திருச்சூர் பொது நூலகம்
கேராவின் திருச்சூரில் உள்ள ஒரு பொது நூலகம்
திருச்சூர் பொது நூலகம் (Thrissur Public Library) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் நகரத்தில் 1872 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
திருச்சூர் பொது நூலகம் Thrissur Public Library | |
---|---|
நூலகத்தின் முன் பகுதி | |
நாடு | இந்தியா |
வகை | பொது நூலகம் |
தொடக்கம் | 1872 AD |
அமைவிடம் | திருச்சூர் நகரம், கேரளம் |
Collection | |
Items collected | நூல் (எழுத்துப் படைப்பு)கள், பத்திரிகைகள், நாளிதழ்கள், இதழ்கள், நிலப்படங்கள், அச்சிட்ட புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப்படிகள் |
Access and use | |
Access requirements | தொகுப்பைப் பயன்படுத்த உண்மையான தேவையுள்ள எவருக்கும் நூலகம் திறந்திருக்கும் |
வரலாறு
தொகுதிவான் ஏ சங்கரா ஐயர் 1872 ஆம் ஆண்டு திருச்சூர் பொது நூலகத்தைத் தொடங்கினார். திருச்சூரில் உள்ள புனித மரியாள் கல்லூரியில் நூலகம் முதலில் இயங்கத் தொடங்கியது. பின்னர் இது 1939 ஆம் ஆண்டில் திருச்சூர் நகர அரங்கத்தின் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டது. 1,200 சதுர அடி பரப்பளவு இடம் நூலகத்தில் உள்ளது. 1996 ஆம் ஆண்டு கணினி மயமாக்கப்பட்டு கேரளாவில் முதல் கணினிமயமாக்கப்பட்ட பொது நூலகம் என்ற சிறப்பை திருச்சூர் பொது நூலகம் பெற்றது. [1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thrissur Public Library to get a facelift". தி இந்து. 2004-06-27. Archived from the original on 2004-10-18. பார்க்கப்பட்ட நாள் 2012-03-12.
- ↑ "Thrissur Public Library celebrating 140th anniversary". City Journal. பார்க்கப்பட்ட நாள் 2012-03-12.
- ↑ "District Public Library". manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-08.[தொடர்பிழந்த இணைப்பு]