திரிதி பானர்ஜி

திரிதி பானர்ஜி (Dr. Dhriti Banerjee) இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநர் ஆவார். இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தின் கீழ் இந்த விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனம் செயல்படுகிறது. 2021 ஆகத்து 5 ஆம் நாள் இவர் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். [1] இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தின் 105 ஆண்டு கால வரலாற்றில் ஒரு பெண் இயக்குநராகியிருப்பது இதுவே முதல் முறையாகும். இவர் இதே நிறுவனத்தின் எண்ணிம வரிசை தகவல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக இதே நிறுவனத்தில் இவர் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தின் 100 ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது தி குளோரியஸ் 100 உமன்ஸ் சயின்டிபிக் கான்ட்ரிபியூசன் இன் இசட் எஸ் ஐ என்ற புத்தகத்தின் இணை ஆசிரியராக இருந்து வெளியிட்டார். [2]

மேற்கோள்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. Arora, Sumit. "Zoological Survey of India gets 1st female director in 100 years" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிதி_பானர்ஜி&oldid=3211629" இலிருந்து மீள்விக்கப்பட்டது