திவ்யா கோகுல்நாத்

திவ்யா கோகுல்நாத் (Divya Gokulnath) ஓர் இந்திய தொழில் முனைவோர் மற்றும் கல்வியாளர் ஆவார், இவர் பைஜூஸ் என்ற கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநர் ஆவார். [1]

திவ்யா கோகுல்நாத்
Divya Gokulnath
திவ்யா கோகுல்நாத்
பிறப்பு1987 (அகவை 36–37)
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்ஆர்.வி. பொறியியல் கல்லூரி
பணி
  • Entrepreneur
  • Educator
செயற்பாட்டுக்
காலம்
2008–முதல்
பட்டம்பைச்சூசு இணைநிறுவனர் மற்றும் இயக்குனர்
வாழ்க்கைத்
துணை
பைஜு இரவீந்திரன்
பிள்ளைகள்2

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

திவ்யா கோகுல்நாத் பெங்களூரில் பிறந்தார். [2] இவரது தந்தை அப்பல்லோ மருத்துவமனைகளில் சிறுநீரக மருத்துவர் மற்றும் இவரது தாயார் தூர்தர்ஷன் ஒளிபரப்பு நிறுவனத்தில் நிரலாக்க நிர்வாகியாக இருந்தார். [2] [3] இவர் பெற்றோருக்கு ஒரே குழந்தை ஆவார். [4] குழந்தை பருவத்தில், இவருடைய தந்தை இவளுக்கு அறிவியலைக் கற்பித்தார். [5]

திவ்யா பிராங்க் அந்தோனி பொதுப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார் மற்றும் பெங்களூருவில் உள்ள ஆர்வி பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பம் இளங்கலை தொழில்நுட்பம் பயின்றார். [2] [6] 2007 இல் பட்டம் பெற்ற பிறகு, இவர் தனது ஜிஆர்இ தேர்வு தயாரிப்பு பாடத்தை கற்பிக்கும் பைஜு ரவீந்திரனை சந்தித்தார். [2] [7] வகுப்புகளுக்கு இடையில் இடைவேளையின் போது இவர் கேள்விகள் கேட்ட விதத்தினை வைத்து பைஜு இவளை ஆசிரியராக ஊக்குவித்தார். [2]

ஆசிரியராக இவரது வாழ்க்கை 2008 இல் தொடங்கியது [2] 21 வயதில். [8] [6] 2020 ஆம் ஆண்டில், இவர் பார்ச்சூன் இந்தியாவிடம் , "இது 100 மாணவர்களைக் கொண்ட ஓர் அரங்க பாணியிலான வகுப்பு. இவர்கள் என்னை விட ஓரிரு வயது இளையவர்கள், அதனால் முதிர்ச்சியடைந்தது போன்ற தோற்றத்திற்கான வகையில் நான் வகுப்பிற்கு சேலை அணிந்து சென்றேன். " என்று கூறினார் [2] இவரது கற்பித்தல் வாழ்க்கையில், இவர் கணிதம், ஆங்கிலம் மற்றும் தர்க்க ரீதியான பகுத்தறிவைக் கற்பித்தார். [2]

தொழில் வாழ்க்கை

தொகு

2011 ஆம் ஆண்டில், திவ்யா தனது கணவருடன் இணையதள கல்வி தளமான பைஜூவை இணைந்து நிறுவினார். [9] [10] [11] முதலில், நிறுவனம் பள்ளி கல்வியை ஆதரிக்க தனிப்பட்ட கல்வியை வழங்கியது, மேலும் 2015 இல், நிகழ்பட பாடங்களுடன் ஒரு இணையத்தள செயலியை அறிமுகப்படுத்தியது. [9] திவ்யா ஒரு ஆசிரியையாக நிகழ்படங்களில் தோன்றினார். [12] இந்தியாவில் கோவிட் -19 ஊரங்கின் போது, கோகுல்நாத் பயனர் அனுபவம், உள்ளடக்கம் மற்றும் நிறுவன விளம்பரம் ஆகியவற்றை நிர்வகித்தபோது, [2] பைஜுவின் இலவச அணுகலை வழங்கியது, மேலும் மார்ச் மற்றும் ஏப்ரல் 2020 இல் மொத்தம் 50 மில்லியனுக்கு 13.5 மில்லியன் பயனர்களைச் சேர்த்தது, [9] செப்டம்பர் 2020 க்குள் 70 மில்லியன் மாணவர்கள் மற்றும் 4.5 மில்லியன் சந்தாதாரர்களை அடைந்தது. [13]

ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, திவ்யா, இவரது கணவர் பைஜு ரவீந்திரன் மற்றும் இவரது சகோதரர் ரிஜு ரவீந்திரன் ஆகியோரின் மொத்த நிகர மதிப்பு $ 3.05B ஆகும். [10]

கல்வியின் எதிர்காலம், பெற்றோர்கள் மற்றும் STEM துறைகளில் பெண்களின் பங்கேற்பு உள்ளிட்ட கருப்பொருள்களில் திவ்யா இணையத்தளத்தில் எழுதி வருகிறார். [14] [15] இவர் பெண் தொழில்முனைவோருக்கான சவால்கள் பற்றி மிண்ட் ஸ்டார்டப் டயரீஸ் [16] மற்றும் இந்தியாவில் கல்வி தொழில்நுட்பம் பற்றி வோக் இந்தியாவில் பைஜு ரவீந்திரனுடனிணைந்து ஒரு கட்டுரையை எழுதினார். [17]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஏப்ரல் 2020 நிலவரப்படி, கோகுல்நாத் தனது இளைய மகன் உட்பட பதினோரு குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வந்தார்,[18] பின்னர் இவரது இரண்டாவது குழந்தை 2021 இல்பிறந்தது.[19] கோவிட் -19 தொற்றுநோய்க்கு முன், இவர் அலுவலகத்தில் நீண்ட நாட்கள் வேலை செய்தார், ஆனால் ஊரடங்குக் காலத்தின் போது, வீட்டிலிருந்து வேலைக்கு (ஒர்க் பிரம் ஹோம்) மாறினார். [20] 2021 ஆம் ஆண்டில், இவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தனது வழக்கமான நாளில் "மகனின் இணையத்தள வகுப்புகள், கூட்டங்கள், நிகழ்பட பாடங்களை பதிவு செய்தல் மற்றும் பிறந்த குழந்தையுடன் நேரத்தை செலவிடுதல்" ஆகியவை பணிகளைச் செய்வதாகக் கூறினார். [21]

சான்றுகள்

தொகு
  1. "Most Powerful Women of 2020 by Fortune India". Fortune India. https://www.fortuneindia.com/mpw/divya-gokulnath?year=2020. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 "Byju’s better half". Fortune India. https://www.fortuneindia.com/people/byjus-better-half/104850. 
  3. "Women Can Take Care And Take Charge. They Needn’t Have to Choose says Divya Gokulnath". SheThePeople.TV. https://www.shethepeople.tv/news/divya-gokulnath-byjus-interview/. 
  4. "Who is Divya Gokulnath : All You Need to Know About Byju's Co-founder". SheThePeople.TV. https://www.shethepeople.tv/videos/who-is-divya-gokulnath-byjus-co-founder-net-worth/amp/. 
  5. "Start-ups must take quick decisions: Byju's co-founder Divya Gokulnath". India Today. https://www.indiatoday.in/india-today-insight/story/start-ups-must-take-quick-decisions-byju-s-co-founder-divya-gokulnath-1785264-2021-03-30. 
  6. 6.0 6.1 "Divya Gokulnath: Educationist,Entrepreneur". Entrepreneur. https://www.entrepreneur.com/article/366761. 
  7. "With a wealth of over Rs 11,300 crore, meet India's youngest billionaire". TimesNowNews. https://www.timesnownews.com/business-economy/companies/article/with-a-wealth-of-over-rs-22000-crore-these-two-are-indias-youngest-billionaires/664128. 
  8. "International Women's Day 2021: Meet the 94-year-old whom Anand Mahindra termed 'Entrepreneur of the year'". DNA India. https://www.dnaindia.com/business/report-international-women-day-five-female-entrepreneur-94-year-old-entrepreneur-of-the-year-anand-mahindra-2879555. 
  9. 9.0 9.1 9.2 Gilchrist, Karen (June 9, 2020). "These millennials are reinventing the multibillion-dollar education industry during coronavirus". CNBC. https://www.cnbc.com/2020/06/08/edtech-how-schools-education-industry-is-changing-under-coronavirus.html. 
  10. 10.0 10.1 "India's Richest - #46 Byju Raveendran and Divya Gokulnath & family". Forbes. 10 July 2020. https://www.forbes.com/profile/byju-raveendran-and-divya-gokulnath-1/?list=india-billionaires&sh=5e1254e55bb3. 
  11. Sharma, Raktim (March 23, 2021). "10 inspiring Indian women in business and what's unique about them". Yahoo Finance. https://ca.news.yahoo.com/10-inspiring-indian-women-in-business-and-whats-unique-about-them-105952864.html. 
  12. Rai, Saritha (June 20, 2017). "Zuckerberg or Gates? Billionaires Try Opposite Paths for Online Education in India". Bloomberg. https://www.bloomberg.com/news/articles/2017-06-20/zuckerberg-or-gates-billionaires-try-opposites-paths-for-online-education-in-india. 
  13. "Roshni Nadar, Divya Gokulnath, Ameera Shah and Vinati Saraf — India’s most powerful businesswomen of 2020, according to Forbes". Business Insider India. September 23, 2020. https://www.businessinsider.in/business/news/list-of-indias-most-powerful-business-women-of-2020/slidelist/78277386.cms. 
  14. "LinkedIn Top Voices 2020: India". LinkedIn News. November 17, 2020. https://www.linkedin.com/pulse/linkedin-top-voices-2020-india-abhigyan-chand. 
  15. "10 Female Leaders On LinkedIn Who Are A Must-Follow for 2021". SheThePeople.TV. January 7, 2021. https://www.shethepeople.tv/home-top-video/10-female-leaders-on-linkedin-who-inspire-us/. 
  16. "Byju’s Divya Gokulnath: Why Women Entrepreneurs are missing from India’s Start-Up Story". LiveMint. April 5, 2021. https://www.livemint.com/videos/byjus-divya-gokulnath-why-women-entrepreneurs-are-missing-from-india-s-start-up-story-11617635183763.html. 
  17. "Byju Raveendran and Divya Gokulnath on India’s growth potential: "The power of education and technology can transform our country"". Vogue India. October 21, 2020. https://www.vogue.in/magazine-story/byju-raveendran-and-divya-gokulnath-on-indias-growth-potential-the-power-of-education-and-technology-can-transform-our-country/. 
  18. Phadnis, Shilpa (April 13, 2020). "How Women Executives Run Businesses From Home". Times of India. https://timesofindia.indiatimes.com/india/how-women-executives-run-business-from-home/articleshow/75116109.cms. 
  19. Narayanan, Jayashree (March 8, 2021). "‘Take time out for yourself’: Successful women entrepreneurs share mantra for work-life balance". The Indian Express. https://indianexpress.com/article/lifestyle/life-style/international-womens-day-take-time-out-women-entrepreneurs-work-life-balance-mental-health-7212714/. 
  20. . 
  21. . 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்யா_கோகுல்நாத்&oldid=3945718" இலிருந்து மீள்விக்கப்பட்டது