திருப்புல்லாணி புல்லாணியம்மன் கோயில்
திருப்புல்லாணி புல்லாணியம்மன் கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
அருள்மிகு புல்லாணியம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | இராமநாதபுரம் |
அமைவிடம்: | திருப்புல்லாணி, இராமநாதபுரம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | இராமநாதபுரம் |
மக்களவைத் தொகுதி: | இராமநாதபுரம் |
கோயில் தகவல் | |
தாயார்: | புல்லாணி அம்மன் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் புல்லாணி அம்மன் சன்னதி உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகனாத பெருமாள் ப்ரும்மோத்ஸவ காலங்களில் சில வழக்கங்கள் கடைப் பிடிக்கப் படுகின்றன.
அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் காளி ஓட்டம் என்னும் நிகழ்ச்சி நடக்கும். மூன்றாம் நாள் இரவில் கோவிலிலிருந்து மரியாதைகளுடன், தளிகை மற்றும் பூசணிக்காய் (பலியாக – முன்னாள்களில் ஆடோ கோழியோ போகுமாம்) இவற்றை மேளதாளத்துடன் ஆலய அதிகாரிகள் திருப்புல்லாணி ஊரை வலம் வந்து அதன்பின் ஊருக்கு வெளியே சுமார் 2 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த புல்லாணி அம்மன் என்னும் எல்லைக் காவல் தெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபட்டு அதன்பின்னேதான் உரிய நாளில் அங்குரார்ப்பணம் செய்து உத்ஸவம் ஆரம்பிக்கும்.
அதேபோல, அங்குரார்ப்பண நாளன்று ரக்ஷாபந்தனம் செய்துகொள்ளும் பட்டர், ஸ்தானிகர் இவர்களுக்கு அடுத்தபடியாக இந்தப் புல்லாணி அம்மன் கோவில் பூசாரிக்கும் மரியாதைகள் செய்து வஸ்திர தானம் அளிக்கப் படும்.
பெரியவர்கள் சிலர் புல்லாணி அம்மனாகத் தான் இங்கு எங்கள் தாயார் முதலில் அவதரித்தாள் என்ற சொல்வதுண்டு. இந்தப் புல்லாணி அம்மன் கோவில் திருப்புல்லாணி ஆதி ஜெகன்னாதப் பெருமாள் கோவிலுக்கும் முந்தியது என்று வந்தது.
இன்னும் ஒரு கொசுறு தகவல். புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே என்று தினமும் ஸேவிக்கும் அந்தணர்களில் யாருக்கும் புல்லாணி என்று பெயர் கிடையாது. அபூர்வமாக ஓரிரு தெய்வச்சிலைகள் தென்படுவார்கள். ஆனால், இதர ஜாதிகளில், குறைந்த பக்ஷம் பத்தில் ஒருவருக்கு புல்லாணிதான் பெயர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)