திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில்

(திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை ஊரில் அமைந்துள்ளது. [1] இவ்வூரினை திருஆடானை என்றும் அறிவர்.

தேவாரம் பாடல் பெற்ற
திருவாடானை ஆதிரத்தினேசுவரர் திருக்கோயில்
[[படிமம்:
Thiruvadanai Raja Gopuram, built by Nattukottai Nagarathar
|frameless|alt=]]
பெயர்
புராண பெயர்(கள்):திருஆடானை
பெயர்:திருவாடானை ஆதிரத்தினேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவாடானை
மாவட்டம்:ராமநாதபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர்
தாயார்:சினேகவல்லி, அம்பாயி அம்மை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:சூரிய புஷ்கரிணி
சிறப்பு திருவிழாக்கள்:வைகாசி விசாகத்தில் வசந்த விழா 10 நாள், ஆடிப்பூரத்திருவிழா 15 நாள், நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
அமைத்தவர்:நாட்டுக்கோட்டை நகரத்தார்

இறைவன், இறைவிதொகு

இங்குள்ள இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் இறைவி சினேகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.[1] இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக சூரிய புஷ்கரிணியும் உள்ளன.

நம்பிக்கைதொகு

 
திருவாடானை பெயர்க்காரணத்தை விளக்கும் படம்

இத்தலத்தில் வருணன் மகன் வாருணி துருவாச முனிவரின் சாபத்தினால் ஆனை உடலும் ஆட்டுத்தலையுமாய் இருந்து வழிபட்டு விமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை.

விழாக்கள்தொகு

இக்கோயிலில் வைகாசி விசாகத்தில் வசந்த விழா, ஆடிப்பூரத் திருவிழா, நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி உள்ளிட்ட பலவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.[1]

திருப்பணிகள்தொகு

இக்கோயில் ஆதியில் பாண்டியர்களால் கட்டப்பட்டுள்ளது. பின்னர் நாயக்கர்கள் கோயிலை விரிவுபடுத்தியுள்ளனர். தற்போது உள்ள கோயில் 19ஆம் நூற்றாண்டில் சேதுபதி மன்னர் தலைமையில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் கட்டப்பெற்றது[2]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 அருள்மிகு ஆதிரத்தினேரீஸ்வரர் கோயில், தினமலர் கோயில்கள்
  2. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் (1953). நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு. பக். 245,246. 

வெளி இணைப்புக்கள்தொகு