திருமங்கலம் மகா விஷ்ணு சிவன் கோயில்
திருமங்கலம் மஹாவிஷ்ணு சிவன் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் எங்கண்டியூர் என்னுமிடத்தில் உள்ள விஷ்ணு மற்றும் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான இந்துக் கோயிலாகும்.[1] கோயிலின் மூலவராக மகா விஷ்ணுவும், சிவனும், தனித் தனி சன்னதிகளில் கிழக்கு நோக்கி உள்ளனர். இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியதாகும்.பரசுராமர் இங்குள்ள சிலையை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. [2] கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[3]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Thirumangalam Temple Engandiyoor, www.thirumangalamtemple.com".
- ↑ "Thirumangalam - Siva Temple".
- ↑ Book Title: 108 Siva Kshetrangal, Author:Kunjikuttan Ilayath, Publishers: H and C Books