திரிசூலம் படைநடவடிக்கை

1971 இந்திய-பாகிஸ்தான் போரின், இந்தியக் கடற்படையால் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி மீது நடத்தபட்ட கடல் வழி தாக்குதல்களே படைநடவடிக்கை திரிசூலம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற படைநடவடிக்கை மலைப்பாம்பு.இவ்விரு நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்பு இப்பகுதியில் ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டது இப்படைநடவடிக்கை திரிசூலம் மூலமாக முதல் முறையாக நடந்தேறியது[1].இந்த படைநடவடிக்கையின் வெற்றியை தான் இந்தியா கடற்படை தினமாக டிசம்பர் நான்காம் தேதியை கொண்டாடுகிறது.

திரிசூலம் நடவடிக்கை
=இந்திய-பாகிஸ்தான் போர், 1971த்தின் ஒரு பகுதி
தேதி டிசம்பர் 4/5, 1971
இடம் அரபிக்கடல், கராச்சி துறைமுகம் அருகே,பாகிஸ்தான்
முடிவு இந்திய கடற்படைக்கு வெற்றி
மோதியவர்கள்
இந்தியா
இந்தியா
பாக்கித்தான்
பாகிஸ்தான்
பலம்
3 ஏவுகணை படகுகள், 2 நீர்முழுகி எதிர்ப்பு ரோந்து கலங்கள்
இழப்புகள்
இல்லை [1] பிஎன்எஸ் முஹபிஸ்[1][2]
பிஎன்எஸ் கைபர்[1][2]
பிஎன்எஸ் ஷாஜஹான் கப்பல்கள் பலத்த சேதம். [1][2]
கராச்சி துறைமுக எரிபொருள் கிடங்குகளுக்கு பலத்த சேதம்[1][2]

போர் பின்னணி தொகு

பாகிஸ்தான் கடற்படையின் தலைமையகம் மற்றும் அனைத்து கப்பற்படைத் தொகுதிகளும் கராச்சி நகரிலே அமைந்திருந்தது. கடல்சார்ந்த வணிகத்தின் முக்கிய மையமாகவும் கராச்சி விளங்கியதால்,அதனை முற்றுகையிட்டால் அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் நாசம் விளைவிக்கும்வழி அமையும். ஆகையால்,பாகிஸ்தானின் மேலிடத்துக்கு கராச்சி துறைமுகத்தின் பாதுகாப்பு முதன்மையாக இருந்தது மற்றும் ஏதேனும் வான்வழி அல்ல கடல்வழி தாக்குதலிளிருந்து பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

படைநடவடிக்கை திரிசூலம் தொகு

டிசம்பர் நான்காம் தேதி அன்று இந்திய கடற்படை கராச்சி துறைமுகம் மீது ஒரு அவசர கடல்வழி தாக்குதல் நடத்தியது [3].

இந்த படைநடவடிக்கைக்கான பணி குழுமத்தில் மூன்று வித்யுத் ரக ஏவுகணை படகுகள்,ஐஎன்எஸ் நிபட் (கெ86),ஐஎன்எஸ் நிர்கட் (கெ89) மற்றும் ஐஎன்எஸ் வீர் (கெ82) உபயோகபடுத்தபட்டது.இதை தவிர, இரண்டு பெட்ய ரக கார்வேட்டுகள்,ஐஎன்எஸ் திர் மற்றும் ஐஎன்எஸ் கில்டன் (பி) போன்றவைகளும் அப்பணி குழுவில் இருந்தன[2][3]. இந்த பணிக் குழுவை இரண்டு ஏவுகணை எதிர்ப்பு ரோந்து கலங்கள் வழிநடத்தின.[1][2] . இரவு ஒன்பது ஐந்பது மணிக்கு , இந்த பணிக்குழு பாகிஸ்தானின் இருப்பிடத்தை அறிந்து கராச்சிக்கு தெற்கே எழுபது கடலோடிகளுக்குரிய மைல்களில் இருந்த பிஎன்எஸ் முஹபிஸ் மற்றும் பிஎன்எஸ் கைபர் கப்பல்களை ஏவுகணை தாக்கி மூழ்கடித்தது[1][2]. இன்னொரு பாகிஸ்தானிய கப்பலான பிஎன்எஸ் ஷாஜஹான் கூட சேதபடுத்தப்பட்டது. ஏவுகணை படகுகள் கராச்சி துறைமுகத்தில் உள்ள எரிபொருள் கிடங்குகளை தாக்கி எரிய வைத்தன[1].

உஷார் நிலையில் இருந்த பாகிஸ்தானிய கடற்படை டிசம்பர் ஆறாம் தேதி இன்னொரு ஏவுகணை தாக்குதல் நடப்பதாக போலி எச்சரிக்கை எழுப்பியது. பிஏஎப் விமானங்கள் அந்த கருதப்பட்ட இந்திய கப்பலை சேதப்படுத்தியது. பின்பு,அது பாகிஸ்தானிய கப்பல் பிஎன்எஸ் சுல்பிகர் என்று அறிந்தனர். இந்த கப்பலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது[2][3]. படைநடவடிக்கை திரிசூலம் இந்திய கப்பற்படைக்கு ஓர் மாப்பெரும் வெற்றியாக அமைந்தது,ஏனெனில் இந்திய கப்பற்படை பணிக்குழுவிற்கு[1] எந்த சேதமும் ஏற்படவில்லை. இது தெரிந்த பாகிஸ்தானிய அதிகாரிகளுக்கு ஒருதிட்டமிட்ட மற்றும் முன்னதாகவே பயிற்சி எடுக்கப்பட்ட நடவடிக்கை என அறிந்தனர்[2]. இந்த படை நடவடிக்கையின் வெற்றியை அடுத்து பாகிஸ்தானிய கடலெல்லை மீது படைநடவடிக்கை மலைப்பாம்பு என்று மற்றொமொரு தாக்குதலை இந்தியா நடத்தியது[3].

மூலங்கள் தொகு

  • எஸ்.எம்.நந்தா (2004). கராச்சியை தகர்த்த மனிதன். ஹார்பர்கோல்லின்ஸ் இந்தியா. ISBN.
  • அரேபிய கடலில் படைநடவடிக்கைகள் பரணிடப்பட்டது 2012-07-02 at the வந்தவழி இயந்திரம் -பாகிஸ்தான் ராணுவ கூட்டமைப்பு

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "Indo-Pakistani War of 1971".
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 "Operations in the Arabian Sea". Archived from the original on 2012-07-02. பார்க்கப்பட்ட நாள் 2009-12-04.
  3. 3.0 3.1 3.2 3.3 "Trident, Grandslam and Python: Attacks on Karachi". Archived from the original on 2009-09-26. பார்க்கப்பட்ட நாள் 2009-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிசூலம்_படைநடவடிக்கை&oldid=3820455" இலிருந்து மீள்விக்கப்பட்டது