திரோங் அபோ

இந்திய அரசியல்வாதி

திரோங் அபோ (Tirong Aboh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1978 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் 20 ஆம் தேதியன்று அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இவர் பிறந்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கோன்சா மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற திரோங் அபோ அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதிவரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3] அருணாசலப் பிரதேச அரசியலில் அருணாச்சலப்பிரதேச மக்கள் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். 21 மே 2019 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாளன்று திராப் மாவட்டத்தின் போகபானி பகுதியில் இனந்தெரியாத தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படுகொலையில் இறந்த 11 பேரில் இவரும் இவரது மகனும் அடங்குவர்.[4]

திரோங் அபோ
Tirong Aboh
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
17 மே 2014 – 21 மே 2019
முன்னையவர்இயும்செம் மேட்டி
பின்னவர்சகட் அபோ
தொகுதிகோன்சா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1978-01-20)20 சனவரி 1978
அருணாசலப் பிரதேசம், இந்தியா
இறப்பு21 மே 2019(2019-05-21) (அகவை 41)
போகபானி, திரப் மாவட்டம்
அரசியல் கட்சிதேசிய மக்கள் கட்சி
பிள்ளைகள்1

மேற்கோள்கள்

தொகு
  1. CEO Arunachal Pradesh. List of contesting candidates பரணிடப்பட்டது 2014-08-02 at the வந்தவழி இயந்திரம்
  2. Assam Tribune. Congress wins 11 seats unopposed in Arunachal பரணிடப்பட்டது 2014-04-29 at the வந்தவழி இயந்திரம்
  3. "Election results". Election Commission of India, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 27 October 2016.
  4. "NPP MLA, 10 Others Gunned Down by Terrorists in Arunachal Pradesh". The Quint (in ஆங்கிலம்). 2019-05-21. பார்க்கப்பட்ட நாள் 2019-05-22.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரோங்_அபோ&oldid=4125752" இலிருந்து மீள்விக்கப்பட்டது