தி. மு. அப்துல் காதர்


தி. மு. அப்துல் காதர் (பிறப்பு: 18 சூன் 1948) சின்னமனூர் எனுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு இந்திய முஸ்லிம் எழுத்தாளர். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லுரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவருமாவார். இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், கூடவே கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் வனொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்களிப்பு செய்துள்ளவர். கடந்த சில வருடங்களாக ராஜ் தொலைக்காட்சியில் அகடவிகடம் எனும் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி அதனை நெறிப்படுத்தி நடத்தி வருகின்றார்.

தி. மு. அப்துல் காதர்
தமிழ்த்துறைத் தலைவர்,
இசுலாமியா கல்லூரி
பதவியில்
1991(?)–?
முன்னையவர்சை. அப்துல் ரகுமான்
பின்னவர்?
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 சூன் 1948 (1948-06-18) (அகவை 75)
சின்னமனூர், பிரிக்கப்படாத
மதுரை மாவட்டம்,
மதராசு மாகாணம், இந்திய மேலாட்சி (தற்போது
தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
குடியுரிமைஇந்தியர்
தேசியம்தமிழர்
தொழில்பேராசிரியர் (ஓய்வு), எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர்

எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் தொகு

  • மின்னல் திரிகள்
  • கரந்த வாசல்
  • மீராவின் கனவுகள்
  • கம்பனும் தமிழும்

உட்பட 15க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார்.

பெற்ற கௌரவங்கள் தொகு

  • கவிமாமணி இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் பட்டம்

உசாத்துணை தொகு

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._மு._அப்துல்_காதர்&oldid=3871991" இலிருந்து மீள்விக்கப்பட்டது