திரகோபன்
பிளைத் திரகோபன், (திரகோபன் பிளைத்தீ)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேசினிடே
பேரினம்:
திரகோபன்

குவெயர், 1829
மாதிரி இனம்
திரகோபன் சத்யரா
லின்னேயஸ், 1758

திரகோபன் (Tragopan) என்பது பாசியனிடே என்ற பகட்டு கோழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை பேரினமாகும். ஆண் பறவைகளின் தலையில் இரண்டு பிரகாசமான நிற, சதைப்பற்றுள்ள கொம்புகள் போன்ற அமைப்பு இருப்பதால், இந்தப் பேரினத்தின் உறுப்பினர்கள் பொதுவாக "கொம்பு பகட்டு கோழிகள்" என்று அழைக்கப்படுகின்றன. இவை இணை சேரும்போது இதனைக் காட்சிப்படுத்துகின்றன. மரங்களில் கூடு கட்டும் திரகோபான்களின் பழக்கம் பாசியானிட்களில் தனித்துவமானது.[1]

வகைப்பாட்டியல்

தொகு

1829ஆம் ஆண்டில் பிரெஞ்சு இயற்கை ஆர்வலர் ஜார்ஜஸ் குவியர் என்பவரால் திரகோபன் பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது.[2] திரகோபன் என்ற பெயர் உரோமானிய எழுத்தாளர்களான பிளினி மற்றும் பாம்போனியசு மேலா ஆகியோரால் குறிப்பிடப்பட்ட ஒரு புராணக் கொம்பு ஊதா தலை கொண்ட பறவை ஆகும்.[3]

இந்தப் பேரினத்தில் ஐந்து சிற்றினங்கள் உள்ளன.[4]

படம் விலங்கியல் பெயர் பொதுவான பெயர் பரவல்
  திரகோபன் மெலனோசெபாலசு மேற்கத்திய திரகோபன் கோகிசுதான், ககன் பள்ளத்தாக்கு, கிஷ்த்வார், சம்பா, குல்லு மற்றும் பாக்கித்தானின் சட்லஜ் ஆற்றின் கிழக்கே ஒரு பகுதி
  திரகோபன் சத்யரா வன திரகோபன் இந்தியா, திபெத்து, நேபாளம், பூட்டான்
  திரகோபன் தெம்மினிக் தெம்மினிக் திரகோபன் வடக்கு மியான்மர் முதல் வடமேற்கு டோன்கின் வரை.
  திரகோபன் பிளைத்தீ பிளைத் திரகோபன் வடகிழக்கு இந்தியா, வடக்கு மியான்மர் முதல் தென்கிழக்கு திபெத்து மற்றும் சீனா வழியாக பூட்டான்.
  திரகோபன் கபோத்தி கபோத்தீ திரகோபன் சீனாவின் புஜியான், ஜியாங்சி, ஜெஜியாங் மற்றும் குவாங்டாங் மாகாணங்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. Madge, S.; McGowan, P. (2002). "Genus Tragopan: tragopans (horned pheasants)". Pheasants, partridges and grouse: including buttonquails, sandgrouse and allies. London: Christopher Helm Publishers. pp. 280−286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7136-3966-7.
  2. Cuvier, Georges (1829). Le Règne animal distribué d'après son organisation : pour servir de base a l'histoire naturelle des animaux et d'introduction a l'anatomie comparée. Nouvel Édition, Revue et Augmentée (in French). Vol. 1. Paris: Déterville. p. 479.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 389. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  4. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Pheasants, partridges, francolins". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 11 October 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரகோபன்&oldid=3980736" இலிருந்து மீள்விக்கப்பட்டது