ரீட்டா பகுனா ஜோசி

இந்திய அரசியல்வாதி

ரீட்டா பகுகுணா ஜோசி (Rita Bahuguna Joshi பிறப்பு 22 ஜூலை 1949) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் உத்தரபிரதேச அரசாங்கத்தில் மத்திய அமைச்சராக இருந்தார். இவர் 2007 முதல் 2012 வரை உத்தரபிரதேச காங்கிரஸ் குழுவின் தலைவராக இருந்தார். இவர் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேம்வதி நந்தன் பகுகுனாவின் மகள் ஆவார். இவர் அக்டோபர் 20, 2016 அன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இவர் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினராக 2019 இந்திய பொதுத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் இருந்து நாடாளுமன்ற கீழ்வை சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ரீட்டா பகுனா ஜோசி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

ரீட்டா பகுகுணா ஜோசி, உ.பி., யின் முன்னாள் முதல்வர் மறைந்த எச். என். பகுனாவின் மகள் ஆவார். இவரது தாயார், மறைந்த கம்லா பகுகுனா, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். இவர் வரலாற்றில் முதுகலைப் பட்டமும் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் "தெற்காசியாவில் மிகவும் புகழ்பெற்ற மகளிர் மாநகர முதல்வர்" எனும் ஐக்கிய நாடுகள் இவையின் விருது பெற்றவர். [3] இந்திய தேசிய காங்கிரசில் சேருவதற்கு முன்பு இவர் இரண்டு வரலாற்று புத்தகங்களை எழுதினார். இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இடைக்கால மற்றும் நவீன வரலாற்றில் பேராசிரியராக இருந்தார்.[4]

அரசியல் வாழ்க்கை தொகு

ரீட்டா பகுகுணா 1995–2000 வரை அலகாபாத்தின் நகர முதல்வர் பதவியை வகித்தார். இவர் தேசிய மகளிர் குழுவின் முன்னாள் துணைத் தலைவராக இருந்தார், 2003 முதல் அகில இந்திய மகிளா காங்கிரசு மற்றும் செப்டம்பர் 2007 முதல் உத்தரபிரதேச காங்கிரசு குழுவின் தலைவராக உள்ளார். மக்களவை தேர்தலில் இரண்டு முறை தோல்வியடைந்தார். இந்திய பாராளுமன்றத்தின் கீழ் சபைகான 2012 மாநிலத் தேர்தலில் லக்னோ பாளையம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 லோக்சபா தேர்தலில் லக்னோவிலிருந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[5]

காங்கிரசில் 24 ஆண்டுகள் கழித்தபின், 20-அக்டோபர் -2016 அன்று பிஜேபி தலைவர் அமித் ஷா முன்னிலையில் இவர் பாஜகவில் சேர்ந்தார் [6]

கைது தொகு

ஜூலை 16, 2009 அன்று, உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதி பற்றி அவதூறாக பேசியதற்காக இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் மொராதாபாத் சிறைக்கு அனுப்பப்பட்டார். [7]

ஜோசியின் பேச்சு உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்காரங்கள் பற்றியதாஅக இருந்தது. பாலியல் வன்கலவி செய்யப்பட்ட பின்னர் சில பெண்களுக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்ட சில வழக்குகளை இவர் மேற்கோள் காட்டினார். வெறுமனே பெண்களுக்கு பணத்தை ஈடு செய்வது போதாது என்று இவர் குறிப்பிட்டார். பாலியல் வன்கலவி செய்யப்பட்ட பெண்கள் " மாயாவதியின் முகத்தில் பணத்தை எறிந்துவிட்டு, 'நீங்களும் பாலியல் வன்கலவி செய்யப்பட வேண்டும், நான் உங்களுக்கு 10 மில்லியன் ரூபாய் தருகிறேன்" என்று பேச வேண்டும் என்று கூறினார்.

11 மே 2011 அன்று மேற்கு உத்தரபிரதேசத்தின் பட்டா பர்சால் கிராமத்தில் இருந்து மீரட் ரேஞ்ச் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட கட்சித் தலைவர்களில் ஒருவராக இருந்தார், இவருடன் சக தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் திக்விஜய் சிங் ஆகியோர் கைது செய்யப்ட்டனர் . மாநில அரசின் கொள்கைகளை கண்டித்து உள்ளூர் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் இவர்கள் பங்கேற்றனர். ஒரு உயர் காவல்துறை அதிகாரி அடுத்த வேலை நாளில் இவர்கள் மூவரையும் உள்ளூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக கூறினார்.[8]

சான்றுகள் தொகு

  1. "BJP record win in both seats of Allahabad". Rajiv Mani. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
  2. "Allahabad, Phulpur's wait for woman MP finally ends". Rajiv Mani. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
  3. "Uttar Pradesh Congress Committee". Uttarpradeshcongress.com. Archived from the original on 2016-10-18. பார்க்கப்பட்ட நாள் 2016-10-20.
  4. "Rita Bahuguna Joshi: Age, Biography, Education, Husband, Caste, Net Worth & More - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.
  5. "Election LIVE: BJP's third candidate list out, Ram Kripal to contest from Patliputra against Lalu's daughter". http://indianexpress.com/article/india/politics/election-live-2014-march-13/. 
  6. "Setback for Congress, Rita Bahuguna Joshi joins BJP". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-20.
  7. "Archived copy". Archived from the original on 19 July 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-07-16.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. "Maya govt releases Rahul Gandhi, Cong announces protest". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-05-12. Archived from the original on 2012-11-05. பார்க்கப்பட்ட நாள் 2016-10-20.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீட்டா_பகுனா_ஜோசி&oldid=3776013" இலிருந்து மீள்விக்கப்பட்டது