திரிபுரா மொழிகள்

திரிபுரா மொழிகள் (languages of Tripura) அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய நாட்டில் அதிக மொழிகள் பேசப்படும் மாநி்லமாக திரிபுரா கருதப்படுகிறது..

வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுராவில் வங்காள மொழியும், கொக்பரோக் மொழியும் அலுவலக மொழிகளாகப் பயன்படுகின்றன. இவை தவிர பல சிறுபான்மை மொழிகளும் பேசப்படுகின்றன. இந்தியாவின் பிற மாநிலங்கள் போலவே ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் வங்காளம் மாநில மொழியாகவும் பயன்படுகிறது. மாநிலம் முழுவதும் வங்காளிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் வங்காள மொழி முதன்மை மொழியாக உள்ளது. கொக்பரோக் மொழி பழங்குடியின மக்கள் பேசும் மொழியாக உள்ளது..

2001 ஆம் ஆண்டின் இந்தியக் கணக்கெடுப்பின்படி திரிபுராவில் பல்வேறு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.:[1]

மொழி எண்ணிக்கை சதவீதம்
வங்காளம் 21,47.994 67.14
கொக்பரோக் 8,14,375 25.46
இந்தி 53,691 1.68
மோக் 28,850 0.9
ஒடியா 23,899 0.75
பிஷ்ணுப்பிரியா மணிப்புரி 21,716 0.68
மணிப்புரி 20,716 0.65
ஆலாம் 17,990 0.56
காரோ 11,312 0.35

அழியும் நிலையில் உள்ள மொழிகள் உட்பட திரிபுராவில் மொத்தம் 36 மொழிகள் இருப்பதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி சைமார் மொழியை நான்கு பேர் மட்டுமே பேசுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Report of the commissioner for linguistic minorities: 47th report (July 2008 to June 2010)" (PDF). சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா), Government of India. 2011. pp. 116–121. Archived from the original (PDF) on 13 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012.
  2. Milton, Lawrence (17 July 2012). "Saimar's oldest speaker appeals to protect his language". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411033026/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-17/mysore/32713218_1_ciil-saimar-speakers-tribal-languages. பார்த்த நாள்: 29 March 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுரா_மொழிகள்&oldid=3558056" இலிருந்து மீள்விக்கப்பட்டது