திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம்
மதுரை மாவட்டத்தில் உள்ள தொடருந்து நிலையம்
திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம் (Tiruparankundram railway station, நிலைய குறியீடு: TDN) என்பது தென்னக இரயில்வே மண்டலத்தின் மதுரை இரயில்வே கோட்டத்தில் உள்ள NSG-5 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[1] இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது.[2] இந்த நிலையம் 1876 சனவரி முதல் நாளன்று துவக்கபட்டது.[3]
திருப்பரங்குன்றம் | |||||
---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | ஜி.எஸ்.டி சாலை, திருப்பரங்குன்றம், மதுரை, தமிழ்நாடு | ||||
ஆள்கூறுகள் | 9°52′35″N 78°03′48″E / 9.876466°N 78.063334°E | ||||
ஏற்றம் | 171 மீட்டர்கள் (561 அடி) | ||||
தடங்கள் | மதுரை - திருநெல்வேலி இருப்புப்பாதை | ||||
நடைமேடை | 2 | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | பயன்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | TDN | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | மதுரை கோட்டம் | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1876 | ||||
மறுநிர்மாணம் | 2022 | இரட்டை வழிப்பாதையாக மாற்றப்பட்டது||||
மின்சாரமயம் | ஆம் | ||||
பயணிகள் | |||||
பயணிகள் 2022–23 | 227,855 (ஒரு ஆண்டுக்கு) 624 (ஒரு நாளுக்கு) | ||||
|
செயல்திறனும் வருவாயும்
தொகு2022-23 நிதியாண்டில், நிலையத்தின் ஆண்டு வருவாய் ₹5,01,84,529 (US$6,30,000) என்றும் தினசரி வருவாய் ₹1,37,492 (US$1,700) என்று இருந்தது. அதே நிதியாண்டில், ஒரு ஆண்டில் பயணிகள் எண்ணிக்கை 227,855 ஆகவும், தினசரி பயணிகளின் எண்ணிக்கையானது 624 ஆகவும் இருந்தது. அதேவேளை, நாளொன்றுக்கு வந்து சென்றவர்கள் எண்ணிக்கை 738 ஆக பதிவாகியுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 9. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
- ↑ 2.0 2.1 "Annual Originating Passengers & Earnings for the year 2022-23" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. p. 1. Archived from the original (PDF) on 5 April 2024. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
- ↑ R. P. Saxena. "Indian Railway History Time line". Irse.bravehost.com. Archived from the original on 14 July 2012. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
வெளி இணைப்புகள்
தொகு- இந்தியா தொடருந்து தகவலில் திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையம்