திருவிழா ஜெயசங்கர்
திருவிழா ஜெயசங்கர் (பிறப்பு: சனவரி 31, 1937) தென்னிந்தியாவைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஜெயசங்கர் ஆரம்பத்தில் தனது தாத்தா திருவிழா சங்கு பணிக்கரிடம் நாதசுவர இசையினைக் கற்றார். பின்னர் தனது தந்தை திருவிழா ராகவ பணிக்கரிடம் பயிற்சி மேற்கொண்டு, அவருடன் இணைந்து மத்திய திருவாங்கூரின் கோயில்களில் நாதசுவரம் இசையினை வழங்கினார்.
தொழில் வாழ்க்கை
தொகுதவில் கலைஞர் வலயப்பட்டி சுப்பிரமணியத்துடன் இணைந்து இவர் நிகழ்த்திய இசை நிகழ்ச்சிகள், தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்பினைப் பெற்றன. வெட்டிக்காவலா சசிகுமார், கரிப்பத் முருகதாஸ் ஆகியோர் ஜெயசங்கரின் குறிப்பிடத்தக்க மாணாக்கர் ஆவர்.
பெற்றுள்ள விருதுகளும் பட்டங்களும்
தொகு- இசைப்பேரறிஞர் விருது, 1997. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[2]
- சங்கீத நாடக அகாதமி விருது, 2013[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Inimitable idiom
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 15 June 2024.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
உசாத்துணை
தொகு- THIRUVIZHA JAYASANKAR பரணிடப்பட்டது 2014-04-29 at the வந்தவழி இயந்திரம்