திராவிடவியல்

திராவிடவியல் (Dravidian studies அல்லது Dravidology) என்பது திராவிடர் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை ஆராயும் படிப்பு ஆகும். இது தமிழியலின் மேல்நிலைப் படிப்பும், தெற்காசியவியலின் துணைப் படிப்பும் ஆகும்.

வரலாறு

தொகு

16 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை என்றிக் என்றீக்கசு, ராபர்ட்டோ டி நொபிலி, பார்த்தலோமியோ சீகன்பால்கு, வீரமாமுனிவர் போன்றோர் தமிழை ஆராய வந்த ஐரோப்பியர் ஆவர்.

இந்தத் துறையின் முன்னணி நபர்களுள் ராபர்ட் கால்டுவெல், உ. வே. சாமிநாதைய்யர், டி, ஆர். செஷா ஐயர், வி. கனகசபா, கே. ஏ. நீலகண்ட சாத்த்ரி, பர்ரோ, எமெனெயு, ஹெர்மன் குண்டர்ட், கமில் சுவெலெபெல், பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

கல்வி கற்றல்

தொகு

திராவிடவியல் படிப்புகள் குப்பத்தில் உள்ள [[[திராவிடப் பல்கலைக்கழகம்|திராவிடப் பல்கலைக்கழகத்தில்]] வழங்கப்படுகின்றன. திராவிட மொழிகளை ஆராய வந்த மேற்கத்திய ஆய்வாளர்களின் நினைவாக ஒவ்வொரு துறையின் பீடத்திற்கும் அவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. திராவிடவியல் - கால்டுவெல், சி. பி. பிரவுன் -தெலுங்கு, ஃபெர்டினாண்டு கிட்டெல் - கன்னடம், வீரமாமுனிவர்- தமிழ், ஹெர்மன் குண்டர்ட் - மலையாளம். [1]

மேலும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராவிடவியல்&oldid=3247651" இலிருந்து மீள்விக்கப்பட்டது