நா. சண்முகலிங்கன்
நா. சண்முகலிங்கன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் மற்றும் முன்னாள் துணைவேந்தரும் எழுத்தாளரும் ஆவார். கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். ஆக்க இசைக் கலைஞராவார். நாடகக்கலை திரைப்படக்கலை, இலத்திரனியல் ஊடகக்கலை, நுண்சமூகப்பொறிமுறையியல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையின் ஆரம்பகாலத் தலைவர்[1]. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதல் சமூகவியல் பேராசிரியர்.
நா. சண்முகலிங்கன் | |
---|---|
பிறப்பு | மயிலிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை |
இருப்பிடம் | திருநெல்வேலி, யாழ்ப்பாணம் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | கலாநிதி (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) முதுமாணி (அற்றனையோ டீ மணிலா பல்கலைக்கழகம்) |
பணி | பேராசிரியர் |
பணியகம் | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | எழுத்தாளர், சமூகவியலாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | கந்தவனம் நாகலிங்கம் (ஆசிரியர்) நகுலேசுவரி |
வாழ்க்கைத் துணை | கௌரி |
பிள்ளைகள் | அம்பிகை |
வாழ்க்கைக்குறிப்பு
தொகுசண்முகலிங்கன் யாழ்ப்பாணம் மயிலிட்டி தெற்கு தெல்லிப்பழையில் ஆசிரியர் கந்தவனம் நாகலிங்கம், நகுலேசுவரி ஆகியோரின் ஒரே மகன். 1987 இலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் வசித்து வருகிறார். இவரது மனைவி கௌரி சண்முகலிங்கன். இவர் ஆசிரியரும் பிரபல கல்வியல் ஆய்வாளருமாவார். இவர்களின் ஒரே மகள் அம்பிகை.
கல்விப்புலம்
தொகுஆரம்பக்கல்வியை யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு கட்டுவன் மயிலிட்டி தெற்கு ஞானோதாய வித்தியாசாலையில் கற்றார். உயர்தரக்கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் கற்றார். பி.எட் இளமாணிப் பட்டப்படிப்பினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் சித்தி பெற்றார்[சான்று தேவை]. இப்பாடத்துறையில் பட்டம்பெற்றிருந்தாலும் இவரது முதல்தர சிறப்புப் பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரையானது சமூகவியல் பரப்பிலேயே இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது[சான்று தேவை]. பின்னர் தனது முதுமாணிப் பட்டத்திற்கான ஆய்வுப் பயிற்சியை பிலிப்பைன்ஸ் நாட்டின் அற்றனையோ டீ மனிலா பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்[சான்று தேவை]. அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் கணநாத் ஒபயசேகரா அவர்களின் வழிகாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்ட ஆய்வினை மேற்கொண்டார்.
ஆய்வுப்புலம்
தொகுசமயத்தின் சமூகவியல், பண்பாட்டு மானுடவியல், ஊடகக் கல்வி, செயல்முறைவடிவிலான நுண் சமூகப் பொறிமுறையியல் என்பன இவரது சிறப்பு ஆய்வு ஆர்வங்களும் ஆய்வுப்புலமும் ஆகும்.[சான்று தேவை] மானுடவியல் பேராசிரியர் கணநாத் ஒபயசேகரவின் வழிகாட்டலில் இவர் மேற்கொண்ட கலாநிதிப் பட்ட ஆய்வு அறிக்கையானது நூல் வடிவினில் "New Face of Durga" என்கின்ற தலைப்பினில், தில்லி காலிங்க பதிப்பக வெளியீடாகப் பதிப்பிக்கப்பட்டது. இந்திய மானுடவியல் பேராசிரியர் பக்தவத்சல பாரதியும் இவரும் இணைந்து இலங்கை இந்திய மானுடவியல் என்கின்ற ஆய்வு நூலை வெளியிட்டனர்.[2] விருது பெற்ற இவரது சிறுவர் புதினம் ஒன்று சிங்கள மொழியாக்கம் பெற்று வெளியிடப்பட்டுள்ளது [சான்று தேவை].
பல்கலைக்கழகப் பணி
தொகு1981ஆம் ஆண்டு உதவி விரிவுரையாளராக பேராசிரியர் பேராசிரியர் கா. கைலாசபதி அவர்கள் கலைப்பீடாதிபதியாக இருந்த காலத்தில் பணியை ஆரம்பித்தார். 2007, டிசம்பர் 28 முதல் 2011, மார்ச் 31 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பணியாற்றினார்.
எழுதிய மெல்லிசைப் பாடல்கள்
தொகு- சந்தனமேடை எம் இதயத்திலே- எம். ஏ. குலசீலநாதன், எஸ். கே. பரராஜசிங்கம் இணைந்து பாடியது, இசை - எம்.ஏ.குலசீலநாதன்
- வானத்து வண்ண தாரகையாய்- என். பத்மலிங்கம் பாடியது. இசை - ஆர். முத்துசாமி
எழுதிய நூல்கள்
தொகு- என் அம்மாவின் கதை
- என் அப்பாவின் கதை
- இதயரஞ்சனி, வானொலிச்சித்திரங்கள், (இணையாசிரியர் எஸ்.கே பரராசசிங்கத்துடன் இணைந்து எழுதியது) 1988
- சந்தனமேடை, கவிதை, 1992
- நாகரிகத்தின் நிறம், கவிதைகள், 1993
- மரபுகளும் மாற்றங்களும், சமூகவியல் கட்டுரைகள், 2001
- சமூக மாற்றத்தில் பண்பாடு, சமூகவியல் கட்டுரைகள், 2000
- பண்பாட்டின் சமூகவியல், சமூகவியல் கட்டுரைகள், 2002
- தொல்சீர் சமூகவியல் சிந்தனையாளர், 2002
- சான்றோன் எனக்கேட்ட தாய், சிறுவர் நாவல், 1993
- இலங்கை இந்திய மானிடயவில், சமூகவியல் மானுடவியல் கட்டுரைகள், (இணையாசிரியர் முனைவர் பக்தவக்சலபாரதியுடன் இணைந்து எழுதியது) 2004
- சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள் - அமைப்பும் இயங்கியலும், கட்டுரைகள், 2008
- ஊழித்தாண்டவம், சிறுகதை, 2004
- Cult Murukan in Eastern Srilanka, ஆய்வு நூல், 2003
- A New Face of Durga, Kalinga Publications
மேற்கோள்கள்
தொகு- ↑ யாழ்ப்பாணத்து நினைவுகள் பரணிடப்பட்டது 2011-11-09 at the வந்தவழி இயந்திரம், பக்தவத்சல பாரதி
- ↑ தமிழர் மானிடவியல். பக்தவத்சல பாரதி. அடையாளம். 2008.