திரிபுவன்தாஸ் படேல்
திரிபுவன்தாஸ் கிஷிபாய் படேல் (Tribhuvandas Kishibhai Patel) (22 அக்டோபர் 1903 – 3 சூன் 1994) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 1946-இல் கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் (தற்போது அமுல்) மற்றும் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தை நிறுவிய சமூக ஆர்வலர், கூட்டுறவாளர் மற்றும் இந்திய விடுதலை இயக்க வீரர் ஆவார்.[1] a Gandhian,[1] இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு காரணமான மூவரில் இவரும் ஒருவராவார்.
திரிபுவன்தாஸ் கிஷிபாய் படேல் | |
---|---|
பிறப்பு | ஆனந்த், ஆனந்த் மாவட்டம், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா | 22 அக்டோபர் 1903
இறப்பு | 3 சூன் 1994 குஜராத், இந்தியா | (அகவை 90)
பணி | இந்திய விடுதலை இயக்கம், அமுல், தேசிய பால் பண்ணை |
விருதுகள் | பத்ம பூசண் (1964) ரமோன் மக்சேசே விருது (1963) |
இளமை வாழ்க்கை
தொகுதற்கால குஜராத் மாநிலத்தின் ஆனந்த் நகரத்தில் 22 அக்டோபர் 1903-இல் பிறந்தார்.[1] இவர் காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி, இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கு பெற்றவர்.
கூட்டுறவு இயக்கம்
தொகுசர்தார் வல்லபாய் படேல் அவர்களின் ஆலோசனைப் படி, 1940-ஆம் ஆண்டில், திரிபுவன்தாஸ் படேல், குஜராத்தின் கேதா மாவட்டத்த்தின் வேளாண் குடிமக்களிடம் இணைந்து பால் உற்பத்தி மேம்பாட்டுக்கான பனிகளில் கவனம் செலுத்தினார். 1946-இல் இவர் ஆனந்த் நகரத்தில் வர்கீஸ் குரியன் தலைமையில் அமுல் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை நிறுவினார்.[2]
பின்னர் இவர் வர்கீஸ் குரியனுடன் இணைந்து குஜரத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (Gujarat Cooperative Milk Marketing Federation) மற்றும் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தை நிறுவினார். இதனால் இந்தியாவில் வெண்மைப் புரட்சி ஓங்கியது.
பெற்ற விருதுகள்
தொகு- 1963: ரமோன் மக்சேசே விருது'[1]
- 1964: பத்ம பூசண்[3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Amul remembers Tribhuvandas on his birth anniversary". Indian Cooperative. 23 October 2019. https://www.indiancooperative.com/co-op-news-snippets/amul-remembers-tribhuvandas-on-his-birth-anniversary/.
- ↑ Amul : Evolution of Marketing Strategy Marketing Case Studies
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.