மயிலிட்டி

இலங்கையில் உள்ள இடம்

மயிலிட்டி (Myliddy) என்பது இலங்கையின் ஒரு சிறிய ஊர் ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. இதன் கிழக்கே பலாலி, வடக்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே தையிட்டி, தெற்கே கட்டுவன் ஆகியன இதன் எல்லைகளாக உள்ளன. இது யாழ்ப்பாணத்தின் முக்கியமான மீன்பிடிக் கிராமங்களில் ஒன்றாகும்.[1] இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடகரைப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், பலாலி விமானப்படைத்தளம் ஆகியன இதனருகில் அமைந்துள்ளதால் இக்கிராமம் 1990-ஆம் ஆண்டு முதல் அதி-உச்ச பாதுகாப்பு வலயமாக இருந்து வந்தது. 27 ஆண்டுகளின் பின்னர், 2017 மே 3 இல் இப்பகுதி அவ்வூர் மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து விடப்பட்டது.[2][3] ஆனாலும், இவ்வூரின் அரைவாசிப் பகுதி தொடர்ந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது.

மயிலிட்டி
Myliddy
ஊர்
மயிலிட்டி is located in Northern Province
மயிலிட்டி
மயிலிட்டி
ஆள்கூறுகள்: 9°48′N 80°03′E / 9.800°N 80.050°E / 9.800; 80.050
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிசெ பிரிவுவலிகாமம் வடக்கு
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

இங்குள்ள கோவில்கள்தொகு

மயிலிட்டியில் அமைந்துள்ள கோவில்கள்:[4]

 • மயிலிட்டி முருகமூர்த்தி ஆலயம்
 • மருதடி விநாயகர் ஆலயம்
 • தோப்புப்பிள்ளையார் ஆலயம்
 • கொழுவியங்கலட்டி பிள்ளையார் ஆலயம்
 • வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் கோவில்

இங்குள்ள பாடசாலைகள்தொகு

 • கலைமகள் மகா வித்தியாலயம்
 • உரோமன் கத்தோலிக்கப் பாடசாலை

இங்கு பிறந்தவர்கள்தொகு

இதனையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. Holmes, Walter Robert (1980). Jaffna, Sri Lanka 1980. Christian Institute for the Study of Religion and Society of Jaffna College. பக். 365. https://books.google.com/books?id=OccLAAAAIAAJ. 
 2. http://www.dailynews.lk/2017/07/03/local/120775/sri-lanka-army-releases-myliddy-pier-fifty-four-acre-land-jaffna
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2018-08-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-11-01 அன்று பார்க்கப்பட்டது.
 4. "மயிலிட்டி கண்ணகி அம்பாள்". 2020-11-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-11-01 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலிட்டி&oldid=3643512" இருந்து மீள்விக்கப்பட்டது