திருவழுந்தூர் தேவாதிராஜன் கோயில்

திருவழுந்தூர் தேவாதிராஜன் கோயில் 108 வைணவத் திருத்தலங்கள் ஒன்றாகும்

திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் என்பது மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்தேரழுந்தூரில் அமைந்துள்ள 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் [1]
திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் [1] is located in தமிழ் நாடு
திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் [1]
திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் [1]
புவியியல் ஆள்கூற்று:11°02′47″N 79°34′47″E / 11.0465°N 79.5797°E / 11.0465; 79.5797
பெயர்
புராண பெயர்(கள்):திருவழுந்தூர்
பெயர்:திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் [1]
அமைவிடம்
ஊர்:தேரழுந்தூர் - 609808
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தேவாதிராஜன்
உற்சவர்:ஆமருவியப்பன்
தாயார்:செங்கமலவல்லி
தீர்த்தம்:தர்சன புஷ்கரிணி, காவிரி
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:கருட விமானம்
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று
கல்வெட்டுகள்:உண்டு
தொலைபேசி எண்:+914364237952

சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம். திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகக் கூறப்படுகின்றது.

தலவரலாறு

தொகு

பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடிய போது பார்வதிதேவியை நடுவராக நியமித்ததில், காய் உருட்டும் போது சகோதரனான பெருமாளுக்கு சாதகமாகக் கூற, சிவபெருமான் பார்வதி தேவியைப் பசுவாக மாற சாபமிட, அவருக்கு துணையாக சரஸ்வதி தேவியும் லட்சுமி தேவியும் பசுவாகி பூமிக்கு வந்த போது மேய்ப்பவராக பெருமாள் ’ஆ’மருவியப்பன் எனும் பெயரில் வந்த திருத்தலம்.

கோயில் அமைப்பு

தொகு

வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் வலப்புறம் கம்பர் சன்னதியில் கம்பரும் அவருடைய மனைவியும் உள்ளனர். அடுத்து ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. அருகே பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்துள்ள கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றில் வலது புறத்தில் தேசிகர் மடப்பள்ளி, ஆழ்வார் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. இடது புறம் ஆண்டாள் சன்னதி உள்ளது. சற்று உயர்ந்த தளத்தில் மூலவர் தேவாதிராஜன் நின்ற நிலையில் கிழக்கு நோக்கி உள்ளார். இடது புறம் கருடாழ்வாரும், வலப்புறம் பிரக்லாதாழ்வாரும் உள்ளனர். இடது கையில் ஊன்றிய கதை உள்ளது. இடது புறம் காவிரித்தாய் மண்டியிட்ட நிலையில் உள்ளார். கோயிலின் எதிரே குளம் உள்ளது. பெரிய திருமொழி ஏழாம் பத்து ஐந்தாம் திருமொழி கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு

தொகு

மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட திருத்தலம். மூலஸ்தானத்தில் பெருமாளுடன் பிரகலாதனும் கருடணும் உள்ளனர்.

புகைப்படத்தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு