திருச்சிராப்பள்ளி முற்றுகை (1751–1752)

திருச்சிராப்பள்ளி முற்றுகை (Siege of Trichinopoly) என்பது சந்தா சாகிப்பின் படைகள் திருச்சி கோட்டை மீது 1751-52ல் நடத்திய முற்றுகை போராகும். இந்த முற்றுகை இரண்டாவது கர்நாடகப் போரின் ஒரு அங்கமாகும். பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி சந்தா சாகிப்பை ஆற்காடு நவாப் ஆக அங்கீகரித்தது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியின் ஆதரவுடன் நவாப் ஆக முயன்று வந்த முகமது அலி கான் வாலாஜாவிடமிருந்து திருச்சி கோட்டையைக் கைப்பற்ற சந்தா சாகிப் முயற்சித்தார். இந்த முற்றுகையின் முடிவில் பிரெஞ்சு படைகள் சரணடைந்தன; சந்தா சாகிப் தஞ்சாவூர் மராத்தியப் படைகளால் கொல்லப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. p. 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.

உசாத்துணை

தொகு