திருக்கூடலூர் ஜெகத்ரட்சகப் பெருமாள் கோயில்

திருக்கூடலூர் ஜெகத்ரட்சகப் பெருமாள் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் திருவையாறு-கும்பகோணம் சாலையில கிழக்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலில் உள்ள மூலவர் ஜெகத்ரட்சகப் பெருமாள் என்றும் வையங்காத்த பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் பூமிதேவி, நீலாதேவியுடன் நான்கு கரங்களோடு நின்ற நிலையில் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். வலது கரத்தில் செங்கோல் ஏந்திய நிலையில் உள்ளதால் உய்யவந்தான் என்றும் அழைக்கின்றனர். [1]

சிறப்பு

தொகு

தேவர்கள் நந்தக முனிவருடன் வந்து பெருமாளை வணங்கியதால் இக்கோயில் திருக்கூடலூர் என்றழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014