திருவனந்தபுரம் ஆர். வெங்கட்ராமன்

வீனை இசைக்கலைஞர்

ஆர். வெங்கடராமன் (R Venkataraman) (1938 ஆகத்து 31  – 2010 சனவரி 5) இவர்கர்நாடக இசை வகைகளில் இந்தியாவிலிருந்து ஒரு பாரம்பரிய இசைக்கலைஞரும் வீணைக் கலைஞருமாவார். இவர் வீணை-வயலின்-வேணு (புல்லாங்குழல்) ஆகிய மூன்றும் சேர்ந்து இசைத்த மூன்று உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். மற்ற இருவர் லால்குடி ஜி ஜெயராமன், என். ரமணி ஆகியோர்.

ஆர். வெங்கடராமன்
சரசுவதி பூசை தினத்தில் மாவேலிக்கரா தேவி கோவிலில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஆர். வெங்கட்ராமன்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1938-08-31)ஆகத்து 31, 1938
சேரன்மகாதேவி, திருநெல்வேலி, இந்தியா
பிறப்பிடம்தமிழ்நாடு, இந்தியா
இறப்புசனவரி 5, 2010(2010-01-05) (அகவை 71)
உளுந்தூர்ப்பேட்டை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)வீணை

ஆரம்ப நாட்களும் தனிப்பட்ட வாழ்க்கையும்

தொகு

வெங்கடராமன் தனது தந்தை இராமசுப்ப சாத்திரியின் வழிகாட்டுதலின் கீழ் நான்கு வயதாக இருந்தபோது குரல் இசையில் தனது பயிற்சியைத் தொடங்கினார். இவர் இலட்சுமி ஜி.கிருட்டிணன் என்பவரின் கீழ் எட்டு வயதில் தனது வீணைப் பாடங்களைத் தொடங்கினார். வெங்கடராமன் பத்ம பூசண் கொ. சி. நாராயணசாமியின் மாணவரானார். பின்னர் செம்மங்குடி சீனிவாச ஐயர், சி.எஸ்.கிருஷ்ண ஐயர் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தனது குரல் இசை திறனை வளர்த்துக் கொண்டார்.

தொழில்

தொகு

வெங்கடராமனின் வாழ்க்கை ஐந்து தசாப்தங்களாக நீடித்தது. 1965 முதல் 1968 வரை, லால்குடி ஜி. ஜெயராமன் மற்றும் வழங்கிய பிரபலமான வீணை-வேணு-வயலின் ஆகிய மூன்றும் சேர்ந்த இசை நிகழ்ச்சிகளில் இவர் ஒரு பகுதியாக இருந்தார்.

சுற்றுப்பயணங்கள்

தொகு

வெங்கடராமன் 2001, 2005 ஆண்டுகளுக்கு இடையில் விரிவாக சுற்றுப்பயணம் செய்துள்ளார். இவரது சில நிகழ்ச்சிகள் ஆத்திரேலியா, பிரான்சு உள்ளிட்ட மற்ற நாடுகளில் இருந்தன. நிகழ்ச்சிகளுக்கு மேலதிகமாக இவர் தனது சொற்பொழிவுகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.

மாணவர்கள்

தொகு

வீணை, குரல் நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மாணவர்களுக்கு இவர் குருவாக இருந்துள்ளார். இவரது முக்கிய மாணவர்களில் சிலர் இளவரசர் அசுவது திருநாள் வர்மன் (குரல். வீணை), சேசா நம்பிராஜன் (வீணை), ஐயர் சகோதரர்கள் (வீணை), சீதா பாலகிருட்டிணன் (வீணை) மற்றும் சுகந்த கலாமேகம். (குரல்) போன்றோர்.

விருதுகளும் கௌரவங்களும்

தொகு
  • 1982க்கான கேரள சங்கீத நாடக அகாதமி விருது [1]
  • மியூசிக் அகாதமி (1990) வழங்கிய " சண்முக வடிவு " விருது
  • மியூசிக் அகாதமியின் " செல்லப்பள்ளி ரங்கா ராவ் " விருது (1990)
  • செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் அறக்கட்டளை (1999) கௌரவித்தது
  • மியூசிக் அகாதமி (2009) வழங்கிய " சங்கீத கலாச்சார்யா " பட்டம். [2]

இறப்பு

தொகு

இவரும் இவரது மகள் ஜெயசிறீ என்பவரும் 2010 சனவரி 5 அன்று உளுந்தூர்ப்பேட்டை அருகே நடந்த ஒரு வாகன விபத்தில் இறந்தனர்.

குறிப்புகள்

தொகு