தையிட்டி

இலங்கையில் உள்ள இடம்

தையிட்டி, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமம் வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓர் ஊர்.[1] மிகவும் உயர்ந்த திடல்களை கொண்ட இடமாகவும் ஆழமான கிணறுகளை கொண்ட இடமாகவும் அமைந்துள்ள ஊர் தையிட்டி. இது தையிட்டி வடக்கு, தையிட்டி கிழக்கு, தையிட்டி தெற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குள் உள்ளன. தையிட்டி தெற்கில் ஏறக்குறைய 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த "கணையவிற் பிள்ளையார் அல்லது குளத்தடி பிள்ளையார் ஆலயம்" அமைந்துள்ளது. தையிட்டிக்கு வடக்கில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது. இவ்வூருக்கு மேற்கில் காங்கேசன்துறையும், கிழக்கில் மயிலிட்டியும், தெற்கில் பளைவீமன்காமமும் காணப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 30.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தையிட்டி&oldid=2776322" இலிருந்து மீள்விக்கப்பட்டது