தில்லைச் சிவகாமியம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமியம்மை இரட்டை மணிமாலை [1] [2] என்னும் சிற்றிலக்கியம் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் இயற்றிய நூல்களில் ஒன்று. இரட்டைமணிமாலை என்னும் சிற்றிலக்கிய இலக்கண நெறிக்கு ஏற்ப 20 பாடல்களைக் கொண்ட நூல் இது. சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலின் அம்மை பெயர் 'சிவகாமியம்மை'. இவளைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு பாடப்பட்டுள்ள நூல் இது.
மறை நாறும் செவ்வாய் மடக்கிள்ளாய் பிள்ளைப்
பிறை நாறும் சீறடி அம் பெதாய் - நறை நாறும்
நாள் கமலம் சூடேம் நறுந் துழாய் தேடேம் நின்
தாள் கமலம் சூடத் தரின். [4]
வெளி இணைப்பு
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 126.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ குமரகுருபரர். ஸ்ரீ குமரகுருபர சிவாமிகள் பிரபந்தங்கள். சென்னை, கேசரி அச்சகம்: திருப்பனந்தாள் மடம், காசிவாசி சுவாமிநாத சுவாமிகள், (உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன்) நூல் பதிப்பு 1939,. p. 540.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
- ↑ வெண்பா