திலிப் குமார் பால்

இந்திய அரசியல்வாதி

திலிப் குமார் பால் (Dilip Kumar Paul) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1956 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19 ஆம் தேதியன்று அசாம் மாநிலத்தின் சில்சார் நகரத்தில் இவர் பிறந்தார். அசாம் மாநில அரசியலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். சில்சார் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருமுறை இடைத்தேர்தலில் காங்கிரசு கட்சியின் தலைவர் அருண் மசூம்தருக்கு எதிராகப் போட்டியிட்டு வென்றார். மற்றொரு முறை முன்னாள் மத்திய அமைச்சர் சந்தோசு மோகன் தேவின் மனைவியான காங்கிரசு மூத்த தலைவர் பித்திகா தேவுக்கு எதிராகவும் இவர் போட்டியிட்டார். ஆனால், 2020-21 ஆம் ஆண்டு காலத்தில் கட்சிக்குள் ஏற்பட்ட சில சர்ச்சைக்குரிய பிரச்னைகளை நிறைவேற்றி, பாரதிய சனதா கட்சியிலிருந்து விலகினார்.[1][2][3][4][5]

திலிப் குமார் பால்
பேரவைத் தலைவர் அசாம் சட்டப் பேரவை
பதவியில்
3 சூன் 2016 – 8 மே 2018
முன்னையவர்பீமானந்த தந்தி
பின்னவர்கிருபாநாத் மல்லா
உறுப்பினர், அசாம் சட்டப் பேரவை
பதவியில்
11 செப்டம்பர் – 2 மே 2021
முன்னையவர்சுசுமிதா தேவ்
பின்னவர்திபயன் சக்ரவர்த்தி
தொகுதிசில்சார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 மார்ச்சு 1956 (1956-03-19) (அகவை 68)
சில்சார், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி(2021 மார்ச்சு வரை)

மேற்கோள்கள்

தொகு
  1. "Dilip Kumar Paul personal website". Archived from the original on 23 December 2016. பார்க்கப்பட்ட நாள் 22 December 2016.
  2. My Neta
  3. Dilip Kumar Paul becomes dy speaker unopposed
  4. Dilip Kumar Paul was today unanimously elected deputy speaker
  5. Dilip Kumar Paul becomes dy speaker unopposed
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலிப்_குமார்_பால்&oldid=3855481" இலிருந்து மீள்விக்கப்பட்டது