திருத்தக்க தேவர்

திருத்தக்க தேவர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமணப் புலவர். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி என்னும் நூலை இயற்றியவர்.[1] இவர் நரிவிருத்தம் என்னும் நூலையும் எழுதியுள்ளார்.

முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிலப்பதிகாரம் தமிழில் கிடைத்துள்ள காப்பியங்களில் காலத்தால் முந்தியது. அதனோடு இணைந்த இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை பழமையான ஆசிரியப்பா யாப்புடையதாய்க் கால வரிசையில் அதனையொத்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்கதைக்குப் பின்னர் முழுதும் ஆசிரியப்பாவால் காப்பியம் எழுதும் மரபு மறைந்துபோயிற்று. அடுத்துத் தோன்றியது விருத்தப்பா காப்பிய மரபு. தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கம்பராமாயணம் நூலுக்கு முன்னர் வளர்ச்சி பெறாத விருத்தங்களாலான காப்பியப் பாங்கைத் தோற்றுவித்தவராகத் திருத்தக்க தேவர் அறியப்படுகிறார்.

சான்றுகள்தொகு

  1. "Tamizh Amudham". Boston University. 13 ஜூலை 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருத்தக்க_தேவர்&oldid=3558176" இருந்து மீள்விக்கப்பட்டது