சுசுமிதா தேவ்

இந்திய அரசியல்வாதி

சுசுமிதா தேவ் (Sushmita Dev)(பிறப்பு 25 செப்டம்பர் 1972) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மக்களவை மேனாள் உறுப்பினரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவர். முன்னதாக, இவர் 2014 இந்திய பொதுத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராக அசாமின் சில்சார் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவர் அகில இந்திய மகளிர் காங்கிரசின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராஜ்தீப் ராயிடம் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால் இவர் இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து விலகி 2021-ல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார் [4]

சுசுமிதா தேவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 அக்டோபர் 2021
முன்னையவர்மன்னாசு புனியா
தொகுதிமேற்கு வங்காளம்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
16 மே 2014 – 23 மே 2019
முன்னையவர்கபீந்திர புர்கயாசுதா
பின்னவர்இராஜ்தீப் ராய்
தொகுதிசில்சார், அசாம்
அசாம் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
மே 2011 – 16 மே 2014
முன்னையவர்பிகிதா தேவ்
பின்னவர்திலீப் குமார் பால்
தொகுதிசில்சார்
தலைவர்-அகில இந்திய மகளிர் காங்கிரசு
பதவியில்
9 செப்டம்பர் 2017 – 16 ஆகத்து 2021[1]
முன்னையவர்சோபா ஒசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 செப்டம்பர் 1972 (1972-09-25) (அகவை 52)
சில்சார், அசாம், இந்தியா
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2021 முதல்)[2]
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2021 வரை)
பெற்றோர்
வாழிடம்சில்சார்
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம் (இளங்கலை, எல். எல். பி.
மன்னர் கல்லூரி, இலண்டன் (எல். எல். எம்)
வேலைஅரசியல்வாதி
மூலம்: [1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

தேவ் இந்தியத் தேசிய காங்கிரசின் மூத்த தலைவர் சந்தோசு மோகன் தேவின் மகள் ஆவார். இவரது தாயார் பித்திகா தேவ், அசாம் சட்டமன்றத்தின் சில்சார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவரது தந்தை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் இருந்தார்.[5]

இவர் மிராண்டா ஹவுசில், பார்-அட்-லாவில் இளம் சட்டப்பட்டமும், தில்லி பல்கலைக்கழகத்தில் எல். எல். பி. (பெருநிறுவனம் மற்றும் வணிகச் சட்டங்கள்) பட்டம் பெற்றுள்ளார். தேவ்இலண்டன் இன்ஸ் ஆப் கோர்ட்ஸ் ஸ்கூல் ஆப் லா, மற்றும் மன்னர் கல்லூரி சட்டமாணவராக சேர்ந்துள்ளார் [6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sushmita Dev, Who Backed CAA, Quits Cong; Kapil Sibal Says 'Party Moves on with Eyes Wide Open'". News18. 16 August 2021. https://www.news18.com/news/politics/sushmita-dev-quits-congress-changes-twitter-bio-to-partys-former-leader-4090232.html. 
  2. "Sushmita Dev joins Trinamool Congress, day after leaving Congress". தி எகனாமிக் டைம்ஸ். 16 August 2021. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/sushmita-dev-joins-trinamool-congress-soon-after-leaving-congress/articleshow/85366624.cms. பார்த்த நாள்: 17 August 2021. 
  3. "Constituencywise-All Candidates". Election Commission of India. Archived from the original on 17 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
  4. "Team Rahul loses another: Assam face Sushmita Dev goes to TMC". The Indian Express. 17 August 2021. பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.
  5. Kangkan Kalita (16 August 2021). "Sushmita Dev may play key role for Trinamool in Northeast". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/india/sushmita-dev-may-play-key-role-for-trinamool-in-northeast/articleshow/85378055.cms. பார்த்த நாள்: 17 August 2021. 
  6. "Sushmita Dev Lok Sabha Profile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 17 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசுமிதா_தேவ்&oldid=3993119" இலிருந்து மீள்விக்கப்பட்டது