தியோமாலி

அருணாசல பிரதேசத்தில் உள்ள நகரம்,இந்தியா

தியோமாலி (Deomali) என்பது இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள திரப் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும்.

தியோமாலி
Deomali
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்திரப்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்6,060
மொழிகள்
 • அலுவல்பூர்வம்ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

புவியியல் அமைப்பு

தொகு

27.15857°வடக்கு மற்றும் 95.47816°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் தியோமாலி நகரம் பரவியுள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1] தியோமாலி நகரின் மொத்த மக்கள் தொகை 6060 ஆகும். இம்மக்கள் தொகையில் 53% பேர் ஆண்கள் மற்றும் 47% பேர் பெண்கள் ஆவர். தியோமாலி நகரின் சராசரி கல்வியறிவு சதவீதம் 62% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 69% எண்னிக்கையும் பெண்கள் 55% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 17% பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்..2001 ஆம் ஆண்டில் திரப் அரசினர் கல்லூரி கோன்சாவிலிருந்து தியோமாலிக்கு மாற்றப்பட்டது. தற்போது இக்கல்லூரியில் 327 மாணவர்களும் 13 ஆசிரியப் பணியாளர்களும் உள்ளனர்.

ஊடகம்

தொகு

தியோமாலியில், அனைத்திந்திய வானொலி நிலையம் ஒன்று செயல்படுகிறது.. ஆகாசவானி தியோமாலி என்ற பெயரில் இயங்கும் இவ்வானொலி நிலையத்தில் இருந்து பண்பலை வரிசைகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோமாலி&oldid=3575390" இலிருந்து மீள்விக்கப்பட்டது