திவான் தேவ்டி

ஐதராபாத்திலுள்ள ஓர் அரண்மனை

திவான் தேவ்டி (Dewan Devdi) ஐதராபாத் இராச்சியத்தில் திவான்களாகப் பணியாற்றிய சலார் ஜங் பிரபுக்களின் அரண்மனையாக இருந்தது. இது ஐதராபாத்தில் சார்மினார் மற்றும் சௌமகல்லா அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ளது. [1] திவான் என்ற வார்த்தைக்கு பிரதமர் என்று பொருள், மேலும் தேவ்டி என்பது ஐதராபாத்து பிரபுக்களின் மாளிகைகளைக் குறிக்கிறது.

திவான் தேவ்டி
Map
பொதுவான தகவல்கள்
இடம்ஐதராபாத்து

ஐதராபாத்து மாநிலத்தின் பிரதம மந்திரிகளாகப் சலார் ஜங் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பணியாற்றினர். நிசாம்களுக்கு திவான் தேவ்டியின் அருகாமை முக்கியமானதாக இருந்தது.

திவான் தேவ்டியில் சலார் ஜங் அருங்காட்சியகமும் உள்ளது. இந்த அருங்காட்சியகம் 16 டிசம்பர் 1951 அன்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் திறக்கப்பட்டது. சலார் ஜங் குடும்ப அரண்மனியிலிருந்த 100 ஆண்டுகள் பழமையான விலைமதிப்பற்ற சேகரிப்பு இங்கு கொண்டுவரப்பட்டது.

திவான் தேவ்டியில் 78 அறைகள் உள்ளன. இது ஐனா கானா, லக்கட் கோத்தா, சினி கானா, நிசாம் பாக் மற்றும் நூர் காஹால் போன்ற பல்வேறு கட்டிடங்களைக் கொண்டிருந்தது. அவை இப்போது இல்லை. அரண்மனை நுழைவாயில் மட்டும் இன்றும் உள்ளது. [2] [3]

சலார் ஜங் பரதாரி

மேற்கோள்கள்

தொகு
  1. "585 Rani Sarma, Diwan Deodi". பார்க்கப்பட்ட நாள் 2018-08-06.
  2. "Diwans gone, Deodhis die, squatters rule 'Kamaan'". https://timesofindia.indiatimes.com/city/hyderabad/diwans-gone-deodhis-die-squatters-rule-kamaan/articleshow/59675317.cms. 
  3. "From majestic to mundane". 2004-01-14. பார்க்கப்பட்ட நாள் 2018-08-10.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவான்_தேவ்டி&oldid=3843347" இலிருந்து மீள்விக்கப்பட்டது