திராவிட நாடு

கருத்து

திராவிட நாடு அல்லது திராவிடர் நாடு தெற்காசியாவில் திராவிட மொழி பேசுபவர்களால் தனிநாடு கோரி முன்மொழியப்பட்ட பெயராகும். ஆரம்பகாலத்தில் இது தமிழர் வாழும் பகுதிகளுக்கு மட்டும் இக்கோரிக்கை எழுந்தது பின்னாளில் திராவிட மொழிகள் பேசும் பிற மாநிலத்தவர்களை (ஆந்திரப் பிரதேசம், கேரளா, மற்றும் கர்நாடகா[1]) ஒருங்கிணைத்து கோரப்பட்டது. இக் கோரிக்கை இலங்கை,[2] ஒரிசா, மகாராஷ்டிரா .[3] ஆகியவற்றுக்கும் சேர்த்து கோரப்பட்டது.

1909 இல் மெட்ராஸ் பிரசிடென்சியின் தெற்குப் பகுதி

மறு எழுச்சி

தொகு

2017இல் இந்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் இறைச்சிக்காக பசுக்களை கொல்வதற்கு தடை விதித்து ஒரு அறிவிப்பை வெளியிட்ட போது மாட்டிறைச்சி உணவுகள் பிரபலமாக இருக்கும் கேரளாவில் டுவிட்டர் உபயோகிப்பாளர்கள் திராவிட நாடு (#DravidaNadu) என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட்டிங் ஆக்கினர். இந்த ஹேஸ்டேக்கிற்கு தமிழ்நாட்டில் உள்ள டுவிட்டர் உபயோகிப்பாளர்களிடம் இருந்தும் ஆதரவு கிடைத்தது.[4] தேசியக் கட்சிகள் இதற்கு ஆதரவை மறுத்தன.[5] 2018 ஆம் வருட ஆரம்பத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முரளிமோகன் தென்னிந்திய மாநிலங்கள் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவதைப்பற்றி கூறினார். இந்நிலை தொடர்ந்தால் தென்னிந்திய ஒரு தனி நாடாக மாறும் என்று எச்சரித்தார்.[6] மேலும் பல்வேறு தென்னிந்திய மாநிலங்களின் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்ந்தளிப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதை குறிப்பிட்டபோது,[7] திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. க. ஸ்டாலின் திராவிட நாடு கோரிக்கைக்கு, மற்ற மாநிலங்களும் இதே கருத்தை கொண்டிருக்கும் பட்சத்தில் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூறினார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. டெய்லர், ரிச்சர்ட் வாரன் (1982). சமயம் மற்றும் சமூகம்: முதல் 25 ஆண்டுகளில், 1953-1978. கிறித்துவ இலக்கியக்க கழகம் (கிறித்துவ சமயம் மற்றும் சமூக கல்வி நிறுவனம், பெங்களூர்). p. 242. இணையக் கணினி நூலக மைய எண் 9007066.
  2. வெல்ஷ், கிளாட் எமர்சன் (1967). அரசியல் நவீனமடைதல்:அரசியல் வேற்றுமைகளை ஒப்புமைப்படுத்தி வாசித்தல். வார்ட்ஸ்வர்த் பப்ளிகேசன் கம்பெனி. p. 173. இணையக் கணினி நூலக மைய எண் 941238.
  3. ஜேம்ஸ் எச். இல்ஸ், சத்துரு சென், ed. (2004). நேருக்கு நேர் அணுகுபவர்கள்:இந்தியா காலணி ஆதிக்கத்தின் முன்னும், பின்னும் எற்பட்ட அரசியல் மாறுபாடுகள். ஆந்தம் பிரஸ். p. 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1843310327.
  4. Twitterati in Kerala rakes up #DravidaNadu over 'beef ban'
  5. South India’s mini rebellion over Modi’s new cattle law kindles an old secessionist spark
  6. "If neglected, south India will declare separate country: TDP MP's old comments stir row". TheNewsMinute. 9 March 2018. https://www.thenewsminute.com/article/if-neglected-south-india-will-declare-separate-country-tdp-mps-old-comments-stir-row-77673. 
  7. T. S. Sudhir (14 March 2018). "South India's politicos echoing public anger with leadership in north, conciliatory leadership needed at Centre". Firstpost. http://www.firstpost.com/politics/south-indias-politicos-echoing-public-anger-with-leadership-in-north-conciliatory-leadership-needed-at-centre-4390181.html. 
  8. Mathi (16 March 2018). "தென்மாநிலங்கள் முன்வைக்கும் திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு: ஸ்டாலின்" (in Tamil). OneIndia Tamil. https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-support-dravida-nadu-says-mk-stalin-314485.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராவிட_நாடு&oldid=3997082" இலிருந்து மீள்விக்கப்பட்டது