அகில இந்திய மகளிர் காங்கிரசு
அகில இந்திய மகளிர் காங்கிரசு (All India Mahila Congress) என்பது இந்திய தேசிய காங்கிரசின் மகளிர் பிரிவாகும்.[1] மிகச் சமீபத்தில் இதன் தலைவி சுசுமிதா தேவ் 2021-ல் பதவி விலகியதால் தற்போது நெட்டா டிசோசா அகில இந்திய மகளிர் காங்கிரசின் செயல் தலைவராக 17 ஆகத்து 2021 அன்று காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டார்.[2][3][4]
சுருக்கம் | AIMC |
---|---|
உருவாக்கம் | 15 செப்டம்பர் 1984 (38 ஆண்டுகளுக்கு முன்னர்) |
நிறுவனர்கள் | சுசீதா கிர்பலானி, இந்திய தேசிய காங்கிரசு |
தலைமையகம் | 24, அக்பர் சாலை, புது தில்லி 110001 |
National President | Netta D'Souza |
தேசியச் செயலர் | ஐசுவரியா மகாதேவ் |
தாய் அமைப்பு | இந்திய தேசிய காங்கிரசு |
வலைத்தளம் | https://www.inc.in/all-india-mahila-congress |
வரலாறு
தொகுஇந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் 30,000 பிரதிநிதிகள் கலந்துகொண்ட 1984ஆம் ஆண்டின் மத்தியில் பெங்களூரில் நடைபெற்ற மாநாடுதான் இந்த அமைப்பின் ஆரம்பக்கால குறிப்பிடத்தக்கக் கூட்டமாகும்.[5]
அமைப்பு
தொகுஅகில இந்திய மகளிர் காங்கிரசு மாநிலந்தோறும் கிளைகளாகப் பிரிக்கப்பட்டு, இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் oன்றிய பிரதேசங்களில் அகில இந்திய மகளிர் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநில மகளிர் காங்கிரசு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.[6]
மாநிலம் | தலைவர் | ஆதாரம் |
---|---|---|
அந்தமான் நிக்கோபார் தீவுகள் டி.எம்.சி.சி | நீலவேணி | [7] |
ஆந்திர பிரதேச பி.எம்.சி.சி | கே.பிரமீலாம்மா | [8] |
அருணாச்சல பிரதேசம் | மெரினா காங்லாங் | [9] |
அசாம் | மீரா போர்தாகூர் கோஸ்வாமி | [10] |
பீகார் | அமிதா பூஷன் | [11] |
சண்டிகர் | தீபா அஸ்திர் துபே | [12] |
சத்தீஸ்கர் | பூலோ தேவி நேதம் | |
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ | ||
தில்லி | அம்ரிதா தவான் | |
கோவா | பீனா சாந்தாராம் நாயக் | [13] |
குஜராத் | ஜென்னி தும்மர் | [14] |
அரியானா | சுமித்ரா சவுகான் | |
இமாச்சலப் பிரதேசம் | ஜைனப் சாண்டல் | [15] |
ஜம்மு காஷ்மீர் | இந்து பவார் | [16] |
சார்க்கண்டு | ||
கருநாடகம் | ||
கேரளா | ஜெபி மாதர் | |
லடாக் | ||
லட்சத்தீவு | ||
மத்தியப் பிரதேசம் | மாண்டவி சவுகான் | |
மகாராட்டிரம் | திருமதி. சாருலதா டோகாஸ் | |
மணிப்பூர் | ||
மேகாலயா | ||
மிசோரம் | ||
மும்பை | அனிஷா பகுல் | |
நாகாலாந்து | ||
ஒடிசா | பண்டிதா பரிதா | |
புதுச்சேரி | ||
பஞ்சாப் | ஸ்ரீமதி. பல்வீர் சோதி (ராணி) | |
ராஜஸ்தான் | ஸ்ரீமதி. ரெஹானா ராயஸ் சிஸ்டி | |
சிக்கிம் | ||
தமிழ்நாடு | ||
தெலங்காணா | சுனிதா ராவ் முதிராஜ் | |
திரிபுரா | ||
உத்தராகண்டம் | ||
உத்தரப்பிரதேசம் | ஆராதனா மிஸ்ரா | |
மேற்கு வங்காளம் |
தலைவர்களின் பட்டியல்
தொகுபெயர் | காலம் |
---|---|
பேகம் அபிதா அகமது | 1983–1988 |
ஜெயந்தி பட்நாயக் | 1988–1990 [17] |
குமுத்பென் ஜோஷி | 1990–1993 |
கிரிஜா வியாஸ் | 1993–1998 |
அம்பிகா சோனி | 1998–1999 |
சந்திரேஷ் குமாரி கடோச் | 1999–2003 |
ரீட்டா பகுகுணா ஜோஷி | 2003–2008 |
பிரபா தாக்கூர் | 2008–2011 |
அனிதா வர்மா | 2011–2013 |
ஷோபா ஓசா | 2013–2017 |
சுசுமிதா தேவ் | 2017–2021[3] |
நெட்டா டிசோசா | தற்போதைய |
பொதுச்செயலர்
தொகுஅக்டோபர் 2015-ல், முன்பு திரைப்பட நடிகையாக இருந்த நக்மா, அலுவலக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[18] சனவரி 2019-ல் இந்தியத் தேசிய காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி, அப்சரா ரெட்டியை தேசிய பொதுச் செயலாளராக நியமித்தார், ரெட்டி இப்பதவியினை வகிக்கும் முதல் திருநங்கை ஆவார்.[19]
மார்ச் 2020-ல், ஐசுவர்யா மகாதேவ் இதன் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஆகத்து 2021-ல், நெட்டா டிசோசா தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[20]
மேற்கோள்கள்
தொகு- ↑ Singh (2003).
- ↑ The New Indian Express (2019).
- ↑ 3.0 3.1 "Sushmita Dev, Who Backed CAA, Quits Cong; Kapil Sibal Says 'Party Moves on with Eyes Wide Open'". News18. 16 August 2021.
- ↑ "Congress appoints Netta D'Souza as acting president of Mahila Congress". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/congress-appoints-netta-dsouza-as-acting-president-of-mahila-congress/articleshow/85406081.cms.
- ↑ Badhwar (2014).
- ↑ Kumar (1990).
- ↑ sanjib (2017-04-18). "New State President of Mahila Congress Committee appointed". Andaman Sheekha (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.
- ↑ "Prameelamma to head A.P. Mahila Congress" (in en-IN). 2021-06-03. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/prameelamma-to-head-ap-mahila-congress/article34720433.ece.
- ↑ "Arunachal: APMCC conducts motivational and leadership awareness programme for women in grassroot level". Arunachal24 (in அமெரிக்க ஆங்கிலம்). 8 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
- ↑ NEWS, NE NOW (2022-03-23). "Mira Borthakur appointed as president of Assam Pradesh Mahila Congress". Northeast Now (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
- ↑ Madan Kumar (Feb 21, 2014). "State Mahila Congress chief to expose government | Patna News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
- ↑ ANI (2019-11-17). "Deipa Asdhir Dubey appointed as Chandigarh Mahila Congress President". https://www.business-standard.com/article/news-ani/deipa-asdhir-dubey-appointed-as-chandigarh-mahila-congress-president-119111700613_1.html.
- ↑ "Goa Congress Women's Wing Chief Pratima Coutinho Joins AAP". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
- ↑ "Gujarat: Jenny Thummar appointed Mahila Congress chief". The Indian Express (in ஆங்கிலம்). 2022-03-28. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
- ↑ "Women not safe under BJP rule: Himachal Mahila Cong chief". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
- ↑ "J&K Mahile Congress takes out protest march over women rights". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-03-09. பார்க்கப்பட்ட நாள் 2022-12-02.
- ↑ PoI (2014).
- ↑ PTI (2015).
- ↑ Newsd (2019).
- ↑ CTBUREAU NTB (2020).