திரிபுரா புரஞ்சி

அகோம் பேரரசுக்கும், திரிபுரா இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின் வரலாற்றுப

திரிபுரா புரஞ்சி (Tripura Buranji) என்பது 1709 மற்றும் 1715 க்கு இடையில் அகோம் பேரரசுக்கும், திரிபுரா இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின் வரலாற்றுப் பதிவாகும். புரஞ்சி 1724 இல் அகோம் அரசின் தூதர்களான இரத்னா கண்டலி சர்மா கடகி மற்றும் அர்ஜுன் தாஸ் பைராகி கடகி ஆகியோரால் எழுதப்பட்டது. [1] [2] இது திவிப்ரா இராச்சியத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று தூதரகப் பணிகள், திரிபுரி தூதர்களுடன் இரண்டு திரும்பும் பயணங்கள், அரண்மனைகள், விழாக்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் தற்செயலான விளக்கங்கள் ஆகியவற்றை விவரிக்கிறது. மேலும் இது திவிப்ரா மன்னன் இரண்டாம் இரத்தி மாணிக்கியா (1684-1712) முதலில் கணாசியாம் தாக்கூர் என்று பெயரிடப்பட்டு பின்னர் மகேந்திர மாணிக்கியா (1712-1714) என்ற பட்டப் பெயருடன் அரியணை ஏறிய அவரது வளர்ப்பு சகோதரர் ஆகியோரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை நேரில் பார்த்த சாட்சிக் கணக்கையும் வழங்குகிறது.

புரஞ்சி எனப்படும் ஓலைச்சுவடு

இந்த கையெழுத்துப் பிரதியானது அகோம் இராச்சியத்தின் வரலாற்றை எழுதும் பாரம்பரியமான புரஞ்சிகள் எனப்படும் ஆவணங்களின் தொகுப்பின் கீழ் வருகிறது. இதில் அதிகாரப்பூர்வ மற்றும் குடும்பம் என இரண்டு வகைகள் உள்ளன. [3] திரிபுரா புரஞ்சி, பாட்ஷா புரஞ்சி, கச்சாரி புரஞ்சி மற்றும் ஜெயந்தியா புரஞ்சி ஆகியவை அகோம் அரச சபையால் அங்கீகரிக்கப்பட்டு பதிவுக்காக பராமரிக்கப்படும் அண்டை நாடுகளின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் ஆகும். [4] இதைத் தொகுத்துள்ள சூர்ய குமார் புயான், மற்ற பல புராஞ்சிகளைப் போலவே, இது போன்ற எழுத்து வகைகளில் இது ஒரு உயர்ந்த இடத்தைப் பெறுவதாகக் கருதினார். [5]

சௌத்ரி மற்றும் சர்க்கார் போன்ற வரலாற்றாளர்கள் அதிகம் அறியப்படாத இந்த ஆவணத்தை திரிபுராவில் நடந்த நிகழ்வுகளின் குறிப்பிடத்தக்க ஆதாரமாகக் கருதுகின்றனர். [6] [7] என். கே. பட்டாச்சார்யா "மக்கள், தெய்வங்கள் மற்றும் கோவில்களின் நிலப்பரப்பு, பழக்கவழக்கங்கள், உடைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் மற்றும் திரிபுரா அரசவைக்குள் சிம்மாசனத்திற்கான சூழ்ச்சிகள் ஆகியவற்றை விவரிக்கும் காளிதாசனின் மேகதூதம் போன்ற பிற எழுத்துக்களில் காலனித்துவத்திற்கு முந்தைய பயண எழுத்துக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு" என்கிறார். [8]

கையெழுத்துப் பிரதி

தொகு

கையெழுத்துப் பிரதி கற்றாழை மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட ஏட்டில் அசாமிய மொழியில் எழுதப்பட்டுள்ளது.[2] ஒவ்வொரு ஓலைக்கும் இரண்டு பக்கங்களிலும் ஐந்து வரிகள் உரை இருக்கிறது. ஆனால் 108வது ஓலைச்சுவடி இல்லை. [9] முடிவில் ஒரு பொருளடக்கம்மூம் இருக்கிறது. [2] 1842 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி ஜே. ராட் என்பவரிடமிருந்து பிரித்தானிய அருங்காட்சியகத்தால் கையெழுத்துப் பிரதி வாங்கப்பட்டது. [2] கையெழுத்துப் பிரதியை ஆய்வு செய்த புயானின் கூற்றுப்படி, "எழுத்துகள் படிக்கக்கூடியவை, சொற்கள் பிரிக்கப்பட்டுள்ளன. பிரிவுகள் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன". மேலும் கையெழுத்து எச்சரிக்கையான எழுத்தாற்றலைக் காட்டுகிறது. [10]

1709 மற்றும் 1715 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், வங்காளத்தில் இருந்து முகலாயர்களை அகற்றுவதற்காக திவிப்ரா இராச்சியத்துடன் ஒரு கூட்டமைப்பை உருவாக்க அகோம் மன்னர் உருத்ர சிங்னின் விருப்பத்தால் இந்த ஆவணத்தில் உள்ள கணக்குகளின் மையமாக இருக்கும் இராஜதந்திர பணிகள் தூண்டப்பட்டன. [11] [10]

உள்ளடக்கம்

தொகு

இது "மக்கள், தெய்வங்கள் மற்றும் கோவில்களின் நிலப்பரப்பு, பழக்கவழக்கங்கள், உடைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் மற்றும் திரிபுரா அரசவைக்குள் அரியணைக்கான சூழ்ச்சிகள்" ஆகியவற்றை விவரிக்கிறது. [8] அகோம் மற்றும் திவிப்ரா இராச்சியங்களின் இராஜதந்திர பணிகளை நிர்வகிக்கும் கடுமையான நெறிமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. [12] திவிப்ரா அரசர் மற்றும் அவரது குடிமக்களால் கொண்டாடப்படும் ஒரு வசந்த விழாவைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. [13]

குறிப்புகள்

தொகு
  1. "Tripura Buranji popularly known as Tripura Desar Kathar Lekha, the name by which the original manuscript is known bears testimony about the history of the region of a crucial period. We are fortunate that there is a Tripura Buranji written by Ratna Kandali and Arjundas Kataki." (Sarkar 2016)
  2. 2.0 2.1 2.2 2.3 "The Library of British Museum preserves a manuscript since January 8, 1842 written on Sanchi-Pat made of the bark of aloes wood. It was written in Assamese language by two emissaries of Ahomraj Maharaja Rudra Singha (1696ñ1714 AD) namely Ratna Kandali Sarma Kataki and Arjun Das Bairagi Kataki who were sent to the court of Maharaj Ratna Manikya, 1698–1772 AD of Tripura." (Chaudhuri 2016)
  3. "There are Tai-Ahom Buranji chronicles written primarily in a Tai language called Ahom, not spoken for some 200 years, and Assamese Buranji chronicles written in the living Indo-Aryan language of Assamese. ... According to Wichasin, there are two types of Tai-Ahom chronicles: official and family. The latter were begun in the sixteenth century A.D. The official type trace their genesis to the appearance of the Tai-Mau chieftain Sukapha and a band of some 10,000 followers in Sadyia, a point in the northern reaches of the Bhramaputra Valley in the reputed year of 1228 A.D" (Hartmann 2011)
  4. "For, information about the rest of India and especially about the neighbouring regions, was eagerly sought after and faithfully recorded in the royally-approved histories like the Padshah Buranji, Kachari Buranji, Jaintia Buranji and the Tripura Buranji Visitors and messengers from the Ahom kingdom to other parts of India were'also required to write out detailed accounts of the government, administration and economy of the lands they visited." (Misra 1985)
  5. "Dr. Surjya Kumar Bhuyan described the book in the following words "on the whole 'Tripura Buranji' constitutes a distinct landmark in the history of Assamese prose and Assamese historical literature with regard both to its contents and expression, occupying a position far above the average Buranji." (Chaudhuri 2016)
  6. (Chaudhuri 2016)
  7. "The history of North East India is primarily based on a valuable document known as Buranjis. The historicity of the Buranjis cannot be underestimated. Tripura Buranji popularly known as Tripura Desar Kathar Lekha, the name by which the original manuscript is known bears testimony about the history of the region of a crucial period. We are fortunate that there is a Tripura Buranji written by Ratna Kandali and Arjundas Kataki. (Sarkar 2016)
  8. 8.0 8.1 "[I]n Kalidas's Meghadootam and later Sandeshakavyas, in the descriptions of holy places like in Namdev's Tirthayatra in Marathi, in Vidyapati's 14th century Sanskrit work Bhuparikrama, in the 18th century Asamiya work Tripura Buranji by Ratna Kandali and Arjundas Bairagi and the like. The last-named work is especially interesting where envoys of King Rudra Sinha (1696-1714) of Assam were sent to the court of Ratnamanikya, the King of Tripura, to seek support for the proposed invasion of Bengal in 1714. As K. Satchidanandan writes, "These envoys who went on foot along with escorts to Tripura through Cachar and the foothills of Mizoram have carefully recorded in the racy style of medieval chronicles, the landscape, habits, dress, manners and beliefs of the people, deities and temples and the intrigues for the throne within the court of Tripura." (Bhattacharjee 2003)
  9. (Bhuyan 1938)
  10. 10.0 10.1 (Bhuyan 1938)
  11. "King Rudra Singha was extremely annoyed with the Governor of Bengal, Nawab Murshid Kuli Khan who used to send Khelats to Sargadeo Rudra Singh 'insinuating' thereby that the Ahom Monarch was subordinate to the government of Moghuls. Rudra Singh was 'therefore' keen on organising a formidable confederacy against the Moghuls whom he described as 'enemies of Hinduism'. He despatched his envoys to the Rajas of Morang, Bana-Vishnupur, Nadiya, Cooch Behar, Burdwan, Barahanagar and Tripura seeking their support and cooperation in the fight against the invaders." (Chaudhuri 2016)
  12. "Let us take for example the confidential letter of Sargadeo Rudra Singha Ruler of Assam had sent to the Tripura King Ratna Manikya which will show the highest standard of protocol being maintained in sending diplomatic missions at a time when the rules of international law were just taking shape and the work of Hugo Grotius was to receive the wide publicity that it afterwards came to have." (Chaudhuri 2016)
  13. "The Assamese envoys reported that the spring Festival had all its regal splendour around it. The King himself in a ceremonial procession used to go to river Gomati with ten thousand followers and ceremonially dressed royal officials and enjoyed the festival of colours with heart's content, 'Tripura Buranji, chap. vi, pp. 15-16."(Chaudhuri 2016)

சான்றுகள்

தொகு
  • Bhattacharjee, N K (2003). "From the Editor's Desk". Indian Literature (Sahitya Akademi) 46 (6): 5–7. 
  • Bhuyan, S K (1938). "Introduction". Tripura Buranji. Gauhati, Assam: Govt of Assam.
  • Chaudhuri, Bikach (2016), "Tripura: A Peep into the Past", in Poddar, Satyadeo (ed.), History of Tripura: As Reflected in the Manuscripts, New Delhi: National Mission for Manuscripts, pp. 26–28
  • Hartmann, John F. (7 April 2011). "Phongsawadan Tai-Ahom: Ahom Buranji [Tai-Ahom Chronicles], 2 Vols. Transcribed and translated by Renu Wichasin. Bangkok: Amarin Printing and Publishing Ltd. Pp. xxiv, 993 [Continuous Pagination]. Map, Photos, Tables, Glossary. [In Thai]". Journal of Southeast Asian Studies 28 (1): 227–229. doi:10.1017/S002246340001554X. 
  • Misra, Tilottama (1985). "Social Criticism in Nineteenth Century Assamese Writing: The Orunodoi". Economic and Political Weekly 20 (37): 1558–1566. 
  • Sarkar, I (2016), "Manuscripts and History", in Poddar, Satyadeo (ed.), History of Tripura: As Reflected in the Manuscripts, New Delhi: National Mission for Manuscripts, pp. 5–6
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுரா_புரஞ்சி&oldid=3815547" இலிருந்து மீள்விக்கப்பட்டது