திருவார்ப்பு

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் திருவார்ப்பு ஊராட்சி அமைந்துள்ளது. இது கோட்டயத்தில் இருந்து 8 கிலோமீட்டர் மேற்கில் உள்ளது.

இங்கு நெல் பயிரிடுகின்றனர். இங்கு பழைமையான கிருஷ்ணர் கோயில் உள்ளது. முற்காலத்தில் குன்னம்பள்ளிக்கரை என்ற பெயரைக் கொண்டிருந்தது.

கோயில் வரலாறு

தொகு

ஆலப்புழை மாவட்டத்தில் முஹம்மாவில் இருந்த கோயில் விக்ரகத்தை அமைத்திருந்தனர். தீ பிடித்ததாலோ மற்றொரு காரணத்திற்காகவோ இந்த விக்ரஹம் வார்ப்பில் ஏற்றி, வேம்பநாட்டு ஏரியில் சேர்த்தனர். அந்த பக்கம் வந்த வில்லுயமங்கலம் சுவாமி அய்யர் கண்டு குன்னம்பள்ளிக்கரையில் அமைத்ததாகக் கருதுகின்றனர். எனவே, திரு, வார்ப்பு ஆகிய இரண்டு பெயர்களும் இணைந்து திருவார்ப்பு என்ற பெயர் பெற்றது என்று கருதுகின்றனர். [1].

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவார்ப்பு&oldid=3216594" இலிருந்து மீள்விக்கப்பட்டது