தி அன்னோண் சிட்டிசன்

டபுள்யூ. எச் ஆடன் இயற்றிய 1939 ஆண்டு ஆங்கிலக் கவிதை

தி அன்னோண் சிட்டிசன் (The Unknown Citizen) டபிள்யூ. எச். ஆதன் என்ற கவிஞரால் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த சிறிது காலத்திலேயே எழுதிய கவிதை 1939 இல் எழுதப்பட்டதாகும். இந்த கவிதை முதன் முதலில் ஜனவரி 6, 1940 இல் "தி நியூ யார்க்" இதழில் வெளியிடப்பட்டது. மேலும் முதலில் ஆதனின் தொகுப்பான அதர் டைம் ( ரேண்டம் ஹவுஸ், 1940) இல் புத்தக வடிவில் வெளிவந்தது.[1] இந்த கவிதை ஒரு மனிதனை அடையாளம் காண எண்ணை ("JS / 07 / M / 378") மட்டுமே பயன் படுத்துகின்றனர். கவிஞர் அந்த மனிதனை பற்றி கூறும் போது, அவர் ஒரு சராசரி வாழ்வையே வாழ்ந்து வந்தார் என்று குறிப்பிடுகிறார். இந்த கவிதை தனித்துவத்தின் இழப்பில் தரநிலையை அங்கதமாக சித்தரித்து காட்டுகிறது.[2] இக்கவிதை மறைமுகமாக எதிர்காலத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் அரசு நிறுவனத்தின் வேலையாகும். நவீன அதிகாரத்துவப் போக்குகள் குடிமக்கள் தன்னிச்சையான எண்கள் மற்றும் எழுத்துக்களால் அறியப்படும் நிலையை அடைந்துவிட்டன. தனிப்பட்ட பெயர்கள் அல்ல.

விளக்கம்

தொகு

ஆதனின் "தெரியாத குடிமகன்" ஒரு டிஸ்டோபியன் அறிக்கையின் வடிவத்தின் மூலம், தெரியாத ஒரு மனிதனின் வாழ்க்கையை விவரிக்கிறது.[3]

அரசாங்க அமைப்புகளால் மனிதனை "சராசரியான குடிமகனாக" விவரிக்கப்படுவதன் மூலம் குடிமக்களுடனான தரநிலைத்தன்மையையும் நவீன அரசு உறவுகளையும் இந்த கவிதை விமர்சிக்கிறது. கவிதைகளின் கடைசி வரிகள் அவர் "சுதந்திரமாக" அல்லது "மகிழ்ச்சியாக" இருந்தரா என்பதைப் பற்றிய கேள்விகள் நிராகரிக்கபட்டது. ஏனென்றால் அவரது வாழ்க்கைத் தீர்ப்பை புரிந்து கொள்ள மாநிலத்தால் பயன்படுத்தப்படும் புள்ளிவிவர முறையால் முடியாது.[4]

சான்றுகள்

தொகு
  1. Auden, W. H. (1942). "The Unknown Citizen". Another Time. Random House. Archived from the original on January 16, 2013. பார்க்கப்பட்ட நாள் February 28, 2013.
  2. Haffenden, John. "W.H. Auden." Routledge, 1983.
  3. Analysis of The Unknown Man by W.H. Auden
  4. Shmoop Editorial Team (11 November 2008). "Home (*) Poetry (*) The Unknown Citizen (*) Introduction". Shmoop University, Inc. Archived from the original on November 9, 2013. பார்க்கப்பட்ட நாள் November 8, 2013.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_அன்னோண்_சிட்டிசன்&oldid=3727726" இலிருந்து மீள்விக்கப்பட்டது