திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல்

திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, தமிழ்மறை என்னும் சிறப்புப் பெற்ற திருக்குறள் மூலமும் அதற்கு எழுதப்பட்ட வெவ்வேறு வகையான உரைநூல்களும் அச்சில் ஏற்றப்பட்ட காலவரிசை அடைவு ஆகும்.

அண்மைக் காலத்தில் சில தமிழ் அறிஞர்கள் இத்தகைய காலவரிசைப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். இவண் தரப்படுகின்ற பட்டியல் திருக்குறள் மாமுனிவர் என்னும் சிறப்புப்பெயர் பெற்ற கு. மோகனராசு திருக்குறள் உரை வகைகள் (2005) என்னும் நூலில் தரும் செய்திகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.[1] 2006இல் வெளியான சில நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகள்

தொகு
தொடர் வரிசை எண் அச்சிடப்பட்ட ஆண்டு ஆசிரியர் பெயர் நூல் பெயர்த் தலைப்பு அச்சகம்/பதிப்பகம் குறிப்புகள்
1 1812 திருவள்ளுவர் திருக்குறள் ----- திருக்குறள் மூலம் மட்டும் அச்சானது
2 1838 திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் ----- திருக்குறளுக்கு அச்சேறிய முதல் உரைநூல் இதுவே. இது 19ஆம் நூற்றாண்டிலேயே 8 மீள்பதிப்புகள் பெற்றது.
3 1840 பரிமேலழகர் திருக்குறள் உரை அமெரிக்கன் மிசியோன் அச்சுக்கூடம், சென்னை முதன்முதல் அச்சேறிய பரிமேலழகர் உரை. முதல் 24 அதிகாரங்களுக்கு மட்டும். இந்த உரையோடு இராமாநுசக் கவிராயர் எழுதிய வெள்ளுரையும் புத்துரையும், துறு ஐயர் (W.H. Drew) எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியாயின.
4 1849 எம். வீராசாமி பிள்ளை (பதிப்பாசிரியர்) பரிமேலழகர் உரை சென்னை திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை முழுவதும் முதன்முறை அச்சானது. இது 19ஆம் நூற்றாண்டிலேயே 8 மீள்பதிப்புகள் பெற்றது.
5 1849 திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் களத்தூர் வேதகிரி முதலியார், இரத்தின நாயக்கர் அண்டு சன், சென்னை 1838ஆம் ஆண்டு நூலின் மீள்பதிப்பு
6 1850 யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக முதலியார், கந்தசாமி முதலியார் தமிழ் வேதமாகிய திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் ----- பரிமேலழகர் உரை முழுவதும்
7 1850 களத்தூர் வேதகிரி முதலியார் திருக்குறள் மூலமும் உரையும் (பதவுரை, கருத்துரை, விசேட உரை) சண்முக விலாச அச்சுக்கூடம், சென்னை பரிமேலழகருரைத் தழுவல்
8 1856 கேசவ முதலியார் தமிழ் வேதமாகிய திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் பிரபாகர அச்சுக்கூடம், சென்னை பரிமேலழகர் உரை முழுவதும்
9 1856 களத்தூர் வேதகிரி முதலியார் திருக்குறள் மூலமும் உரையும் கேசவ முதலியார் பிரபாகர அச்சுக்கூடம், சென்னை பரிமேலழகருரைத் தழுவல்
10 1861 கந்தசாமிப் பிள்ளை திருக்குறள் பரிமேலழகருரை, சரவணப் பெருமாள் உரை விளக்கத்துடன் திருநெல்வேலி பரிமேலழகர் உரையோடு உரை விளக்கமும்
11 1861 கந்தசாமிப் பிள்ளை திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் திருநெல்வேலி -----
12 1861 ஆறுமுக நாவலர் தமிழ் வேதமாகிய திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னை பரிமேலழகர் உரை முழுவதும்
13 1861 ஆறுமுக நாவலர் திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னை பரிமேலழகர் உரை முழுவதும்
14 1869 கருணானந்த சுவாமிகள், கேசவ முதலியார் திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் பிரபாகர் அச்சுக்கூடம், சென்னை -----
15 1873 இ.எல்.எம். பிரஸ் திருக்குறள் மூலமும் உரையும் தரங்கம்பாடி -----
16 1873 இட்டா குப்பசாமி நாயுடு திருக்குறள் பரிமேலழகர் உரையைக் கொண்டியற்றிய பதவுரை கருத்துடன் கவிரஞ்சினி அச்சுக்கூடம், சென்னை -----
17 1875 எம். வீராசாமிப் பிள்ளை திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் சென்னை -----
18 1884 திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் எம்ப்ரஸ் ஆப் இந்தியா, சென்னை -----
19 1884 பொன்னுசாமி முதலியார் திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் வித்தியா வினோத அச்சுக்கூடம், சிதம்பரம் -----
20 1885 முருகேச முதலியார் குறள் மூலம் பரிமேலழகர் செய்த இலக்கணவுரையுடன் கலாரத்னாகரம், சென்னை -----
21 1886 ஊ. புஷ்பரத செட்டி திருவள்ளுவரின் குறள், பரிமேலழகர் உரை கலாரத்னாகரம், சென்னை -----
22 1889 சுகாத்தியர் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த குறள் மூலமும் சுகாத்தியர் இயற்றிய கருத்துரயட்டவணையும் பொழிப்புரயும் லாரன்ஸ் பிரஸ், சென்னை T.M. Scott என்ற மேனாட்டுக் கிறித்தவ மறைபரப்பாளர் ஆக்கிய உரை
23 1893 இராகவலு நாயுடு திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் சென்னை -----
24 1893 சுந்தர முதலியார் திருக்குறள் மூலமும் கருத்துரையும் விக்டோரியா ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை -----
25 1899 சென்னைப் பல்கலைக்கழகம் 701-800 குறட்குப் பரிமேலழருரை சென்னை -----

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட உரைகளின் சில பண்புகள்

தொகு
  • திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர்கள் பத்துப்பேர் என்பது மரபு. அவர்கள் மணக்குடவர், தருமர், தாமத்தர், நச்சர், பரிதியார், மல்லர், திருமலையர், பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் என்போர் ஆவர். இவர்களுள் மணக்குடவர், பரிதியார், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர் என்னும் ஐவரின் உரைகளே முழுமையாகக் கிடைத்துள்ளன.
  • திருக்குறளுக்கு உரையாக முதலில் அச்சில் ஏறியது திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் என்னும் நூல் ஆகும் (1838). இதிலிருந்து பரிமேலழகர் என்னும் பழைய ஆசிரியரின் உரை புதிய வடிவத்தில் அச்சேறியதற்கு சரவணப் பெருமாளே வழிவகுத்தார் எனலாம். 19ஆம் நூற்றாண்டிலேயே இவ்வுரை எட்டுமுறை வெளிவந்துள்ளது.
  • 1840இல் தான் முதன்முதல் பரிமேலழகர் உரை, முதல் 24 அதிகாரங்களுக்கு அச்சேறி வெளிவந்துள்ளது. அந்த உரையோடு இராமாநுசக் கவிராயர் எழுதிய வெள்ளுரையும், புத்துரையும் துறு ஐயர் (W.H. Drew) எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளது. இவை அனைத்தும் திருக்குறளின் முதல் 24 அதிகாரங்களுக்கு மட்டுமே.
  • இச்செய்தியின் வழி பார்க்கும்போது, முதன்முதல் திருக்குறள் புத்துரைக்கு வித்திட்டவராக இராமாநுசக் கவிராயர் விளங்குவதாக அறிய முடிகிறது.
  • முதன்முதலாக, பரிமேலழகர் உரை முழுவதும், 1849இல் சென்னையில் எம். வீராசாமி பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பரிமேலழகர் உரை பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே எட்டுமுறை வெளிவந்துள்ளது.
  • 1838இல் வெளியான சரவணப் பெருமாள் ஐயரின் தழுவல் உரையை அடுத்து, பத்தொன்பதாம் நூற்றாண்டு அளவிலேயே சில அறிஞர்கள் பரிமேலழகரைத் தழுவித் திருக்குறளுக்கு உரைகள் வழங்கினர்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு உரை என்றால் அது பரிமேலழகர் உரையே என்ற நிலை நிலவியது. அது வைதிக உரையாகவும் இலக்கண நுட்பங்கள் செறிந்த உரையாகவும் அமைந்தது கூடுதல் ஈர்ப்பிற்குக் காரணமாயிற்று. இக்காலப் பகுதியில் மணக்குடவர் உள்ளிட்ட பிற பழைய உரையாசிரியர்களின் உரைகளைத் தமிழறிஞர்கள் அறியாதார் அல்ல; ஆனால் பரிமேலழகர் மீது இருந்த பற்றால், அவற்றை அச்சிட்டு வெளியிடக்கூட யாரும் முன்வரவில்லை. ஒருவகையில் அவை மறைக்கப்பட்டன எனக் கொள்ளலாம்.
  • திருக்குறள் சமண நூலா சைவ நூலா என்றொரு வாதம் எழுந்த காலகட்டம் அது. சமணத்திற்கு ஓரளவு ஆதரவாகத் தோன்றிய மணக்குடவர் உரையும் பெரும் சார்பாக இருந்த காலிங்கர் உரையும் போற்றப்படவில்லை. அதே வேளையில் திருக்குறள் முழுக்க முழுக்க சைவமே என்ற போக்கில் எழுதப்பட்ட பரிதியார் உரையையும் யாரும் போற்றியதாகத் தெரியவில்லை. சைவரும் வைணவருமாக இருந்த அக்காலத் தமிழ்ப் புலவர்களுக்குப் பரிமேலழகர் பொதுவானவராக அமைந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பரிதியார் உரையில் காணும் ஆழமற்ற போக்கும் வேறொரு காரணமாக இருந்திருக்கலாம்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகள்

தொகு
தொடர் வரிசை எண் அச்சிடப்பட்ட ஆண்டு ஆசிரியர் பெயர் நூல் பெயர்த் தலைப்பு அச்சகம்/பதிப்பகம் குறிப்புகள்
26 1902 திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் ----- 1838இல் வெளியான உரையின் மறு பதிப்பு
27 1904 கோ. வடிவேலு செட்டியார் திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் விளக்கவுரையுடன் சென்னை பரிமேலழகருரையை எளிமைப்படுத்தல்
28 1909 பா. கங்காதர தேவர் திருக்குறள் முதற்பாவின் பரிமேலழகர் உரை விளக்கம் பிரசிடென்சி அச்சுக்கூடம், சென்னை பரிமேலழகருரையை எளிமைப்படுத்தல்
29 1909 திருமுல்லைவாயில் பி.டி.ரத்தினம் பிள்ளை தமிழ் வேதமாகிய திருக்குறள் வசனம் சீர்காழி பரிமேலழகருரை தழுவிய புத்துரை
30 1909 பழனியப்பா செட்டியார் திருக்குறள் மூலம் (அறம், பொருள்: பதவுரை, கருத்துரை; காமம்: பொழிப்புரை) ----- பரிமேலழகருரை தழுவிய புத்துரை
31 1910 இராகவையங்கார் திருக்குறள் பரிமேலழகர் உரை விவேகபாநு முத்திரா சாலை, மதுரை பரிமேலழகருரை மறுபதிப்பு
31/அ 1911 அயோத்தி தாசர் திருவள்ளுவ நாயனார் இயற்றிய திரிக்குறள் பௌத்த திரிபிடகத்தை உள்வாங்கி திருக்குறள் எழுதப்பட்டதாக நூலாசிரியர் கருதினார்
32 1913 களத்தூர் வேதகிரி முதலியார் திருக்குறள் மூலமும் உரையும் (பதவுரை, கருத்துரை, விசேட உரை) ----- 1850ஆம் ஆண்டு நூலின் மறுபதிப்பு
33 1913 இ.மா. கோபாலகிருஷ்ண கோனார் திருக்குறள் பரிமேலழகருரை மதுரை பரிமேலழகருரை மறுபதிப்பு
34 1917 வ.உ. சிதம்பரனார் திருக்குறள் மணக்குடவர் உரை (அறத்துப்பால்) ----- முதன்முதல் மணக்குடவர் உரையின் பகுதி அச்சேற்றப்பட்டது
35 1919 கோ. வடிவேலு செட்டியார் திருக்குறள் பரிமேலழகருரையும் கோ. வடிவேலு செட்டியார் இயற்றிய தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் சச்சிதானந்த அச்சியந்திர சாலை, சென்னை -----
36 1919 பொன்னம்பலம் இராமநாதன் திருக்குறளின் பாயிரமும் பொன்னம்பலம் இராமநாதன் இயற்றிய இராமநாத தீபமும் நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம் -----
37 1920 செ.மு. வேலு முதலியார் திருக்குறள் பரிமேலழகருரை சென்னைத் தமிழ்ச் சங்கத்தார், சென்னை பரிமேலழகருரை மறுபதிப்பு
38 1921 அரசஞ்சண்முகனார் முதற்குறள் விருத்தி மீனலோசனி அச்சியந்திர சாலை, மதுரை பரிமேலழகருரையிலிருந்து மாறுபட்ட அணுக்கம்
39 1922 டி.ஆர். திருவேங்கடம் பிள்ளை திருக்குறள் வசனம் குருசரணாலயம், சென்னை -----
40 1924 மு.ரா. அருணாசலக் கவிராயர் திருக்குறளின் திரட்டும் தெளிபொருள் வசனமும் சி.நா. சிதம்பர முதலியார், மதுரை -----
41 1924 கிருஷ்ணாம்பேட்டை குப்புசாமி முதலியார் திருக்குறள் பரிமேலழகருரை (அறத்துப்பால், பொருட்பால்) சென்னை பரிமேலழகருரை மறுபதிப்பு
42 1924 மார்க்கசகாயம் செட்டியார் திருக்குறள் சொற்குறிப்பும் அகராதியும் ---- திருக்குறள் அருஞ்சொற்களுக்குப் பொருளும், சொல் அடைவும் முதன்முதல் அச்சேறியது
43 1925 கா. பொன்னுசாமி நாட்டார் திருக்குறள் மணக்குடவர் உரை ----- முதன்முறையாக மணக்குடவர் உரை முழுதும் அச்சேறியது
44 1925 கிருஷ்ணாம்பேட்டை குப்புசாமி முதலியார் திருக்குறள் பரிமேலழகருரை (காமத்துப்பால்) சென்னை பரிமேலழகருரை மறுபதிப்பு

இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகளின் சில பண்புகள்

தொகு
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் காணப்பட்ட திருக்குறள் எழுச்சியைவிட இக்காலப் பகுதியில் அந்த எழுச்சியின் வீச்சு கூடுதலாக இருப்பதைக் காணமுடிகிறது. இக்காலப் பகுதியில் கீழ்வரும் போக்குகள் தெரிகின்றன:

- பரிமேலழகர் உரைப் பதிப்புகள்
- பரிமேலழகர் உரைக்கான விளக்க உரைகள்
- பரிமேலழகர் உரையைத் தழுவிய உரைகள்
- தமிழறிஞர்களின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- மணக்குடவர் உரை வெளியீடு
- திருக்குறள் சொற்குறிப்பு அகராதி வெளியீடு

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்தது போலவே இருபதாம் நூற்றாண்டின் முதற்கால் நூற்றாண்டிலும் பரிமேலழர் உரை பெரும் மதிப்போடு விளங்கியது. திருக்குறள் சான்றோர் நால்வர் பரிமேலழகர் உரையைப் பதிப்பித்துள்ளனர் (ஆண்டுகள்: 1910, 1913, 1920, 1924-1925).
  • பரிமேலழகர் உரையைத் தத்தம் விளக்கங்களோடு கோ. வடிவேலு செட்டியார், பா. கங்காதர தேவர் ஆகியோர் வெளியிட்டுள்ளனர் (ஆண்டுகள்: 1904, 1909, 1919).
  • பத்தொன்பதாம் நூற்றாண்டைப் போலவே இக்காலப் பகுதியிலும் சில சான்றோர் திருக்குறளுக்குப் புதியதாக உரை கண்டுள்ளனர். அவர்கள் பி.டி. ரத்தினம் பிள்ளை (ஆண்டு: 1909), பழனியப்பா செட்டியார் (ஆண்டு: 1909), பொன்னம்பலம் இராமநாதன் (ஆண்டு: 1919), டி.ஆர். திருவேங்கடம் பிள்ளை (ஆண்டு: 1922), அருணாசலக் கவிராயர் (ஆண்டு: 1923) ஆகியோர்.
  • சரவணப் பெருமாள் ஐயரின் உரை மறுபதிப்பாக 1902இலும், வேதகிரி முதலியாரின் உரை மறுபதிப்பாக 1913இலும் வெளியாயின. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும் மதிப்புக்குரியதாக விளங்கிய சரவணப் பெருமாள் ஐயர் உரைக்கு இக்காலப் பகுதியில் அவ்வளவாகச் சிறப்பிடம் தரப்பட்டுள்ளதாக அறிய முடியவில்லை.
  • இக்கால கட்டத்தில் திருக்குறளுக்குத் தமிழறிஞர்களே ஆங்கில மொழிபெயர்ப்புகள் வழங்கியது என்பது ஒரு புதிய முயற்சியாகும். பெரிதும் பரிமேலழகருரையை ஒட்டியே அமைந்த மூன்று ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாயின. அவற்றை எழுதி வெளியிட்டோர் கீழ்வருவோர்:

- வ.வே.சு. ஐயர்
- கோ. வடிவேலு செட்டியார்
- எ. சபாரத்தின முதலியார்

  • பரிமேலழகர் உரையை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என்னும் நிலையிலிருந்து மாறி, திருக்குறளுக்கு அணுக்க உரை காண வேண்டும் என்னும் உந்துதலும் ஆய்வுலகில் இக்கால கட்டத்தில் எழுந்துள்ளது. அதற்கு அரசஞ்சண்முகனார் 1921இல் எழுதிய முதற்குறள் விருத்தி என்னும் நூலே சான்று.
  • பரிமேலழகர் உரைத்திறனைக் கண்டு ஈர்க்கப்பட்டோர் சிலர்; திருக்குறள் வடமொழி சார்ந்து இயற்றப்பட்ட நூலே என்ற எண்ணத்தில் தமிழையும் தமிழரையும் தாழ்த்தும் நோக்குடன் பரிமேலழகர்பால் பற்றுக்கொண்டோர் வேறுசிலர் என்ற நிலை இக்காலகட்டத்தில் எழுந்தது.
  • இப்பின்னணியில் தமிழ் எழுச்சி உருவாகி, பரிமேலழகர் உரைக்கு மாற்றாக மணக்குடவர் உரையை அச்சிட்டுக் கொண்டுவர வேண்டும் என்னும் உந்துதல் எழுந்தது. செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் முதன்முதல் மணக்குடவர் உரையில் ஒரு பகுதியாகிய அறத்துப்பால் உரையை வெளியிட்டார். இந்த உரை 1917இல் வெளிவந்தது. 1925இல் மணக்குடவர் உரை முழுவதையும் கா. பொன்னுசாமி நாட்டார் வெளியிட்டார்.
  • திருக்குறளை நன்கு அறிய வேண்டுமென்றால், சொல் அடைவும் கடின சொற்களுக்குப் பொருளும் அறிந்துகொள்ள வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கில் திருக்குறளுக்குச் சொற்குறிப்பும் அகராதியும் மார்க்கசகாயம் செட்டியார் என்பவரால் கொண்டுவரப்பட்டது (1924).
  • பரிமேலழகரை உயர்த்தி திருக்குறளைத் தாழ்த்தும் எண்ணம் சிலர் கொண்டிருந்ததால் அதற்கு எதிர்வினையாக பரிமேலழகரின் உரைக்கு எதிர்ப்பு எழுந்து, அவ்வுரையின் நிறைகுறைகளை ஆராயும் போக்கு தோன்றியதோடு, தனித்தமிழ் உணர்வும் கால்கொள்ளத் தொடங்கியது.

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகள்

தொகு
தொடர் வரிசை எண் அச்சிடப்பட்ட ஆண்டு ஆசிரியர் பெயர் நூல் பெயர்த் தலைப்பு அச்சகம்/பதிப்பகம் குறிப்புகள்
45 1928 திருநாவுக்கரசு முதலியார் திருக்குறள் பரிமேலழகருரை வாவிள்ள ராமசாமி சாஸ்துருலு அண்டு சன்ஸ் பரிமேலழகருரை
46 1928 கா.சுப்பிரமணிய பிள்ளை திருக்குறள் தெளிபொருள் விளக்கம் கழகம், சென்னை -----
47 1929 காயாமொழி குமரகுருபரர் திருக்குறள் அறம் கோல்டன் அச்சகம், சென்னை -----
48 1929 கி. வீரராகவன் திருக்குறள் குமரன் அச்சகம், காஞ்சிபுரம் -----
49 1931 டி.எ. பரமசிவன் பிள்ளை திருக்குறள் சாரம் - 108 அதிகாரமும் வசனமும் ----- -----
50 1932 ஆ. அரங்கநாத முதலியார் திருக்குறள் மூலமும் பொழிப்புரையும்(ஆங்கில மொழிபெயர்ப்புடன்) பி. என். அச்சுக்கூடம், சென்னை -----
51 1933 ஆ. அரங்கநாத முதலியார் திருக்குறள் மூலமும் பொழிப்புரையும் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) பி.என். அச்சுக்கூடம், சென்னை -----
52 1933 நாகை. சொ. தண்டாபாணிப் பிள்ளை திருக்குறள் அறத்துப்பால் தண்டாபாணி விருத்தியுரை கழகம், சென்னை ----
53 1935 வ.உ. சிதம்பரம்பிள்ளை திருக்குறள் அறத்துப்பால் விருத்தியுரையுடன் தூத்துக்குடி -----
54 1936 முனைவர் வ. சுப. மாணிக்கனார் உரைநடையில் 1330 திருக்குறள் பேகன் பதிப்பகம், காரைக்குடி -----
55 1937 ஆ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருக்குறள் பரிமேலழகர் உரையும் விளக்கமும் இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், சென்னை -----
56 1937 கு. சடகோப ராமானுஜாச்சாரியார் திருக்குறள் பரிமேலழகருரையும் விளக்கமும் ஆர்.ஜி. அச்சகம், சென்னை -----
57 1939 திரு. வி. கலியாண சுந்தரனார் திருக்குறள் விரிவுரை - பாயிரம் சாது அச்சுக்கூடம், சென்னை -----
58 1939 பி.எ. சுப்பிரமணிய சாஸ்திரி திருக்குறள் அறத்துப்பால் பலருரை முருக விலாஸ், திரிசிரபுரம் -----
59 1941 திரு. வி. கலியாண சுந்தரனார் திருக்குறள் விரிவுரை - அறத்துப்பால் - இல்வாழ்க்கையியல் சாது அச்சுக்கூடம், சென்னை -----
60 1944 க.அ. இராகசாமிப் புலவர் திருக்குறள் மூலமும் அரும்பதவுரையும் ஒற்றுமை ஆபிஸ், சென்னை -----
61 1945 பி.எ. சுப்பிரமணிய சாஸ்திரி திருக்குறள் - தீபாலங்காரம் குறிப்புரையுடன் ----- -----
62 1947 திருவள்ளுவர் சங்கம் திருக்குறள் மூலமும் உரையும் விருதுநகர் -----
63 1949 முனைவர் மு. வரதராசனார் திருக்குறள் தெளிவுரை கழகம், சென்னை -----
64 1949 புலவர் அ.மு. குழந்தை திருக்குறள் குழந்தையுரை சிவலிங்க பதிப்புக் கழகம், ஈரோடு -----
65 1949 பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி திருக்குறள் பொருட்பாலும் காமத்துப்பாலும் பாலருரை காஞ்சி காமகோடி கோசஸ்தானம், சென்னை -----
66 1949 திருக்குறளார் வீ. முனுசாமி திருக்குறள் காமத்துப்பால் விளக்கவுரை சக்தி காரியாலயம், கோவை -----
67 1949 ந.சி. கந்தையாப் பிள்ளை திருக்குறள் மூலமும் தெளிவுரையும் ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை -----
68 1949 ஆர். சாரங்கபாணி திருக்குறள் அறத்துப்பால் விளக்கம் லயோலா கல்லூரி, சென்னை -----
69 1949 சுகவனம் சிவப்பிரகாசன் திருக்குறள் மூலமும் உரையும் ----- -----
70 1949 மு.ரா. கந்தசாமி பிள்ளை திருக்குறள் உரை விவேகானந்தா அச்சகம், மதுரை -----
71 1950 இரத்தின நாயகர் சன்ஸ் திருக்குறள் மூலமும் தெளிபொருள் உரையும் சென்னை -----
72 1950 திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர் திருக்குறள் உரைவளம் - அறத்துப்பால் சென்னை -----
73 1950 கா. அப்பாத்துரையார் திருக்குறள் மணிவிளக்க உரை (பகுதி 1) ----- -----
74 1950 மணி. திருநாவுக்கரசு முதலியார் திருக்குறள் ----- -----

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகளின் சில பண்புகள்

தொகு
  • இந்தக் காலப் பகுதியில் இரண்டு பேரியக்கங்கள் தமிழகத்தில் தோன்றி வேர்கொண்டுள்ளன: ஒன்று, திராவிட இயக்கம், மற்றொன்று தனித்தமிழ் இயக்கம். இந்த இரண்டு இயக்கங்களுமே திருக்குறளுக்கு முதன்மை தந்தன.
  • தனித்தமிழ் இயக்கம், திருக்குறளை ஒரு தனித்தமிழ் நூலாக அணுகியது. திருக்குறள் தமிழர்களின் தனிச் சிந்தனைகளின் உள்ளடக்கம்; அதில் வடமொழிச் சிந்தனைகளின் தாக்கங்கள் இல்லை; அப்படி ஒருசில இடங்களில் இருப்பதுபோல் தோன்றினும் அது வடமொழியாளர் சிந்தனைகளுக்கான எதிர்ப்புணர்வுகளே என்னும் பார்வையைத் தனித்தமிழ் இயக்கம் முன்வைத்தது. திருக்குறளின் அறத்துப்பால் மனுசிமிருதியைத் தழுவியது என்றும், பொருட்பால் அர்த்தசாஸ்திரத்தைத் தழுவியது என்றும், காமத்துப்பால் காமசூத்திரத்தைத் தழுவியது என்றும் முன்வைக்கப்பட்ட கருத்துருவாக்கங்களைத் தனித்தமிழ் இயக்கத்தார் மறுத்து, அவற்றிற்கிடையிலான வேறுபாடுகளை இனம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
  • திராவிட இயக்கத்தவர்கள் திருக்குறள் தந்தை பெரியார் அவர்களின் அரவணைப்பைப் பெற்றவுடன் அதனைப் பாமர மக்களிடம் கொண்டுசெல்லும் பெருமுனைப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அப்படிக் கொண்டு செல்லும்போது, திருக்குறள் ஒரு பகுத்தறிவு நூல் என்னும் நோக்கில் கொண்டுசெல்லத் திட்டமிட்டனர்.
  • இவ்வாறு, தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் என்னும் இவ்விரு இயக்கங்களின் எழுச்சியால் திருக்குறளுக்கான இரண்டாவது எழுச்சிக் காலம் உருவாக்கம் பெற்றுள்ளது.
  • இந்த இரு பேரியக்கங்களால் திருக்குறள் ஆய்வுகள் புதிய பரிணாமங்களைப் பெற்றன. தனித்தமிழ் இயக்கத்தவர்களுள் ஒரு சிலர், பரிமேலழகரின் வடவர் சார்புக் கருத்துகளை மறுத்து, அதில், தமிழர்களின் சமயமான சைவம் சார்ந்த கருத்துகளே பெரிதும் உள்ளன என்னும் கருதுகோளை நெஞ்சில் வைத்துத் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். வேறு சிலர் திருக்குறள் ஒரு சமயச் சார்பற்ற நூல் என்னும் நோக்கில் தம் பயணத்தைத் தொடர்ந்தனர்.
  • திராவிட இயக்கத்தவர்கள், திருவள்ளுவர் ஒரு கடவுள் மறுப்பாளர் என்னும் நோக்கில் தங்கள் கருத்துகளை முன்வைத்துத் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
  • பரிமேலழகர் உரை இவ்விரு இயக்கத்தாரின் பார்வைக்கும் அடிப்படை இலக்காகியது.
  • 1926-1950 காலகட்டத்தில் பரிமேலழகரின் உரை அப்படியே அச்சானது இருமுறை மட்டுமே (ஆண்டுகள்: 1928; 1947). இரு உரைகளும் சென்னையிலிருந்தே வெளியாயின. இரு உரைநூல்கள் பரிமேலழகர் உரைக்கு விளக்கமாக வெளியாயின (ஆ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, 1937; கு. சடகோப ராமானுஜாச்சாரியார், 1937). 1901-1925 காலகட்டத்தில் வெளிவந்த உரைகளுள் மு.ரா. அருணாசலக் கவிராயரின் திருக்குறள் மூலமும் தெளிபொருள் வசனமும் என்னும் உரை நூல் மட்டும் இக்காலப்பகுதியில் இருமுறை மீண்டும் பதிக்கப்படும் சிறப்பினைப் பெற்றது.
  • 1926-1950 காலகட்டத்தில் ஏற்பட்ட சமுதாய விழிப்புணர்வின் காரணமாக ஏற்பட்ட தனித்தமிழ் இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் ஆகியவற்றின் விளைவாகத் திருக்குறளுக்குப் பல புதிய உரைகள் தோன்றின. அவற்றுள் பல உரைகள் பேரளவு பரிமேலழகரின் உரையைத் தழுவியனவாக உள்ளன. ஒரு சில குறட்பாக்களுக்குப் புதிய விளக்கங்களும் தரப்பட்டன. இவ்வகையில் வெளியான உரைநூல்கள் 17. அவற்றுள் ஆ. அரங்கநாத முதலியார் வெளியிட்ட நூல் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கொண்டிருந்தது.
  • தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கம் பெற்ற நிலையில் சில சான்றோர் பெருமக்கள் திருக்குறளுக்குப் புத்துரை காண முயன்றுள்ளனர். இவ்வாறு புதுமை புகுத்தி உருவான உரை நுல்கள் இவை:

- வ.உ. சிதம்பரம் இயற்றிய "திருக்குறள் அறத்துப்பால் விருத்தியுரையுடன்" என்ற நூல் (1935)
- முனைவர் வ.சுப. மாணிக்கம் இயற்றிய "உரைநடையில் 1330 திருக்குறள்" என்ற நூல் (1936)
- திரு. வி. கலியாண சுந்தரனார் இயற்றிய "திருக்குறள் விரிவுரை - பாயிரம்" என்ற நூல் (1939)
- அவரே இயற்றிய "திருக்குறள் விரிவுரை - அறத்துப்பால் - இல்வாழ்க்கையியல்"என்ற நூல் (1941)
- மு. வரதராசனார் இயற்றிய "திருக்குறள் தெளிவுரை" என்ற நூல் (1949)
- புலவர் அ.மு. குழந்தை இயற்றிய "திருக்குறள் குழந்தையுரை" என்ற நூல் (1949)

இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகள்

தொகு
தொடர் வரிசை எண் அச்சிடப்பட்ட ஆண்டு ஆசிரியர் பெயர் நூல் பெயர்த் தலைப்பு அச்சகம்/பதிப்பகம் குறிப்புகள்
75 1951 திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர் திருக்குறள் உரைவளம் - பொருட்பால் சென்னை -----
76 1951 கிருஷ்ணசாமி நாயுடு திருக்குறள் பரிமேலழகருரையும் விசேச ஞான விருத்தியும் மதுரை -----
77 1951 கா. அப்பாத்துரையார் திருக்குறள் மணிவிளக்க உரை (பகுதி 2) ----- -----
78 1951 ஈக்காடு சபாபதி முதலியார் திருக்குறள் விளக்கவுரை திருமகள் கம்பெனி, சென்னை புதிய உரை
79 1952 திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர் திருக்குறள் உரைவளம் - காமத்துப்பால் சென்னை -----
80 1952 கே.எம். வேங்கடராமையா திருக்குறள் தமிழ்மறை - குறிப்புரையுடன் காசிமடம், திருப்பனந்தாள் புதிய உரை
81 1952 அர்ச்சுனனார் குறள் நூற்பாயிரமும் விளக்கவுரையும் சுதர்சன மன்றம், சென்னை புதிய உரை
82 1952 மயிலை சிவமுத்து திருக்குறள் காமத்துப்பால் உரை ----- -----
83 1953 மயிலை சிவமுத்து திருக்குறள் பொருட்பால் உரை ----- -----
84 1953 மயிலை சிவமுத்து திருக்குறள் உரை முழுவதும் ----- -----
85 1953 பால்வண்ணனார் திருக்குறள் சிறப்புரை சிறீமகள் கம்பெனி, சென்னை புதிய உரை
86 1953 பாலூர் கண்ணப்ப முதலியார் குறள் வசனம் (அறத்துப்பால்) ஒற்றுமை ஆபிஸ், சென்னை புதிய உரை
87 1953 வை. சுந்தரேச வாண்டையார் திருக்குறள் பொருட்பால் திருவையாறு குமரகுருபரன் சங்கம், சிறீவைகுண்டம், திருநெல்வேலி புதிய உரை
88 1954 ஜி. வரதராஜன் திருக்குறள் உரை விளக்கம் திருவள்ளுவர் நிலையம், திருச்சி புதிய உரை
89 1954 ச. வெள்ளைச்சாமி நாடார் திருக்குறள் விளக்க உரை சதானந்த அச்சகம், விருதுநகர் புதிய உரை
90 1954 நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை திருக்குறள் புது உரை இன்பநிலையம், சென்னை புதிய உரை
91 1954 எம். இ. வீரபாகு பிள்ளை திருக்குறள் எளிய உரை ஒற்றுமை ஆபிஸ், சென்னை புதிய உரை
92 1954 பாத்தன் திருக்குறள் விவேக விருத்தியுரை தெய்வமகள் விலாச அச்சகம், சென்னை புதிய உரை
93 1955 சாமி பழனியப்பன் வள்ளுவர் தந்த காதல் இன்பம் மதி நிலையம், சென்னை புதிய உரை
94 1955 ரா.ந. கல்யாணசுந்தரம் தொகுப்புத் திருக்குறள் (மூலமும் உரையும்) வேளாள அச்சுக்கூடம், கோயமுத்தூர் புதிய உரை
95 1956 தி லிட்டில் ப்ளவர் கம்பெனி வள்ளுவர் வாய்மொழியும் தெள்ளிய உரையும் சென்னை புதிய உரை
96 1957 வை. சுந்தரேச வாண்டையார் திருக்குறள் - அறத்துப்பால் பாண்டியன் மின் அச்சகம், சிதம்பரம் புதிய உரை
97 1957 திருப்பனந்தாள் காசிமடம் திருக்குறள் உரைக்கொத்து - அறத்துப்பால் ----- -----
98 1958 திருப்பனந்தாள் காசிமடம் திருக்குறள் உரைக்கொத்து - பொருட்பால் ----- -----
99 1957 முனைவர் இரா. சாரங்கப்பாணி திருக்குறள் உரைவேற்றுமை - அறத்துப்பால் ----- -----
100 1958 முனைவர் இரா. சாரங்கப்பாணி திருக்குறள் உரைவேற்றுமை - பொருட்பால் ----- -----
101 1959 திருப்பனந்தாள் காசிமடம் திருக்குறள் உரைக்கொத்து - காமத்துப்பால் ----- -----
102 1959 செ.ரெ. இராமசாமிப் புலவர் திருக்குறள் பொருள் விளக்கம் கழகம், சென்னை புதிய உரை
103 1959 சி. இலக்குவனார் திருக்குறள் எளிய பொழிப்புரை வள்ளுவர் பதிப்பகம், சென்னை புதிய உரை
104 1959 சாமி. சிதம்பரனார் திருக்குறள் பொருள் விளக்கம் ஸ்டார் பிரசுரம், சென்னை புதிய உரை
105 1959 புலவர் சண்முகசுந்தரனார் திருக்குறள் தெளிவு ஸ்டார் பிரசுரம், சென்னை புதிய உரை
106 1960 அரசுமணி திருக்குறள் எளிய உரை அருணோதயம், சென்னை புதிய உரை
107 1960 பண்டித மீ. கந்தசாமி புலவர் திருக்குறள் தெளிபொருள் கோல்டன் பிரஸ், சென்னை புதிய உரை
108 1962 டாக்டர் மு. கோவிந்தசாமி திருக்குறள் நயவுரை பாரி நிலையம், சென்னை புதிய உரை
109 1962 வெ. கண்ணையன் திருக்குறள் பொருட்பால் சென்ன புதிய உரை
110 1962 க.தி. மாணிக்கவாசகர் வான்புகழ் வள்ளுவர் மதுரை புதிய உரை
111 1965 வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் குறள் மூலமும் பரிமேலழகருரையும் சென்னை புதிய உரை
112 1967 செந்துறை முத்து திருக்குறள் தெளிவான உரை வானதி பதிப்பகம், சென்னை புதிய உரை
113 1967 ரா.வே. ருத்திரப்பா திருக்குறள் மாணவர் பதிப்பு ஜெயக்குமாரி ஸ்டோர்ஸ், நாகர்கோவில் புதிய உரை
114 1968 கோ. சாரங்கராசன் திருக்குறள் பாட்டும் கருத்தும் நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை புதிய உரை
115 1968 ஆர். கன்னியப்ப நாயக்கர் திருக்குறள் உரைக்களஞ்சியம் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) வானதி பதிப்பகம், சென்னை புதிய உரை
116 1969 அ.கு. ஆதித்தர் முப்பது குறளின் மெய்ப்பொருள் ----- -----
117 1969 ச. சாம்பசிவன் வள்ளுவர் தெள்ளுரை மதுரைத் திருவள்ளுவர் கழகம், மதுரை புதிய உரை
118 1969 ஞா. தேவநேயப் பாவாணர் திருக்குறள் தமிழ் மரபுரை சென்னை -----
119 1970 அழகரடிகள் திருக்குறள் அறத்துப்பால் கழகம், சென்னை புதிய உரை
120 1970 கு. சிவமணி திருக்குறள் கருத்துரை சிவா நிலையம், தஞ்சாவூர் புதிய உரை
121 1973 ஐயன் பெருமாள் கோனார் திருக்குறள் கோனார் உரை பழநியப்பா பிரதர்ஸ், சென்னை புதிய உரை

இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகளின் சில பண்புகள்

தொகு
  • 1951 முதல் 1975 வரையிலான இந்தக் கால கட்டத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. அவை:

-திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது.
- இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு 1968இல் சென்னையில் நடைபெற்றமை
- மெரினா கடற்கரையில் திருவள்ளுவர் சிலை அமைத்தமை
- தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் இருக்கைகள் அமைத்தமை, சென்னையில் வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டியமை, சட்டமன்றம் கூடும்போது ஒரு குறள் சொல்லித் தொடங்கவேண்டும் என்னும் வரைவு உருவாக்கம் பெற்றமை, அரசுப் பேருந்துகளில் திருக்குறள் எழுதி வைக்கும் அரசு ஆணை உருவாக்கம் பெற்றமை போன்ற திருக்குறள் சார்ந்த நிகழ்வுகள் இக்காலத்தில் நடந்தன. இதனால் திருக்குறள் விழிப்புணர்வு வளர்ந்தது.

  • சென்ற கால்நூற்றாண்டைவிட இந்தக் கால்நூற்றாண்டில் பரிமேலழகர் உரைப் பதிப்புகள் கூடுதலான எண்ணிக்கையில் வெளிவந்துள்ளதைக் காணமுடிகிறது. சில புகழ்வாய்ந்த பதிப்பகங்கள் அந்த உரையை வெளியிட முன்வந்தன. அவை: பி. இரத்தினநாயகர் சன்ஸ் (சென்னை); கழகம் (சென்னை); கஜபதி நாயகர், வள்ளுவர் ஆலயம் (சென்னை); காசிமடம் (திருப்பனந்தாள்); சக்தி காரியாலயம் (சென்னை); அழகுப் பதிப்பகம் (காரைக்குடி); பாரதி பதிப்பகம் (சென்னை); பழநியப்பா பிரதர்ஸ் (சென்னை); வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் (சென்னை); புலியூர்க்கேசிகன், பூம்புகார் பதிப்பகம் (சென்னை).
  • 1960களில் மட்டும் பாரதி பதிப்பகத்தார் பரிமேலழகர் உரையை ஆறு பதிப்புகள் வெளிட்டுள்ளதைக் காண முடிகிறது. இது இக்காலத்தில் அந்த உரைக்கு இருந்த வரவேற்பைக் காட்டுகிறது. பரிமேலழகருரையை எதிர்த்து தனித்தமிழ் இயக்கமும் திராவிட இயக்கமும் கருத்துகளைத் தெரிவித்துவந்த நிலையில், அதனைப் பலரும் அறிய வேண்டும் என்று எண்ணிய எண்ணமும், எதிர்ப்புக்கு எதிரான எண்ணமும் இந்த எண்ணிக்கைப் பெருக்கத்திற்குக் காரணங்களாகி இருக்கலாம்.
  • கிருஷ்ணசாமி நாயுடு, வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார், ஆர். கன்னியப்ப நாயக்கர் ஆகியோர் பரிமேலழகருரையைப் பரப்பும் நோக்கத்துடன் அதன் மறுபதிப்புகளை வெளியிட்டனர்.
  • ஆயினும் இந்த 25 ஆண்டுக்கால கட்டத்தில் வெளியிடப்பட்ட உரைநூல்களுள் பல பரிமேலழகருரையின் அணுகுமுறையினின்று வேறுபட்டுச் செல்கின்ற புதுமுறை உரைகளாக உள்ளன.
  • பரிமேலழகர் உரை தவிர பண்டைய உரையாசிரியர்களான மணக்குடவர், காலிங்கர், பரிப்பெருமாள், பரிதியார் ஆகியோரின் உரைகளும் இக்காலப் பகுதியில் வெளிவந்துள்ளன.
  • வித்துவான் ச. தண்டபாணி தேசிகரின் திருக்குறள் உரைவளம், இரா. சாரங்கபாணியின் திருக்குறள் உரை வேற்றுமைகள், திருப்பனந்தாள் காசிமடம் வெளியிட்ட திருக்குறள் உரைக்கொத்து, கி.வா. ஜகந்நாதனின் திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு, மு. சண்முகம் பிள்ளையின் திருக்குறள் அமைப்பும் முறையும் ஆகியவையும் இக்காலப் பகுதியில் வெளிவந்தன. இவை திருக்குறளை ஒப்பிட்டுப் பார்க்கும் பார்வைக்குத் தூண்டுதலாக அமைந்திருந்தன.
  • தனித்தமிழ் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரின் "திருக்குறள் தமிழ் மரபுரை" என்னும் உரைநூலும் இக்காலப் பகுதியில் வெளியானது. புலவர் குழந்தையின் உரை பல பதிப்புகளாக இக்காலத்தில் வெளிவந்தது.
  • மொத்தத்தில் இந்தக் காலப் பகுதி திருக்குறளுக்கான ஒரு எழுச்சிமிகு காலப் பகுதியாகத் தோற்றம் அளிக்கிறது. திருகுறளுக்கான மூன்றாவது எழுச்சிக் காலப் பகுதியாக இந்தப் பகுதி அமைகிறது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டில் அச்சான திருக்குறள் உரைகள்

தொகு
தொடர் வரிசை எண் அச்சிடப்பட்ட ஆண்டு ஆசிரியர் பெயர் நூல் பெயர்த் தலைப்பு அச்சகம்/பதிப்பகம் குறிப்புகள்
122 1978 கவிஞர் கண்ணதாசன் திருக்குறள் காமத்துப்பால் ----- -----
123 1978 எஸ்.என். சிறீராமதேசிகன் திருக்குறள் பொருட்பால் தெளிவுரையுடன் ----- -----
124 1981 திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர் திருக்குறள் உரைக்களஞ்சியம் - பாயிரவியல் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -----
125 1983 திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர் திருக்குறள் உரைக்களஞ்சியம் - இல்லறவியல் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -----
126 1983 திருக்குறளார் வீ. முனுசாமி உலகப் பொதுமறை திருக்குறள் விளக்கம் ----- -----
127 1983 முனைவர் கு. மோகனராசு முப்பாலில் முச்சீர் முத்துகள் ----- -----
128 1983 பி.சி. கணேசன் தினம் ஒரு குறள் விளக்கவுரை ----- -----
129 1985 மணிமேகலைப் பிரசுரம் திருக்குறள் எளிய உரை ----- -----
130 1985 இரா. இராசேந்திரன் திருக்குறள் தெளிவுரை ----- -----
131 1985 எச். வைத்தியநாதன் மணவர்க்கு திருக்குறள் அறத்துப்பால் ----- -----
132 1985 எச். வைத்தியநாதன் மாணவர்க்கு திருக்குறள் பொருட்பால் ----- -----
133 1986 சிந்தனைச் செம்மல் கு.ச. ஆனந்தன் திருக்குறள் உண்மைப் பொருள் ----- -----
134 1986 புலியூர்க் கேசிகன் திருக்குறள் பொழிப்புரையுடன் சென்னை -----
135 1986 தி. சிறீநிவாசன் திருக்குறள் தெளிவுரையுடன் ----- -----
136 1986 குறளாயம் தமிழ்மறை இன்பம் ----- -----
137 1986 திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர் திருக்குறள் உரைக்களஞ்சியம் - துறவறவியலும் ஊழியலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -----
138 1987 புலவர் மா.க. காமாட்சிநாதன் திருக்குறள் செம்பொருட் சிற்றுரை ----- -----
139 1987 புலவர் இரா. நாராயணசாமி திருக்குறள் எளிய உரை ----- -----
140 1987 டாக்டர் இரா. அருளப்பா திருக்குறள் புத்தாய்வு மெய்ப்பொருள் பதிப்பகம், சென்னை -----
141 1988 திருக்குறள் பீடம் திருக்குறள் (அறம் - இனிய கருத்து விளக்கம்) ----- -----
142 1989 புலவர் அ. ஆறுமுகம் திருக்குறள் சிறப்புரை ----- -----
143 1989 டாக்டர் பூவண்ணன் திருக்குறள் மூலமும் சிறப்புரையும் ----- -----
144 1989 ப.கோ. குலசேகரன் திருக்குறள் சிறுவர்க்கான எளிய உரை ----- -----
145 1989 முனைவர் இரா. சாரங்கபாணி திருக்குறள் உரைவேற்றுமை - அறத்துப்பால் அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் -----
146 1990 திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர் திருக்குறள் உரைக்களஞ்சியம் - பொருட்பால்-அரசியல் மதுரை காமராசர் பலகலைக்கழகம், மதுரை -----
147 1990 திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர் திருக்குறள் உரைக்களஞ்சியம் - காமத்துப்பால் மதுரை காமராசர் பலகலைக்கழகம், மதுரை -----
148 1990 இரா. இளங்குமரனார் திருக்குறள் வாழ்வியலுரை ----- -----
149 1990 டாக்டர் ம.வி. சுதாகர் திருக்குறள் தெளிவுரையுடன் ----- -----
150 1990 முதுபெரும்புலவர் ஆ. பாண்டுரங்கனார் திருக்குறள் தெளிவுரை ----- -----
151 1990 தவத்திரு தேமொழியார் சுவாமிகள் மாமறை பேசுகிறது - 1,2,3,4,5,6 ----- -----
152 1990 டாக்டர் சுப. அண்ணாமலை திருக்குறள் சிந்தனைகள் - அறத்துப்பால், பொருட்பால் 1, பொருட்பால் 2, காமத்துப்பால் ----- -----
153 1990 பூவை கு. அரிஅரன் அக இருள் அகற்றும் அருள்தீபம் ----- -----
154 1990 முல்லை பி.எல். முத்தையா திருக்குறள் அறிவுரை ----- -----
155 1990 டாக்டர் சேயோன் திருவள்ளுவர் ஆத்திசூடி ----- -----
156 1991 டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் திருக்குறள் நாவலர் தெளிவுரை ----- -----
157 1991 முனைவர் வ. சுப. மாணிக்கனார் திருக்குறள் தெளிவுரை ----- -----
158 1991 டாக்டர் மு.பெரி.மு. இராமசாமி திருக்குறளுக்கு மிக மிக எளிய உரை ----- -----
159 1991 ஞா. மாணிக்கவாசகன் திருக்குறள் இனிய உரை - எளிய உரை ----- -----
160 1991 டாக்டர் எஸ். இராம கிருஷ்ணன் திருக்குறள் ஆய்வுரையுடன் ----- -----
161 1991 முல்லை பி.எல். முத்தையா திருக்குறள் முத்துக்கள் ----- -----
162 1992 வி.பி.சி. பப்ளிகேஷன் திருக்குறள் தெளிவுரை ----- -----
163 1992 எம். நாராயணவேலுப் பிள்ளை திருக்குறள் மூலமும் எளிய தமிழில் உரையும் ----- -----
164 1992 முனைவர் இரா. சாரங்கபாணி திருக்குறள் உரைவேற்றுமை - பொருட்பால் ----- -----
165 1992 முனைவர் இரா. சாரங்கபாணி திருக்குறள் உரைவேற்றுமை - காமத்துப்பால் அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் -----
166 1992 டாக்டர் சேயோன் திருக்குறள் அமுதமொழி ----- -----
167 1993 டாக்டர் ந. சுப்புரெட்டியார் திருக்குறள் தெளிவு ----- -----
168 1993 பேராசிரியர் ப. முருகன் திருக்குறள் திறவுகோல் (இனிய எளிய உரை) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை -----
169 1993 புலவர் சி. இராசியண்ணன் திருக்குறள் எளிய உரை ----- -----
170 1993 தே. ப. சின்னசாமி திருக்குறள் மூலமும் உரையும் ----- -----
171 1994 வ. சண்முகசுந்தரம் திருக்குறள் ஒரு வரி உரை ----- -----
172 1994 யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி திருக்குறள் உட்பொருள் விளக்கம் ----- -----
173 1994 டாக்டர் ரா. சீனிவாசன் திருக்குறள் செய்திகள் ----- -----
174 1994 புலவர் அ. மாணிக்கம் திருக்குறள் தெளிவுரை ----- -----
175 1994 முனைவர் மு. மோகனராசு திருக்குறள் மக்கள் உரை ----- -----
176 1995 டாக்டர் ஜனகாசுந்தரம் திருக்குறள் தொகுப்புரை ----- -----
177 1995 சுஜாதா திருக்குறள் புதிய உரை ----- -----
178 1995 புலவரேறு அரிமதி தென்னகன் திருக்குறள் மனித நேய உரை ----- -----\
179 1995 பூவை அமுதன் திருக்குறள் எளிய தெளிவுரையுடன் ----- -----
180 1995 கலைமாமணி டாக்டர் வாசவன் திருக்குறள் தெளிவுரை ----- -----
181 1995 தமிழ் வேட்பன் திருக்குறள் எளிய தெளிவுரை ----- -----
182 1995 பேராசிரியர் எம்மார் அடைக்கலசாமி திருக்குறள் மூலமும் உரையும் ----- -----
183 1996 திருக்குறள் இராம. கனகசுப்புரத்தினம் திருக்குறள் உணர்வுரை ----- -----
184 1996 கலைஞர் மு. கருணாநிதி திருக்குறள் கலைஞர் உரை சென்னை -----
185 1996 வே. கபிலன் திருக்குறள் எளிய உரை ----- -----
186 1996 புலவர் து. அரங்கன் திருக்குறள் கருத்துரை ----- -----
187 1996 பாவண்கிள்ளி திருக்குறள் புதிய தெளிவுரை ----- -----
188 1996 திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர் திருக்குறள் உரைக்களஞ்சியம் - பொருள்பால்-அங்கவியல் 1 மதுரை காமராசர் பலகலைக்கழகம், மதுரை -----
189 1997 சி. வெற்றிவேல் திருக்குறள் ஒரு வரி உரை ----- -----
190 1997 பாவலரேறு பெருஞ்சித்திரனார் பெருஞ்சித்திரனார் திருக்குறள் மெய்ப்பொருளுரை ----- -----
191 1997 முனைவர் அ. சங்கரவள்ளிநாயகம் திருக்குறள் விரிவுரை ----- -----
192 1997 பாவலர் முல்லைவேந்தன் திருக்குறள் தெளிபொருள் பொழிப்புரை ----- -----
193 1997 கவிஞர் க. பாலகிருஷ்ணன் திருக்குறள் பேச்சுத் தமிழ் உரை ----- -----
194 1997 முல்லை பி. எல். முத்தையா திருக்குறள் கூறும் இன்ப வாழ்க்கை ----- -----
195 1998 தமிழவேள் இராம சுப்பிரமணியன் திருக்குறள் தெளிவுரை ----- -----
196 1998 கோ. பார்த்தசாரதி திருக்குறள் தெளிவுரை ----- -----
197 1998 நா. விவேகானந்தன் திருக்குறள் தெளிவுரை விவேகானந்தா பதிப்பகம், மேலச்சூரங்குடி -----
198 1998 முனைவர் இரா. சாரங்கபாணி திருக்குறள் இயல்புரை ----- -----
199 1999 புலவர் நாக. சண்முகம் திருக்குறள் மூலமும் உரையும் ----- -----
200 1999 நல்லாமூர் கோ. பெரியண்ணன் திருக்குறள் மாணவர் எளிய உரை ----- -----
201 1999 திருக்குறள் மு. அன்வர் பாட்சா திருக்குறள் தமிழ் ஆங்கில உரை ----- -----
202 1999 டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் உலகப் பொதுமறை ----- -----
203 1999 தமிழண்ணல் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் நுண்பொருளுரை ----- -----
204 1999 மேலகரம் முத்துராமன் திருக்குறள் ஒரு வரி உரை ----- -----
205 1999 பேராசிரியர் கருவை பழனிசாமி திருக்குறள் கருத்து நயம் (அறத்துப்பால்) ----- -----
206 1999 பேராசிரியர் கருவை பழனிசாமி திருக்குறள் பொருட்பால் கருத்து நயம் ----- -----
207 1999 டாக்டர் சாலமன் பாப்பையா திருக்குறள் உரையுடன் ஜெயா பதிப்பகம், மதுரை -----
208 1999 திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர் திருக்குறள் உரைக்களஞ்சியம் - பொருள்பால்-அங்கவியல் 2 மதுரை காமராசர் பலகலைக்கழகம், மதுரை -----
209 2000 புலவர் கருப்பூர் மு. அண்ணாமலை திருக்குறள் தெளிவுரை ----- -----
210 2000 புலவர் தனுஷ்கோடி திருக்குறள் எளிய தெளிவுரை ----- -----
211 2000 கவிமாமணி கல்லாடன் திருக்குறள் உரைக்கனிகள் ----- -----
212 2000 ராதா முரளி திருக்குறள் மூலமும் உரையும் ----- -----
213 2000 திருக்குறள் விருகை ஆடலரசு திருக்குறள் விளக்க உரை ----- -----
214 2000 நா.சி. கமலநாதன் திருக்குறள் புதிய உரை (அறத்துப்பால்) ----- -----
215 2000 டாக்டர் சு. சண்முகசுந்தரம் திருக்குறள் காவ்யா உரை சென்னை -----
216 2000 பேராசிரியர் பே.சு. கோவிந்தராசன் உலகப் பொதுமறை திருக்குறள் ----- -----
217 2000 கவிஞர் பவானிதாசன் உலகப் பொதுமறை திருக்குறள் ----- -----
218 2000 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா திருக்குறள் புதிய உரை ----- -----
219 2000 நேரு குமாரி திருக்குறள் ஒரு வரி உரை ----- -----
220 2000 ஆசி. கண்ணாம்பிரத்தினம் திருக்குறள் ஒரு வரி உரை ----- -----
221 2000 குமரி. சு. நிலகண்டன் திருக்குறள் 2000 ----- -----
222 2000 முனைவர் அ. ஆறுமுகம் மணிக்குறள் நூறு விளக்க உரை ----- -----
223 2000 கிள்நாமக்காரர் கிரீடாதி திருக்குறள் உயிர் தமிழ் ----- -----
224 2000 கருமலைத் தமிழாழன் திருக்குறள் எளிய உரை ----- -----
225 2000 முனைவர் அர. சிங்காரவேலன் திருக்குறள் தெளிவுரை ----- -----
226 2000 ஆரூர் தாஸ் அய்யன் திருக்குறள் அகரவரிசைக் குறள் அகராதி ----- -----
227 2000 இராஜகாந்தீபன் ஆளவும் வாழவும் ----- -----
228 2000 மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் திருக்குறள் தமிழ் மரபுரை சிறீஇந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை மறுபதிப்பு

இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டில் அச்சான திருக்குறள் உரைகளின் சில பண்புகள்

தொகு
  • 1976-2000 ஆண்டுக் கால கட்டத்தில் திருக்குறள் சார்ந்த பல நிகழ்வுகள் நடந்தன. அவற்றுள் சிலவற்றைக் குறிப்பிடலாம். மதுரையில் 1981இலும் தஞ்சையில் 1995இலும் உலகத் தமிழ் மாநாடுகள் நடந்தேறின. 1976இல் வள்ளுவர் கோட்டம் திறந்துவைக்கப்பட்டது. திருக்குறள் பேரவை, குறளாயம், உலகத் திருக்குறள் மையம் என்னும் அமைப்புகள் தோன்றின. தமிழக அரசு திருக்குறள் ஆய்வில் சிறந்த சான்றோருக்கு திருவள்ளுவர் விருது வழங்குவதாக 1986இல் அறிவித்தது. 2000ஆம் ஆண்டில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களிடையே திருக்குறள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டியெழுப்பும் காரணிகள் ஆயின.
  • பரிமேலழகர் உரைகள் சில இக்காலத்தில் வெளிவந்தாலும், புதிய உரைகள் மிகப்பல இக்காலத்தில் வெளியிடப்பட்டன. மேலும் பண்டைய உரையாசிரியர்களை ஒப்பிட்டு நோக்கும் நூல்களும் வெளியிடப்பட்டன.
  • மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகரின் "திருக்குறள் உரைக்களஞ்சியம்" ஏழு தொகுதிகளாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழி வெளிவந்தது. முனைவர் இரா. சாரங்கபாணியின் "திருக்குறள் உரைவேற்றுமை" மூன்று தொகுதிகளாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழி வெளிவந்தது. இவை இரண்டு தொகுப்புகளும் முன்பு வந்த தொகுப்பாய்வுகளின் விரிநிலைகளாகும். இந்தத் தொகுப்புரைகள் வெளிவந்துள்ளதால், பழைய உரையாசிரியப் பெருமக்களின் உரைகளை வெளியிடும் பதிப்புகள் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
  • ஏறத்தாழ 90 அறிஞர்கள் இக்காலப் பகுதியில் திருக்குறள் புத்துரைகள் வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்தக் காலப்பகுதியைப் புத்துரைகளின் எழுச்சிக் காலம் என்று கூறலாம். இவற்றுள் சமயச் சார்புரைகளும் கடவுள் மறுப்புக் கோட்பாட்டர்கள் உரைகளும் அடங்கும்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் திருக்குறள் உரைகள்

தொகு
தொடர் வரிசை எண் அச்சிடப்பட்ட ஆண்டு ஆசிரியர் பெயர் நூல் பெயர்த் தலைப்பு அச்சகம்/பதிப்பகம் குறிப்புகள்
229 2001 முனைவர் ச.வே. சுப்பிரமணியன் திருக்குறள் நயவுரை ----- -----
230 2001 ஆர். பொன்னம்மாள் திருக்குறள் ----- -----
231 2001 கவி. குறளேழுவர் அணிநலம் கொழிக்கும் திருக்குறள் ----- -----
232 2001 புலவர் குடந்தையான் திருக்குறள் ஒரு பகுத்தறிவுப் பார்வை பல்லவநாதம் இலக்கிய வெளியீடு, சென்னை -----
233 2002 புலவர் வ. சங்கரன் திருக்குறள் தெளிபொருள் ----- -----
234 2002 புலவர் ஆ. காளத்தி திருக்குறள் தெளிவுரை ----- -----
235 2002 முனைவர் செ. உலகநாதன் திருக்குறள் செந்தமிழ் உரை ----- -----
236 2002 அழகர் சுப்பராஜ் திருக்குறள் அறிவுரை ----- -----
237 2002 ஜெ. நாராயணசாமி திருக்குறள் ஆங்கில உரையுடன் சுரா புக்ஸ், சென்னை -----
238 2002 எஸ். கெளமாரீஸ்வரி திருக்குறள் பரிமேலழகர் உரை சாரதா பதிப்பகம், சென்னை -----
239 2003 டாக்டர் பெ. கிருஷ்ணன் திருக்குறள் தெளிவுரை ----- -----
240 2003 பகலவன் திருக்குறள் கருத்துரை ----- -----
241 2003 புலவர் கோ. இளையபெருமாள் எளிய உரையில் உலகப் பொதுமறை ----- -----
242 2003 தொ. பரமசிவன் திருக்குறள் ----- -----
243 2003 அ.மா. சாமி திருக்குறள் செம்பதிப்பு (கருத்துரை) நவமணி பதிப்பகம், சென்னை -----
244 2003 கே. சேதுராமன் திருக்குறள் அறத்துப்பால் ஆராய்ச்சி விளக்க உரை ----- -----
245 2003 முல்லை பி.எல். முத்தையா திருக்குறள் எளிய தமிழ் உரையுடன் ----- -----
246 2003 ச. மெய்யப்பன் (பதிப்பாசிரியர்) திருக்குறள் - மணக்குடவர் உரை மணிவாசகர் பதிப்பகம், சென்னை -----
247 2004 டாக்டர் கே. என். சரஸ்வதி, பேராசியர் பா. அர்த்தநாரீஸ்வரர் தெய்வப்புலவர் அருளிய திருக்குறள் எளிய உரையுடன் ----- -----
248 2004 ஆர்.பி. சாரதி திருக்குறள் மிக எளிய உரை ----- -----
249 2004 சாரதா பதிப்பகம் திருக்குறள் எளிய உரை ----- -----
250 2004 முனைவர் சுந்தர ஆவுடையப்பன் திருக்குறள் எளிய உரை ----- -----
251 2004 பொற்கோ திருக்குறள் அறத்துப்பால் ----- -----
252 2004 பொற்கோ திருக்குறள் பொருட்பால் 1 ----- -----
253 2004 பொற்கோ திருக்குறள் பொருட்பால் 2 ----- -----
254 2004 பொற்கோ திருக்குறள் காமத்துப்பால் ----- -----
255 2004 ஈசாந்திமங்கலம் முருகேசன் திருக்குறள் எளிய உரை ----- -----
256 2005 முனைவர் பா. வளன் அரசு திருக்குறள் விளக்கம் ----- -----
257 2005 தமிழ்மறையான் திரிக்குறள் - திருக்குறள் ----- -----
258 2005 திருக்குறள் நம்பி தங்க. பழமலை திருக்குறள் நயவுரை ----- -----
259 2006 பேராசிரியர் சாலமன் பாப்பையா திருக்குறள் உரையுடன் கவிதா பப்ளிகேஷன், சென்னை திருத்திய முதல் பதிப்பு
260 2006 க.ப. அறவாணன் திருவள்ளுவம் தமிழ்க் கோட்டம், சென்னை -----

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் திருக்குறள் உரைகளின் சில பண்புகள்

தொகு
  • 2001-2006 காலகட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட சான்றோர்கள் திருக்குறளுக்குப் புதிதாக உரைகள் எழுதியுள்ளனர். பழைய உரைகளுள் பரிமேலழகர் உரை மட்டும் சில பதிப்புகள் வெளிவந்துள்ளன.

10ஆம் நூற்றாண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை திருக்குறளுக்கு உரை எழுதியோரின் தொகுப்புப் பட்டியல்

தொகு
வரிசை எண் 10 முதல் 13ஆம் நூற்றாண்டுகள் உட்பட 14 முதல் 18ஆம் நூற்றாண்டுகள் வரை 1801 முதல் 1900 வரை 1900 முதல் 2000 வரை 2001 முதல் 2005 வரை 2006ஆம் ஆண்டு; விபரங்கள் கிடைக்கப்பெறாதவர்கள்
1 பண்டைக்கால உரையாசிரியர்கள் 10 பேர்: மணக்குடவர், பரிதியார், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேழகர் (உரை கிடைக்கப்பெற்றவர்கள்), தருமர், தாமத்தர், நச்சர், மல்லர், திருமலையர் (உரை கிடைக்கப்பெறாதவர்கள்) ----- ----- ----- ----- -----
2 ----- 4 உரையாசிரியர்கள் ----- ----- ---- ------
3 ----- ----- 8 உரையாசிரியர்கள் ----- ----- ----
4 ----- ----- ----- 1901-1910: 3 உரையாசிரியர்கள்; 1911-1920: 1 உரையாசிரியர்; 1921-1930: 6 உரையாசிரியர்கள்; 1931-1940: 7 உரையாசிரியர்கள்; 1941-1950: 13 உரையாசிரியர்கள்; 1951-1960: 24 உரையாசிரியர்கள்; 1961-1970: 13 உரையாசிரியர்கள்; 1971-1980: 3 உரையாசிரியர்கள்; 1981-1990: 24 உரையாசிரியர்கள்; 1991-2000: 63 உரையாசிரியர்கள் ----- -----
5 ----- ----- ----- ---- 22 உரையாசிரியர்கள் -----
6 ----- ----- ----- ----- ----- 1 உரையாசிரியர்
7 ----- ----- ----- ----- ----- விபரங்கள் கிடைக்கப்பெறாதவர்கள்: 18. ஆக, மொத்த உரையாசிரியர்கள்: 220
குறிப்புகள்
  • 1901 முதல் 1920 வரையிலான காலப்பகுதியில் பரிமேலழகர் உரைக்குப் பெரும் மதிப்பிருந்த காரணத்தால் புதிய உரையாசிரியர்கள் அதிகமாக உருவாக்கம் பெறவில்லை.
  • 1971 முதல் 1980 வரையிலான காலத்தில் உரையாசிரியர்கள் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி காணப்படுகிறது. இதற்கு அக்காலப் பகுதியில் நிலவிய அரசியல் போக்குகளே பெரும் காரணங்கள் என்று கூறலாம்.

ஆதாரம்

தொகு
  1. திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, திருக்குறள் உரை வகைகள், மணிவாசகர் பதிப்பகம், 31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600108. முதல் பதிப்பு: செப்டம்பர் 2005.