திருக்கோவையார் பழைய உரை

திருக்கோவையார் என்னும் நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. [1] இதன் காலம் 1150, 1275, இருவேறு ஆண்டுகளைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் ஆசிரியர் இன்னார் எனத் தெரியவில்லை. உரைநூல் பிண்டப் பொழிப்புரையாகவும், சொற்பொருள் விளக்கும் பதவுரையாகவும் உள்ளது.

காலம்

  • ’ஏவல் இளையர் தாய்வயிறு கரிப்ப’ என்னும் பாடலடி தமிழ்நெறி விளக்கம் என்னும் நூலில் வருகிறது. இந்த நூலின் காலம் 9 ஆம் நூற்றாண்டு. எனவே இந்த உரைநூலின் காலம் 9 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியது.
  • புறநானூறு எட்டாம் பாடலின் பகுதியை எடுத்துக் காட்டி இளம்பூரணர் தொல்காப்பிய உரை கூறுகிறார். [2] இளம்பூரணர் காலம் 1070-1090. இந்த உரையைத் திருக்கோவையார் பழைய உரை மறுக்கிறது. எனவே மறுக்கும் உரை பிந்தியது.
  • முந்நீர் விழா பற்றித் திருக்கோவையார் உரை கூறும் கருத்துக்களை 14 ஆம் நூற்றாண்டு நச்சினார்க்கினியர் மறுக்கிறார். இனவே திருக்கோவையார் பழைய உரை 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்பது தெளிவாகிறது.

இவ்வுரை பற்றிய சில செய்திகள்

  • பேராசிரியர் தொல்காப்பிய உரைப்பகுதிகள் இதில் மறுக்கப்பட்டுள்ளன.
  • பாலைக்கு நிலம் இன்மையால் நாநிலம் என்பர்.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. பதிப்பு – தஞ்சை சரஸ்வதிமகால் வெளியீடு, 1960
  2. தொல்காப்பியம் பொருளதிகாரம் நூற்பா 306
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கோவையார்_பழைய_உரை&oldid=1298365" இலிருந்து மீள்விக்கப்பட்டது