திரிபுரா புலிப்படை
திரிபுரா புலிப்படை (The All Tripura Tiger Force (ATTF)) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் இயங்கும் பிரிவினைவாதக் குழு ஆகும். இக்குழுவானது 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தியதி தொடங்கப்பட்டது. திரிபுரா தேசிய தன்னார்வக்குழு உறுப்பினர்கள் இணைந்து ரஞ்சித் தேப்பார்மா தலமையில் இக்குழுவைத் தொடங்கினர். இந்திய அரசால் இக்குழு தீவிரவாதக் குழு என அறிவிக்கப்பட்டுள்ளது.[1][2] இப்போராளிக் குழுவில் 90% பேர் இந்துகளாகவும் 10% பேர் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர்.[3]
திரிபுரா புலிப்படை | |
---|---|
இயங்கிய காலம் | 1990 முதல் |
கொள்கை | திரிபுரா பிரிவினை |
தலைவர்கள் | ரஞ்சித் தேப்பார்மா |
செயற்பாட்டுப் பகுதி |
திரிபுரா, இந்தியா |
எதிராளிகள் | திரிபுரா மாநில அரசு |
குறிக்கோள்
தொகுஇப்போராளிக் குழுவானது,
- 1956 ஆம் ஆண்டிற்குப் பின் திரிபுராவில் குடியேறி நிரந்தரமாய்த் தங்கியுள்ள வங்காள மொழி பேசுவோரை திரிபுராவை விட்டு வெளியேற்ற வேண்டும்.
- பழங்குடியின மக்களுக்கே காணி நிலங்களைக் கொடுக்க வேண்டும்.
- 1956 ஆம் ஆண்டிற்குப் பின் குடியேறியர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளைக்[3] கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.satp.org/satporgtp/countries/india/terroristoutfits/index.html
- ↑ http://www.jamestown.org/single/?no_cache=1&tx_ttnews%5Btt_news%5D=36451
- ↑ 3.0 3.1 "All Tripura Tiger Force". South Asian Terrorism Portal. Archived from the original on 2008-09-30. பார்க்கப்பட்ட நாள் 2008-10-11.