திரிபுரம் (இந்து தொன்மவியல்)
திரிபுரம் அல்லது முப்புரம் (Tripura,) என்பது வானத்தில் பறக்கும் வகையிலான கோட்டைகளுடன் கூடிய மூன்று நகரங்கள் ஆகும். இந்த நகரங்கள் இரும்பு, வெள்ளி மற்றும் தங்கத்திலானவைகள். இதனை நிறுவியவர் அசுரர் குல கட்டிடக் கலைஞராகிய மயன் ஆவார். இந்த திரிபுரங்களை ஆட்சி செய்வதர்கள் தாரகன் எனும் அசுரரின் மகன்களான தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆவார். இந்த அசுர சகோதர்கள் செய்த கொடுமைகளால், சிவபெருமான் இந்த அசுர சகோதரர்களையும், அவர்களின் திரிபுரங்களையும் எரித்ததால் திரிபுராந்தகர் எனப்போற்றப்பட்டார்.