தில்லைச் சிவன்
தி. சிவசாமி' (பிறப்பு: சனவரி 5, 1928) என்பவர் தில்லைச் சிவன் என்ற புனைபெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். இவர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேலணை என்ற ஊரில் ஆறுமுகம் தில்லையம்பலம், பொன்னம்மை ஆகியோருக்குப் பிறந்தவர். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் மற்றும் உரைநடை நூல்கள் எனப் பரவலாக எழுதியவர். இதழாசிரியராகவும் செயற்பட்டவர்.
தில்லைச் சிவன் | |
---|---|
பிறப்பு | தி. சிவசாமி சனவரி 5, 1928 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | ♂ தில்லையம்பலம், ♀ பொன்னம்மை |
இவரது நூல்கள்
தொகுகவிதைகள்
தொகு- கனவுக்கன்னி (1961) - வேலணை பாரதி இளைஞர் கழகவெளியீடு
- தாய் (1969) - அன்பு வெளியீடு
- தில்லைச்சிவன் கவிதைகள் (1998) - செந்தமிழ்ச்செல்வி வெளியீடு
- நான் (சுய காவியம்)
- ஆசிரியை ஆகினேன் (காவியம்)
சிறுகதைகள்
தொகு- அந்தக் காலக் கதைகள் (1997)
- காவல் வேலி (2003)
சிறுவர் இலக்கியம்
தொகு- பாப்பாப்பாட்டுக்கள் (1985)
- பூஞ்சிட்டு பாப்பா பாட்டுக்கள் (1998)
ஏனையவை
தொகு- வேலணைத் தீவுப் புலவர்கள் வரலாறு
- நாவலர் வெண்பா பொழிப்புடன்