திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில்
திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை உள்ள சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | தென்திருமுல்லைவாயில் |
பெயர்: | அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல் |
அமைவிடம் | |
ஊர்: | திருமுல்லைவாசல் |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | முல்லைவனநாதர், மாசிலாமணீசர் , (இயூதிகா பரமேசுவரர்) |
தாயார்: | அணிகொண்ட கோதையம்மை,( சத்தியானந்த சவுந்தரி) |
தல விருட்சம்: | முல்லை |
தீர்த்தம்: | பிரம்ம, சந்திர தீர்த்தங்கள் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
அமைவிடம்
தொகுஇது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. இத்தலம் தென்திருமுல்லைவாயில் எனவும் அழைக்கப்பெறுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 7வது தலம் ஆகும்.
தல வரலாறு
தொகுகரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் தோல் நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீர வேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூறினர். நோய் தீர தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு இரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த கிள்ளிவளவன், ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. தெரியாமல் மாபெரும் தவறு செய்து விட்டோமே என வருந்திய மன்னன், தன்னைத்தானே வெட்ட முற்பட்டான். உடனே ஈசன் பார்வதியுடன் இரிடபாரூடராக காட்சி தந்து கிள்ளிவளவனை காப்பாற்றினார். எனவே தான் இத்தலத்திற்கு திருமுல்லை வாசல் என்று பெயர் வந்தது. லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.
சிறப்பு
தொகுசோழ மன்னனின் பிரமகத்தி தோசம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை.