தாமஸ்
திபு நினன் தாமசு (Dhibu Ninan Thomas) என்பவர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் பின்னணி மற்றும் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். மலையாள, தெலுங்கு மறு ஆக்கம் செய்யப்பட்ட படங்களிலும் பணி செய்துள்ளார். கனா திரைப்படத்தில் சவால் பாடலை பாடினார்.
திபு நினன் தாமசு | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | திபு |
இசை வடிவங்கள் | திரை பின்னணி இசை, பாடல் இசை |
தொழில்(கள்) |
|
இசைக்கருவி(கள்) | பியானோ, வோகல்ஸ், தாளங்கள் |
இசைத்துறையில் | 2017– தற்போது |
வெளியீட்டு நிறுவனங்கள் |
|
இவர் திருச்சிராப்பள்ளி ஜே. ஜே. பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் கல்வியினைப் படித்துள்ளார்.[1]
திரைதுறை
தொகுஏ. ஆர். கே. சரவணன் எழுதி இயக்கிய மரகத நாணயம் திரைப்படத்தில் முதல் முறையாக இசை அமைத்துள்ளார். இப்படம் 2017ஆம் ஆண்டு வெளிவந்து பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றது. முக்கிய வேடங்களில் ஆதி, நிக்கி கல்ராணி நடித்திருந்தனர்.[2] இப்படம் தெலுங்கில் மரகதமணி என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.[3] இத்திரைப்படம் சிறந்த படமாக மக்களிடையே விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
2018இல் கனா திரைப்படம், மட்டைப்பந்து மற்றும் விவசாயம்[4] பற்றிய ஒரு தமிழ் திரைப்படமாக வெளியானது. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து[5] அருண்ராஜா காமராஜ் எழுதி இயக்கியிருந்தார்.[6][7] இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் மக்களால் விரும்பப்பட்டது. இசையமைப்பாளர் திபு சவால் என்ற பாடலை பாடி பாடகராகவும் தன்னை பதிவு செய்தார்.
திரையிசை
தொகுஇசையமைப்பாளராக
ஆண்டு | தமிழ் | மற்ற மொழிகளில் | மொழிமாற்றம் | குறிப்பு |
---|---|---|---|---|
2017 | மரகத நாணயம் (திரைப்படம்) | மரகதமணி (தெலுங்கு) | ||
ஜக்காரியா போத்தன் ஜீவிச்சிரிப்பூண்டு (மலையாளம்) | ||||
2018 | கனா | |||
2019 | கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி (தெலுங்கு) | கனா தெலுங்கு மறுஆக்கம் | ||
2021 | பேச்சுலர் | அடியே பாடல் மட்டும் | ||
2022 | கொம்பு வைச்ச சிங்கம்டா[8] | |||
நெஞ்சுக்கு நீதி (2022 திரைப்படம்)[9] | தமிழ் மறுஆக்கம் Article 15 | |||
நதி | ||||
2023 | சித்தா | |||
டீசல் | படப்பிடிப்பில் | |||
அஜயந்தே ரண்டம் மோஷனம் (மலையாளம்) |
பாடகராக
- "சவால்" - கனா
மேற்கோள்கள்
தொகு- ↑ Vasudevan, Kv (22 June 2017). "Dhibu's desi flavour". The Hindu. Archived from the original on 12 November 2020. பார்க்கப்பட்ட நாள் 31 March 2019.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-25. பார்க்கப்பட்ட நாள் 2017-09-03.
- ↑ http://www.123telugu.com/reviews/marakathamani-telugu-movie-review.html
- ↑ "Kabali lyricist Arunraja Kamaraj to direct movie on women’s cricket, real players to give insight". https://indianexpress.com/article/entertainment/tamil/kabali-lyricist-arunraja-kamaraj-to-direct-movie-on-womens-cricket-real-players-to-give-insight4828250.
- ↑ "Sivakarthikeyan turns producer for friend Arunraja Kamaraj's debut". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-14.
- ↑ "Release Date Of Sivakarthikeyan's Next Is Here!". https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/kanaa-release-date-announced-officially.html.
- ↑ "Sivakarthikeyan turns producer for Arunraja Kamaraj’s film". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sivakarthikeyan-turns-producer-for-arunraja-kamarajs-film/articleshow/62994591.cms.
- ↑ "First Look of Kombu Vecha Singamda: Sasikumar looks fierce in this glimpse from the film". Timesnownews.com. 17 January 2019. Archived from the original on 31 March 2019. பார்க்கப்பட்ட நாள் 31 March 2019.
- ↑ "Breaking: Udhayanidhi Stalin's Article 15 Remake Has This Magical Combo Reuniting Again – Check Out the Fantastic Update!". Behindwoods. 13 September 2021. Archived from the original on 28 October 2021.