அம்பிகா சோனி
அம்பிகா சோனி (பிறப்பு: நவம்பர் 13, 1942) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய மத்திய அமைச்சரவையில் தகவல் மற்றும் அலைபரப்புத் துறை அமைச்சராக தற்போது பணியாற்றி வருகிறார். சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சராக 2006-2009 வரைப் பணியாற்றினார்.[1] இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அம்பிகா சோனி | |
---|---|
இந்திய மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1996 | |
தகவல் மற்றும் அலைபரப்புத்துறை அமைச்சர் | |
பதவியில் 22 மே 2009 - 27 அக்டோபர் 2012 | |
முன்னையவர் | பிரியா ரன்ஜன் |
பின்னவர் | மணீஷ் திவாரி |
சுற்றுலாத்துறை அமைச்சர் | |
பதவியில் 29 ஜனவரி 2006 - 22 மே 2009 | |
முன்னையவர் | ரேணுகா சவுத்ரி |
பின்னவர் | செல்ஜா குமாரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 நவம்பர் 1942 லாகூர், ஒருங்கிணைந்த இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | உதய் சோனி |
பிள்ளைகள் | ஒரு மகன் |
வாழிடம் | புது தில்லி |
இணையத்தளம் | Official website |
ஆரம்ப கால வாழ்க்கையும் கல்வியும்
தொகுஅம்பிகா 1942 ஆம் ஆண்டில் பிரிக்கப்படாத பஞ்சாப்பில் லாகூரில் பிறந்தார். இவரது தந்தை நகுல் சென் ஒரு இந்தியக் குடிமைப் பணி (I.C.S) அதிகாரி. இவரது தாயார் பெயர் இந்து. அம்பிகா தனது பி.ஏ பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்திரபிரஸ்தா கல்லூரியில் முடித்தார். பிறகு, பேங்காக்கிலுள்ள அலையன்சு ஃபிரான்சேசிலிருந்து டிப்ளோம் சுப்பீரியர் என் லாங் பிரான்சேசு பட்டமும், கியூபாவின் ஹவானா பல்கலைக்கழகத்திலிருந்து எசுப்பானிய கலை மற்றும் இலக்கியத்தில் முதுகலைப் பட்டயமும் பெற்றார்.[2]
தொழில் வாழ்க்கை
தொகுஅம்பிகா இந்திய இளைஞர் காங்கிரசின் தலைவராக 1975 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் தனது அரசியல் அறிமுகத்தைத் தொடங்கினார். 1977 வரை இப்பதவி வகித்தார். 1976 ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1988 ஆம் ஆண்டில் அனைத்து இந்திய பெண்கள் காங்கிரசின் தலைவரானார்.[3]
சர்ச்சைகள்
தொகுசேதுசமுத்திரம் சர்ச்சை தொடர்பாக, அம்பிகா சோனி தலைமையில் செயல்பட்ட பண்பாட்டு அமைச்சகம், நீதிமன்றத்தில் பதிவு செய்த ஒரு ஆவணத்தில் கடவுள் இராமரின் வரலாற்றுத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியது. இதனால் எழுந்த சர்ச்சை பற்றி அப்போதைய வணிகத்துறை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தான் சோனியின் இடத்தில் இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்பேன் எனக் கூறினார்.[4] செப்டம்பர் 18, 2007 இல் "எனது தலைவர்கள் (பிரதம மந்திரி மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி) கூறினால் நான் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் என் பதவியை ராஜினாமா செய்வேன்” என்று சோனி கூறினார்.[5]
ஏப்ரல் 2011 இல் சோனி அளித்த பேட்டி ஒன்றில் உலக நாடுகளின் ஊடகங்களில் இந்திய ஊடகங்கள் தான் அதிக சுதந்திரத்துடன் செயல்படுகின்றன என்று கருத்து தெரிவித்தார். ஆனால் பன்னாட்டு ஊடகச் சுதந்திரக் குறியீடு தரப்பட்டியல்களில் இந்தியா மோசமான இடத்தையே பெற்றுள்ளது.[6][7][8]
குறிப்புதவிகள்
தொகு- ↑ அம்பிகா சோனி, 65 பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் இந்தியன் எக்ஸ்பிரஸ், மே 22, 2009.
- ↑ வாழ்க்கை வரலாறு பரணிடப்பட்டது 2010-06-30 at the வந்தவழி இயந்திரம் ராஜ்ய சபா உறுப்பினர்கள் இந்திய அரசாங்கத்தின் வலைத்தளம்
- ↑ அம்பிகா சோனி ரிவார்டட் ஃபார் "குட் வொர்க்" த டைம்ஸ் ஆஃப் இந்தியா, மே 22, 2009
- ↑ அம்பிகா சோனி ஆஃபர்ஸ் டு ரிசைன் ஓவர் ராம் சேது ரோ சிஃபி-செப்டம்பர் 15, 2007
- ↑ அம்பிகா சோனி ஆஃபர்ஸ் டு ரிசைன் ஓவர் ராம் சேது அஃபிடவிட் பரணிடப்பட்டது 2009-05-28 at the வந்தவழி இயந்திரம் இண்டியாஇன்ஃபோ-செப்டம்பர் 15, 2007
- ↑ India has world's 'freest' media: Soni பரணிடப்பட்டது 2012-10-21 at the வந்தவழி இயந்திரம், Hindustan Times - April 28, 2011
- ↑ "Press Freedom Index 2010". Archived from the original on 2010-11-24. பார்க்கப்பட்ட நாள் 2012-02-16.
- ↑ "Freedom of the Press 2010 Global Rankings". Archived from the original on 2011-02-01. பார்க்கப்பட்ட நாள் 2011-02-01.
புற இணைப்புகள்
தொகு- திருமிகு. பரணிடப்பட்டது 2010-06-30 at the வந்தவழி இயந்திரம்அம்பிகா சோனி - சுயவிவரம் பரணிடப்பட்டது 2010-06-30 at the வந்தவழி இயந்திரம் இந்திய அரசாங்கத்தின் இணையவாசல்
- தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், அதிகாரப்பூர்வ வலைத்தளம் பரணிடப்பட்டது 2012-07-21 at the வந்தவழி இயந்திரம்