திருக்கரசைப் புராணம்

திருக்கரசைப் புராணம் இலங்கையின் திருக்கோணமலையில் மகாவலி கங்கைக் கரையில் அமைந்திருந்த அகத்தியத்தாபனம் என்னும் கரசைச் சிவன் கோயில் மீது பாடப்பட்ட தல புராணமாகும். இதன் நூலாசிரியர் பெயர் சரியாகத் தெரியவில்லை; ஆயினும் நூற் பெயரால் கரசைப் புலவர் எனப்படுகிறார்.

இப்புராணம் சூதமுனி அருளிச் செய்த வடமொழிப் புராணத்தினைத் தழுவிச் செய்யப்பட்டதாக இப்புராண வரலாறு கூறும் பகுதியிற் சொல்லப்பட்ட போதும் தழுவப்பட்ட முதனூலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. கடவுள் வாழ்த்து, குரு வணக்கம், புராண வரலாறு, அவையடக்கம் ஆகியன கொண்ட பாயிரப் பகுதியும் இலங்கைச் சருக்கம், கங்கைச் சருக்கம், தாபனச் சருக்கம், பூசைச் சருக்கம் ஆகிய நான்கு சருக்கங்களும் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது.

இந்நூலின் பதிப்புகள் தொகு

  • இதன் இரண்டாவது பதிப்பு திருகோணமலையில் 1952 சூலையில் அச்சிடப்பெற்றது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கரசைப்_புராணம்&oldid=1455658" இலிருந்து மீள்விக்கப்பட்டது